அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 43

  • 10

“ஹே ஹே அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை தியாகி ஆக விடமாட்டேன்.”

என்ற ரியூகி தனது சக்தியால் தூணை தூக்கி நிறுத்தினான். ஓடிவந்து நயோமி சின் கே வை அணைத்து கொண்டாள். அவனுக்குரிய முதலுதவிகளை சோஃபி செய்தாள். கியோன் தூணில் ஏறி பளிங்கு கல்லை பழையபடி வைத்தான். நான்கு பிள்ளைகளும் நான்கு மூலையில் நிற்க அவர்கள் ஒவ்வொருவரின் உடலில் இருந்தும் ஒளி தோன்றியது. அது நேராக பளிங்கு கல்லை அடைந்தது. நான்கு ஒளியையும் ஒன்றிணைத்து அந்த கல் ஒரே ஒரு பாரிய ஒளியை வானுக்கு அனுப்பியது. அது சூரியனை மறைத்திருந்த நிலவை வெளிச்சமாக்கியது. அந்த நிலவு மற்றோரு வெண்ணிற ஒளியை அலீஸியாவுக்கு அனுப்ப நான்கு சகோதரர்களும் ஒன்றிணைந்து கூறினார்கள்.

“இந்த கான்மன் உலகும் அதில் வாழும் மக்களும் என்றென்றும் இளமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஏனைய உலகங்களோட எந்த தீய தொந்தரவும் இனி இருக்க கூடாது.” என்று பிரார்த்தித்தார்கள்.

அதை அந்த கடவுள் ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக அலீஸியா உடலில் இருந்து வட்ட வட்டமாக பாதுகாப்பு வளையங்கள் தோன்றி கான்மன் உலகை சுற்றி பாதுகாப்பு வளையமிட்டது. நிம்மதி பெருமூச்சு விட்டார் மாஸ்டர் ஷா.

“இனி எந்த பிரச்சினையும் கிடையாது.”

என்று சொல்ல எல்லோரும் அரண்மனைக்குள் ஓடினார்கள். அரசருக்கு என்னவாயிற்று என்று பார்க்க. அங்கே அரசருக்கு யாரோ ஒருவர் மருத்துவம் பார்த்து கொண்டிருந்தார். அவரை வியப்புடன் பார்த்த லீயும், சின் கேவும் ஒருமித்து,

“மாஸ்டர் கூடோ!”

என்று விளிக்க சோஃபியும் ரியூகியும் ஒருவர் முகத்தை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு ஓடிப்போய் அவரை அணைத்து கொண்டனர்.

“என்னோட பசங்களுக்கு ஒன்னும் ஆகாமல் இவ்வளவு நாள் வளர்த்ததற்கு ரொம்ப நன்றி ஷா மன்னருக்கு ஒன்னும் இல்ல அவர் கொஞ்ச நேரத்தில் எழும்பிடுவார்” என்றார் கூடோ.

“இனி என்ன கொண்டாட்டம் தான்.” என்று கத்தினான் கியோன்.

பீட்டர் நாகடோவை முடிக்குரிய மன்னனாக முடிசூட்டினார். அதே போல் அனைவரதும் திருமணங்களுக்கு ஏற்பாடும் செய்தார்.

“மேடம் என்ன ஒருமாதிரி டல்லா இருக்கீங்க?” என ரியூகி அலைஸிடம் கேட்டான்.

“ரியூகி என்னால இனி என்னோட நண்பர்களை பார்க்கவே முடியாதா?” என்று கவலையுடன் கேட்டாள் அலைஸ்.

“என்ன நீ இப்படி சொல்லிட்டே… நான் நம்ம ஹனிமூனையே அங்க தான் என்னு திட்டம் போட்டிருக்கேன்.” என்று ரியூகி சொல்ல அவன் காதை திருக்கியவளாய்,

“இன்னும் கல்யாணமே ஆகலை அதுக்குள்ள சாருக்கு ஹனிமூன் ஆசையெல்லாம் வந்திடுச்சா” என்று கேட்டாள்.

“ஏய் ஏய் விடுடி வலிக்குது.” என்றான் ரியூகி.

திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேற கோரின் அனைத்தையும் சரிபார்த்து கொண்டு முன்னின்று செய்து கொண்டிருந்தாள். திடீரென வெளியே ஒரு சத்தம் கேட்டது. அது ஒரு கலவரமாக இருக்குமளவுக்கு காவலாளிகள் அவனை எவ்வளவு சொல்லியும் உள்ளே விடவில்லை.

“அது யாருன்னு பாருங்க…?”

“நீ யாரு எதுக்காக இப்படி வந்து கலாட்டா பண்ணுறே..?” என பீட்டர் கேட்டார்.

“நான் கோரினை உடனே பார்க்க வேண்டும். என்னை உள்ளே விடுங்க!” என்றான் அவன்.

“யாரிது…? நம்ம அக்கா பெயரை இப்படி உரிமையோடு சொல்றது…”

என இவர்கள் குழம்ப அப்போது தான் கையில் ஒரு வெள்ளி தட்டுடன் வந்த கோரின் இவனை கண்டு தட்டை கீழே விட்டாள். எல்லோரும் சத்தம் வந்த திசையில் திரும்ப வந்தவனோ,

“கடைசியா நான் உன்னை கண்டுபிடிச்சிட்டேன் கோரின்.” என்றான் மலர்ந்த முகத்துடன்.

“இளவரசர் யோரி நீங்க…”

“இளவரசரா?” என எல்லோரும் வியப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்து கொண்டு இருந்தனர்.

தொடரும்……
ALF. Sanfara.

 

“ஹே ஹே அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை தியாகி ஆக விடமாட்டேன்.” என்ற ரியூகி தனது சக்தியால் தூணை தூக்கி நிறுத்தினான். ஓடிவந்து நயோமி சின் கே வை அணைத்து கொண்டாள். அவனுக்குரிய முதலுதவிகளை சோஃபி…

“ஹே ஹே அவ்வளவு சீக்கிரத்தில் உன்னை தியாகி ஆக விடமாட்டேன்.” என்ற ரியூகி தனது சக்தியால் தூணை தூக்கி நிறுத்தினான். ஓடிவந்து நயோமி சின் கே வை அணைத்து கொண்டாள். அவனுக்குரிய முதலுதவிகளை சோஃபி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *