அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 35

  • 14

அலைசையும் தூக்கி கொண்டே பயணத்தை தொடர்ந்து இருந்தனர் ரியூகி குழுவினர். அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும்,

“கவலைப்பட வேண்டாம் அலைஸ். கூடிய விரைவில் நயோமியும் சின் கே வும் வந்துடுவாங்க.” என ரியூகி அவளை தேற்றினான்.

“நடந்த இந்த பிரச்சினையால ஒரு நாளை நாம வேஸ்ட் பண்ணிட்டோம் .”என்றாள் சோஃபி.

“சரிதான். இன்னும் எவ்வளவு வேகமா போக முடியுமோ அவ்வளவு வேகமாக சென்றால் தான் மரண பாலத்தை அடைய முடியும்.”என்றாள் கோரின்.

**************

மறுபுறம் சின் அங்கு எல்லா இடங்களிலும் சிறைகளில் கூட நயோமியை தேடினான். எதேச்சையாக ஒரு யோசனை உதிக்க உள்ளே சென்று படுக்கை அறையை தேடினான். அவன் நினைத்தது போலவே உள்ளே நயோமி வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் கிடந்தாள்.

“பிரின்சஸ் நயோமி”

என்று அதிர்ச்சியில் சின் உள்ளே சென்று கட்டுகளை அவிழ்க்க முயன்ற போது அவ்வளவு நேரமும் அங்கு முகம் பார்க்கும் கண்ணாடியின் உருவத்தில் இருந்த குவெண்டல் சுய உருவுக்கு வந்தான்.

“வேணும் என்றால் நான் உனக்கு உதவட்டுமா?” என்றான்.

“நீ… நீ… நீதானே இவளை கடத்தியது. உன்னை…”

சின் தனது விரல்களை கொண்டு அவனை தாக்க நூலிழையில் அவன் தப்பி விட்டான். இதற்குள் நயோமி கட்டுகளை அவிழ்த்து கொண்டாள். ஒவ்வொரு முறையும் அவன் ஒவ்வொரு உருவத்துக்கு மாறி தப்பித்து கொண்டான். கூடவே தாக்கவும் செய்தான். ஒருமுறை நீராக ,மறுமுறை வலையாக. இப்படியே அம்புகளாக மாறிய போது நயோமி சிலவற்றை எரித்தாள். காயங்களோடு சுய உருவுக்கு வந்தான். அவனால் எரிகாயங்களை தாங்க முடிய வில்லை.

“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி பார்திருப்பே. இப்போ நான் தண்ணி ஊத்துறேன் எப்படி இருக்குன்னு சொல்லு..” என்ற நயோமி அவன் மீது தண்ணீரை வார்க்க வேதனையில் துடியாய் துடித்தான். அதற்குள் சின் நயோமியை பிடித்து இழுத்து,

“வாங்க. மத்தவங்களாம் வந்துடுவாங்க” என்று கூறி இருவரும் தப்பித்து ஓட.

“உன்னை நான் சும்மா விடமாட்டேன் சின்…” என்று குவெண்டல் கத்தினான்.

கோட்டையை விட்டு தப்பி காட்டுக்குள் வந்ததும் .கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டனர்.

“ஹேய் பிரின்சஸ் எப்படி அவன் கிட்ட ஏமாந்தீங்க..?” என கேட்டான் சின்.

“எனக்கு ரோஜா என்றால் பிடிக்கும்.. அவன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கிட்டான்.”

“இனியாவது ஜாக்கிரதையாக இருங்க நயோமி”என்றான்.

“அதான் காப்பாற்ற நீங்க இருக்கீங்களே!” என்று சொல்லி கொண்டே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். திடீரென அவள் அவ்வாறு நடந்து கொண்டதால் அவன் பின்வாங்கினான்.

“வோ… ஓ… என்ன இப்படி பதுங்குறீங்க… நான் சும்மா உங்களுக்கு தாங்க்ஸ் பண்ணேன்.” என்றாள்.

“ஆஹ்… உங்க ஊருல இப்படி தான் பண்ணுவாங்களா? சரி எப்படி நம்ம கோன்மன் உலகத்துக்கு போறது?” என கேட்டான்.

“என்னால முடியும் என்று நினைக்குறேன்.” என்றவள் அவளது சக்திகளை பயன்படுத்தி கான்மன் உலகை மனதில் வருவித்து கொண்டாள்.

“என் கையை பிடிச்சிக்கங்க. நாம ரெண்டு பேரும் இப்போ நம்ம உலகத்துக்கு போக போறோம். ஆனா காட்டில் எந்த திசையில் வேணாலும் போய் சேரலாம்.” என்றவள் அந்த வார்த்தையை உச்சரித்ததும் இருவரும் காட்டில் ஓரிடத்தில் தோன்றினார்கள்.

“ஓகே. இது எந்த இடம்?”

“இந்த திசையில் சென்றால் நாமளும் மரண பாலத்தை அடைய முடியும்.” என்றான் சின் .இருவரும் பயணிக்க ஆரம்பித்தனர்.

தொடரும்……
ALF. Sanfara.

அலைசையும் தூக்கி கொண்டே பயணத்தை தொடர்ந்து இருந்தனர் ரியூகி குழுவினர். அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும், “கவலைப்பட வேண்டாம் அலைஸ். கூடிய விரைவில் நயோமியும் சின் கே வும் வந்துடுவாங்க.” என ரியூகி அவளை…

அலைசையும் தூக்கி கொண்டே பயணத்தை தொடர்ந்து இருந்தனர் ரியூகி குழுவினர். அவள் மயக்கம் தெளிந்து எழுந்ததும், “கவலைப்பட வேண்டாம் அலைஸ். கூடிய விரைவில் நயோமியும் சின் கே வும் வந்துடுவாங்க.” என ரியூகி அவளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *