அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 29

  • 14

“ஆமா இவங்கல்லாம் யாரு?” என்று நயோமி ரியூகி மற்றும் சின் கே வை காட்டி கேட்டாள்.

“இது ரியூகி, இது சின் கே நமக்கு உதவி பண்ண மாஸ்டர் ஷா அனுப்பி வெச்சாரு.” என்று கோரின் சொல்ல,

“என்னை மட்டும் தான் அனுப்பினார். இவனை இல்லை.” என்று ரியூகி சொல்ல அவனுக்கு சின் கே மீது இருந்த வெறுப்பை குறிப்பாலே உணர்ந்தனர் மூன்று பெண்களும்.

**************

“ஐயையோ அண்ணனும் மத்தவங்களும் வராங்க. நான் போறேன்.” என்றாள் சோஃபி.

“இரு இரு எங்க வராங்க. யாரும் இல்லியே!” என்றான் கியோன்.

அவள் பதறியடித்து கொண்டு அவள் அறைக்கு ஓடிவிட்டாள். அவள் சொன்னது போலவே தூரத்தில் இவர்கள் வருவது கண்டு கியோன் ஆச்சர்யப்பட்டான்.

“இவளுக்கு எப்படி தெரிஞ்சது?”

அவர்கள் வந்து சேர்ந்ததும் கியோன் மற்றும் சோஃபி இருவரும் இளவரசி நயோமியை வரவேற்றனர். அலீஸியா அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். சட்டென ரியூகி,

“உனக்கு என்னாச்சு சோஃபி. இங்கிருந்து போக முன்னாடி எதுக்கு அப்படி கத்தினே?” என்று கேட்டான்.

“என்ன?”

“அதான் காதை மூடிக்கொண்டு…”

“ஓஹ்… தெரியல அண்ணா! திடீரென ஏதோ பெரிய மிருகம் அலறுவது போல கேட்டு கிட்டே இருந்தது” என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

“அதுமட்டுமின்றி நீங்க வர்றதுக்கு பத்து நிமிடம் முன்னாடியே நீங்க வர்ற சத்தம் கேக்குறதா சொன்னா.” என்றான் கியோன்.

“நான் அப்பவே நினைச்சேன். சோஃபி ஒன்னும் சாதாரணமான பொண்ணு இல்ல.” என்றாள் கோரின்.

“என்ன சொல்றீங்க இளவரசி?”

“உனக்கு கிடைச்சிருக்குற சக்தி இப்போதைக்கு உனக்கு ஆபத்து தான்..”

“எனக்கு ஒண்ணுமே புரியல. என்ன சக்தி. என்ன ஆபத்து?”

“ஒரு குறிப்பிட்ட மைல் தூரம் வரைக்கும் கேக்குற எல்லா சத்தங்களும் உனக்கு கேட்கும். ஆனா எல்லா சத்தங்களையும் ஒரே நேரத்தில் கேட்கும் போது உனக்கு தானே பிரச்சினை.” என்றாள் கோரின்.

“ஆமா காது வெடிச்சிடும்” என்றான் கியோன்.

“கிண்டலா நான் என்ன பண்ணுறது இப்போ.”

“இரு…” என்ற கோரின் சோபி உடலில் கை வைத்து ஏதோ செய்ய,

“இப்போ என்ன பண்ணினீங்க?”

“இனி நீயாவே வலிந்து கேட்டாலே ஒழிய வேற எந்த சத்தங்களும் கேட்காது.” என்றாள் கோரின்.

“ரொம்ப நன்றி இளவரசி”

“ஒரு பிரச்சினை தீர்ந்ததா? ஹலோ நான் நயோமி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் நயோமி.

அடுத்து எல்லோரும் இரவு உணவை உண்டுவிட்டு அவரவர் அறைக்கு விரைந்தனர். ரியூகி அறை தாண்டி அலைஸ் உடையது அது தாண்டி சின் உடையது. ரியூகிக்கு குட் நைட் சொல்லிவிட்டு சின் கூட அவள் செல்லும் போது பார்த்து கொண்டே இருந்தான் ரியூகி.

விடிந்தது.

எல்லோரும் தயாராகி அடுத்த பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்க கோரின் வந்து,

“மேற்கு நோக்கி நாம போக போறோம் என்றாள்.”

“குதிரைகள் தயார்!” என்று வந்து நின்றான் கியோன்.

கறுப்பு நிற குதிரையில் ரியூகியும் அலைசும் வெண்ணிற குதிரையில் சின் மற்றும் நயோமி. சாக்லேட் நிறக்குதிரையில் கியோனும் சோபியும். செந்நிற குதிரையில் கோரின். இவ்வாறாக இவர்கள் பயணத்துக்கு தயாரான போது சின் கே,

“அந்தப்பக்கம் இருக்குற ஊரோட பெயர் சில்வேனியா. நான் அடிக்கடி அங்க போறதுண்டு. என்னோட நெருங்கிய நண்பன் லீ அங்கதான் இருக்கான். நாம அவன் வீட்டிலேயே தங்கிக்கலாம். சரியா?” என்று சொன்னான்.

“உன்னோட உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி சின் கே.” என்று அலைஸ் சொன்னாள்.

“எதுக்கு நன்றியெல்லாம். இது எனக்கும் கடமைதான்” என்றுவிட்டு ரியூகியை பார்த்தான். அவன் முகத்தில் ஈ ஆடவில்லை.

தொடரும்……
ALF. Sanfara.

“ஆமா இவங்கல்லாம் யாரு?” என்று நயோமி ரியூகி மற்றும் சின் கே வை காட்டி கேட்டாள். “இது ரியூகி, இது சின் கே நமக்கு உதவி பண்ண மாஸ்டர் ஷா அனுப்பி வெச்சாரு.” என்று…

“ஆமா இவங்கல்லாம் யாரு?” என்று நயோமி ரியூகி மற்றும் சின் கே வை காட்டி கேட்டாள். “இது ரியூகி, இது சின் கே நமக்கு உதவி பண்ண மாஸ்டர் ஷா அனுப்பி வெச்சாரு.” என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *