அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 31

  • 15

நுரீகோ அவளது கணவனின் சகோதரிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

“எங்க பெயர் எல்லாம் சீக்கிரமா நியாபகம் வெச்சு கிட்டீங்க.” என்றாள் சோஃபி.

“ஆமா! எங்க அண்ணனை எங்கே பார்த்தீங்க. எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?” என்று கேட்டாள் அலைஸ்.

நானும் என்னோட நண்பிகளும் பூப்பறிப்பதற்காக ஒரு தோட்டத்துக்கு போய் இருந்தோம். அப்போ மாஸ்டர் கூடோவுக்காக தேன் எடுப்பதற்காக லீயும், சின் கே வும் வந்திருந்தாங்க. அவங்க ரெண்டுபேரையும் பார்த்து என்னோட நண்பிகள் எல்லோரும் ஓடிட்டாங்க… மருந்துக்காக எனக்கு அந்த பூக்கள் ரொம்ப அவசியப்பட்டதால நான் அங்கேயே இருந்தேன். ஒரு கோப்பை தேன் நிரம்பியதும் சின் அதை எடுத்துட்டு போயிட்டாரு. அந்த சமயத்தில் ஷாடோ ஏன்ஜெல்கள் வந்து லீயை தாக்கின. அவரும் தன்னோட சக்திகளை பயன்படுத்தி அவற்றோட சண்டை போட்டார். இது எல்லாத்தையும் ஒரு மரத்துக்கு பின்னாடி இருந்து நான் பார்த்துட்டு இருந்தேன்.

என்றாள்.

“என்னது சக்தியா?அண்ணனுக்கா?” என்று நயோமி கேட்க,

“ஆமா! அவருக்கு புவியீர்ப்பு விசையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சக்தி இருந்தது. எனக்கும் அது அப்போதான் தெரிய வந்தது. ஆனா எதிர்பாரா விதமாக லீ மயங்கினதும் அதுங்க போயிடுச்சு… நான்தான் அவரை வீட்டுக்கு கொண்டுபோனேன் சிகிச்சையும் பண்ணேன்.”

“நீங்க டாக்டரா?” என அலைஸ் கேட்டாள்.

“ஆமா… எனக்கு அம்மா மட்டும் தான் மயக்கம் தெளிஞ்சதும் அவர் நன்றி சொல்லிட்டு கிளம்பிட்டாரு.”

“அப்பறம் என்னாச்சு… அடுத்து எங்க சந்தித்து கொண்டீர்கள்?”

“நாங்க அடிக்கடி தோட்டத்தில் சந்திச்சி கிட்டோம். அது காதலா மாறிச்சி… சின் எங்களுக்கு ரொம்பவும் உதவி பண்ணாரு. எங்களுக்காக என்னோட அம்மாகிட்டயும் மாஸ்டர் கூடோ கிட்டயும் மன்றாடி எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணாரு. இப்போ மூணு வருஷம் ஆகுது. மாஸ்டர் எங்கோ போயிட்டாரு. இப்போ நான்… நான்…” என்று நுரீகோ தடுமாற,

“ஓகே ஓகே. புரியுது… எத்துனை மாசம் இருக்கு குட்டி இளவரசன் பிறக்க?” என்று கேட்டாள் கோரின்.

“ஹேய் இளவரசி என்னு சொல்லு” என்றாள் நயோமி

“இல்ல ஆண் குழந்தை” என அலைஸ் ஒரு பக்கமும் பெண் குழந்தை என நயோமி ஒரு பக்கமும் ஆளுக்காள் சண்டையிட நுரீகோ சமைப்பதற்காக லேசாக கழன்று விட்டாள்.

“ஹேய் உங்க சண்டையை அப்பறம் போட்டுக்கலாம். உங்க அண்ணி சமைக்க போறாங்க. வாங்க ஹெல்ப் பண்ணலாம்.” என்றாள் சோஃபி.

வெகு நேரம் கழித்து லீ மற்றும் சின் உள்ளே வரவும் ரியூகி குளித்து விட்டு வரவும் சரியாக இருந்தது.

“ரியூகி வா சாப்பிடலாம்.” என லீ அழைத்தான்.

“சாப்பாடா… எங்க?” என்று கியோன் வந்து நின்றான்.

“அலையாத டா… எல்லோரும் சாப்பிடத்தான் போறோம்.” என்றாள் சோஃபி.

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கையில் ரியூகி பேச்சை ஆரம்பித்தான்.

எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க. அடுத்த சூரிய கிரகணத்துக்கு இன்னும் பத்து நாள் இருக்கு அதுக்குள்ள நாம எல்லோரும் அரண்மனைக்குள் போயாகனும். அதனாலே இப்போவே கிளம்பறது தான் சரி.

என்றான்.

“ஆமா ரியூகி சொல்றது தான் நாம இன்னிக்கே போயாகனும்.” என்றாள் கோரின்.

“அப்போ சரி வடக்கு திசையில் பயணம் செஞ்சா ஏழு நாளிலேயே போய் சேர்ந்திடலாம்.” என்றான் நாகடோ.

எல்லோரும் ஒருமித்து,

“வடக்கா”

“அது ஆபத்தானது அங்கதான் ஷாடோ ஏஞ்செல்களும் ட்ராகன்களும் வாழுது.”

“வேற வழி இல்லை. இங்கிருந்து வேற எந்த வழியால் போனாலும் பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகும் போய் சேர அதுக்குள்ள சூரிய கிரகணம் முடிஞ்சி போய் இருக்கும்.” என்றான் நாகடோ. எல்லோரும் என்ன செய்வது என தெரியாது சிந்தித்தனர்.

தொடரும்……
ALF. Sanfara.

 

நுரீகோ அவளது கணவனின் சகோதரிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். “எங்க பெயர் எல்லாம் சீக்கிரமா நியாபகம் வெச்சு கிட்டீங்க.” என்றாள் சோஃபி. “ஆமா! எங்க அண்ணனை எங்கே பார்த்தீங்க. எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?” என்று…

நுரீகோ அவளது கணவனின் சகோதரிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். “எங்க பெயர் எல்லாம் சீக்கிரமா நியாபகம் வெச்சு கிட்டீங்க.” என்றாள் சோஃபி. “ஆமா! எங்க அண்ணனை எங்கே பார்த்தீங்க. எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?” என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *