அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 39

  • 12

இரவின் நடுப்பகுதி

“கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க நுரீகோ. எல்லாம் சரியாகிடும்.” என்ற சோஃபியின் ஆறுதல் வார்த்தைகளில் வலியை கொஞ்சம் மறந்தாள் நுரீகோ.

இருந்தும் பிரசவ வலி என்பது பெண்களுக்கு மறுபிறப்புக்கு சமனானது. அடக்க முடியாமல் அலரலோட நுரீகோ பிள்ளைகளை பெற்று எடுத்தாள்.

“சோஃபி! நான் உள்ளே வரலாமா?”

“வரலாம் வரலாம்.” என்றதும் திரையை விலக்கி உள்ளே சென்றவன் அதிர்ச்சி அடைந்தான்.

“இரட்டை குழந்தைகளா?”

“வாயை மூடிட்டு வந்து உதவி பண்ணு.” என்ற சோஃபியின் அதட்டலில் பம்பரமாக வேண்டிய உதவிகளை செய்து முடித்தான் கியோன்.

“இப்போ சந்தோசமா நுரீகோ? உங்களுக்கு இரட்டை அதிஷ்டம் பிறந்திருக்கு. ஒரு ஆணும் ஒரு பெண்ணும்” என்றாள் சோஃபி.

“நாம இப்பவே புறப்படுவோம் அரண்மனைக்கு.” என்றாள் மகிழ்ச்சியுடன் நுரீகோ.

**************************************

விடியற்காலையில் அலைசும் குழுவினரும் அரண்மனை வாயிலை அடைந்தனர். மாஸ்டர் ஷாவின் ஏற்பாடுகளின் பெயரில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை மரியாதையுடன் அரண்மனையே ஆரவாரம் பூண்டது. இளவரசரும் இளவரசிகளும் உள்ளே சென்றதும் அரசரும் அரசியும் ஓடிவந்து கட்டியணைத்து கொண்டனர்.. பிள்ளைகளை பார்த்து அழுது தீர்த்தனர் இருவரும்.

“அதுதான் நாங்க வந்திட்டோமே. இனி எதுக்காகவும் நீங்க அழக்கூடாது.” என்று சொல்லி அலைஸ் அவர்களை தேற்றினாள்.

ரியூகி மாஸ்டர் கிட்ட வந்து அவரை வணங்கி ,

“நான் என்னோட பயிற்சியில வென்றுவிட்டேன் மாஸ்டர்” என்றான்.

“இல்ல இப்போது கூட நீ தோத்திட்டே.” என்றார் ஷா.

“என்ன இல்லியா… அப்போ…”

“சூரிய கிரகணம் நாளைக்கு தான் ரியூகி இன்னிக்கி என்னு பொய் சொன்னேன்.” என்றார். ரியூகி கடுப்பாவதை உணர்ந்து மாஸ்டர் ஷா ,

“சரி சரி… போதும் நீதான் ஜெயிச்சது…. சரி கியோன் என்ன ஆனான்?”

ரியூகி விஷயத்தை சொல்லி முடிக்க அரசரும் அரசியும் ஆச்சர்யப்பட்டார்கள்.

“மனைவியா?”

“பிரசவமா?” நாகடோ அசடு வழிய நின்றான்.

“அடேய்.., இப்படியா மருமகளை விட்டுட்டு வருவ?”

“பாவம் அவளுக்கு என்னாச்சோ ஏதாச்சோ?” ரியூகி நடந்தது அனைத்தையும் அவர்களுக்கு விளக்கி சொன்னான்.

“எப்படியோ நாளைக்கு தான் சடங்கு ஏற்பாடுகள் நடக்கும். அதுவரை நல்லா தூங்கி எழும்பலாம். எவ்வளவு நாள் தூக்கம்.” என்று கொட்டாவி விட்டபடியே நயோமி சொல்ல எல்லோரும் உடன்பட்டனர்.

நாகடோ மட்டும் நுரீகோவை எண்ணி கவலைப்பட்டு கொண்டே இருந்தான். சின் கே அவனை சமாதானம் செய்தான். பகலுணவு முடிந்ததும் அவரவர் அறைகளுக்கு சென்று விட்டனர். ரியூகியும் சின் கேவும் மாஸ்டர் ஷாவிடம் சென்றார்கள். அப்போது மாஸ்டர் ஷா சின் கே வை கூர்ந்து பார்த்தார்.

தொடரும்……
ALF. Sanfara.

இரவின் நடுப்பகுதி “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க நுரீகோ. எல்லாம் சரியாகிடும்.” என்ற சோஃபியின் ஆறுதல் வார்த்தைகளில் வலியை கொஞ்சம் மறந்தாள் நுரீகோ. இருந்தும் பிரசவ வலி என்பது பெண்களுக்கு மறுபிறப்புக்கு சமனானது. அடக்க முடியாமல் அலரலோட…

இரவின் நடுப்பகுதி “கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க நுரீகோ. எல்லாம் சரியாகிடும்.” என்ற சோஃபியின் ஆறுதல் வார்த்தைகளில் வலியை கொஞ்சம் மறந்தாள் நுரீகோ. இருந்தும் பிரசவ வலி என்பது பெண்களுக்கு மறுபிறப்புக்கு சமனானது. அடக்க முடியாமல் அலரலோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *