அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 33

  • 11

உள்ளே கூடாரத்துக்குள் பெண்கள் தூங்க வெளியே சற்று இடைவெளி விட்டு விட்டு ஏனையவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் கடந்து வந்து அலைஸ் ரியூகி அருகில் வர இருவருமாக அருகில் கேட்ட அருவியோசையை நோக்கி நடந்தார்கள். அது ஒரு அருவி அருகே ஒரு குளம். அதன் கரையில் அமர்ந்து கொண்டு சிறு சிறு கற்களை குளத்தில் வீசியவாறே முழு நிலவின் விம்பத்தை கலைத்து கொண்டு இருந்தாள் அலைஸ்.

“ஏதோ பேசணும் என்னு வந்துட்டு சும்மாவே இருக்க… ஏதும் கவலையா? ஏன் உன் முகம் இப்படி இருக்கு?” என்று கேட்டான் ரியூகி.

“எனக்கு என்னோட பிரண்ட்ஸ் நியாபகமாவே இருக்கு… அவங்கள எல்லாம் விட்டுட்டு வந்து எவ்வளவு நாள் இருக்கும் ரியூகி… ஒரு வார்த்தை கூட சொல்லாம புறப்பட்டு வந்துட்டேன்.” என கேட்டு கொண்டே கற்களை வீசினாள்.

“கிட்டத்தட்ட ஒரு மாசம் இருக்கும் அலைஸ்.” என்று அவன் சொன்னதும் கற்களை வீசுவதை நிறுத்தி விட்டாள். அவள் முகத்தில் சோகம் படர்வதை கண்டுகொண்டான்.

“அவங்க மூணுபேரும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணுறேன். என்னை காணும் என்னு அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க.” என்றாள்.

“ஹேய்… இது எல்லாம் முடிஞ்சதும் நம்ம மாஸ்டர் கிட்ட சொல்லி உன்னோட நண்பிகளை போய் பார்த்துட்டு வந்துடலாம்.” என்று சமாதானம் செய்தான்.

“ரியூகி!”

“என்ன?”

“என்னோட அம்மா அப்பாவை நீ பார்த்து இருக்கியா? அவங்க நல்லவங்கதானே.” என மீண்டும் கேட்டாள்.

“ஓஹ் பார்த்து இருக்கேன். நாங்க பயிற்சி எடுத்த்துக்கொள்ளும் போது பார்க்க வருவாங்க… அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்க மாதிரி ஒரு அப்பா அம்மா கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும்.” என்று சொல்லிக்கொண்டே அவள் தலையை வருடினான். அவளும் அவன் மடியில் தலை சாய்த்தபடியே தூங்கினாள்.

“ஓஹ்… தூங்கிட்டியா.” என்றவன் அவள் தூங்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க அப்படியே விடியலின் துவக்கம் ஆரம்பித்தது. கேம்பில் இருந்து கியோனும் சோஃபியும் பதறியடித்து கொண்டு ஓடி வந்தனர்.

“அலைசையும், ரியூகியையும் காணோம்..”

“எங்க போனங்க?” என்று லீ கேட்கும் போதே இருவரும் அசடு வழிய வந்து நின்றார்கள்.

“ஒஹ்ஹ் தேடிட்டு இருந்தீங்களா?”

“பின்ன இல்லியா நாங்க எவ்வளவு பயந்துட்டோம்.” என்றாள் சோஃபி.

“ஸாரி சோஃபி” அப்போது கையில் சிலவகை பழங்களுடன் வந்து சேர்ந்த சின்,

“என்ன ஒரே ஸாரி மழை பொழியுது… அலைஸோடதா?” என கேட்டான்.

“சின் கே!” என அலைஸ் மிரட்ட,

“இவற்றை சாப்பிட்டுட்டு போகலாம்” என்று சொல்லி எல்லோருக்கும் ஒவ்வொன்று கொடுத்தான்.

“இதை நாங்க எப்படி நம்பி சாப்பிறது?” என கேட்டான் ரியூகி.

“வேண்டான்னா சொல்லிடு உன் பங்கையும் சேர்த்து நானே சாப்பிர்றேன்.” என சின் கே சொல்ல எல்லோரும் கொஞ்சம் சிரித்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர்.

*********

ஷாடோ ஏஞ்செல் உலகில்…

“முட்டாள் எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி கோட்டை விட்டுட்டு வந்து என் முன்னாடி நிற்பே?” என்று சோஜோ போபியை எரித்து சாம்பலாக்கினான்.

“சாவு… குவண்டலை வர சொல்லுங்க.” என்று கட்டளை இட்டதும் கொஞ்ச நேரத்தில் வலது கண்ணில் பெரிய காயத்துடன் அதை ஒரு துண்டு துணியால் கட்டி மறைத்தபடி ஒருவன் வந்து நின்றான்.

“சொல்லுங்க கிங் சோஜோ…”

“இங்க என்னாச்சுன்னு பார்த்தாய் தானே. சீக்கிரம் போய் சூரிய கிரகணத்துக்குள் அவங்கள கொண்டுவா!” என்றான்.

உடனே குவண்டல் அங்கிருந்து மறைந்தான்.

தொடரும்……
ALF. Sanfara.

உள்ளே கூடாரத்துக்குள் பெண்கள் தூங்க வெளியே சற்று இடைவெளி விட்டு விட்டு ஏனையவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் கடந்து வந்து அலைஸ் ரியூகி அருகில் வர இருவருமாக அருகில் கேட்ட அருவியோசையை நோக்கி…

உள்ளே கூடாரத்துக்குள் பெண்கள் தூங்க வெளியே சற்று இடைவெளி விட்டு விட்டு ஏனையவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் கடந்து வந்து அலைஸ் ரியூகி அருகில் வர இருவருமாக அருகில் கேட்ட அருவியோசையை நோக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *