குரங்கு மனசு பாகம் 41

  • 10

“ச்சே! நான் ஒருத்தன் அவசரப்பட்டு உம்மாக்கிட்ட சொல்லிட்டன். யா அல்லாஹ்வே! என் உம்மாவுக்கு ஏதும் நடந்து இருக்கக் கூடாது.” உள்ளம் நிறைய பதட்டத்துடன் வாகனத்தை செலுத்திய ஆதில், தன்னால் எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அந்தளவு அவசரமாய் வீட்டை அடைந்தான்.

“உம்மா உம்மா” எங்கும் மயான அமைதி.

“உம்மா நீங்க எங்க இருக்கீங்க? உம்மா, உம்மா” ஆதிலின் கதறல் நினைவிருந்தும் பேச்சற்றுக் கிடந்த அத் தாயை விம்மி அழ வைத்திட்டு.

“உம்மா இங்கயா இருக்கீங்க? உங்களுக்கு என்னமோன்னு நான் பயந்து போயிட்டன்மா..” பதிலுக்கு வாஹிதா பேசவில்லை. எல்லாம் முடிந்துவிட்டதாக கையசத்த தாயின் கைகளை இறுகப் பற்றி முத்தம் கொடுத்தான் ஆதில்.

“நான் இருக்கன்மா… கவல படாதிங்கம்மா. தயவு பண்ணி எழுந்திடுங்கம்மா. நான் உங்கள விட்டு எங்கயும் போக மாட்டன்மா” இரண்டாமவனின் கொஞ்சலும் கெஞ்சலும் அத்தாயை சிறிது உறுதிப் படுத்த மகனின் கைபற்றி எழுந்து நின்றாள்.

அங்கு அவள் கண்ணெட்டும் தூரத்தில் நின்றிருந்தது அதீகும் சர்மியும் தான். தன் மகனின் கைகளை பற்றியவளாய், தான் விரும்பாத ஒருத்தி மருமகளாய் வாய்த்திருக்க இப்பொழுது அந்தத் தாயுக்கு கவலை வரவில்லை, அவளது ஆத்திரம் உண்மையில் ஆவேசமாய் கிளம்பிட்டு. தன் தாயின் கைகள் திடீரென நடுங்க அவள் கண் பொத்தாது பிரமையாய் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை நோட்டமிட்டான் ஆதில்.

“நீ எதுக்கு வந்த, போ போ இங்கிருந்து” கோவமாய் கத்தியது ஆதில் தான். ஆனால் அதீக் தன்னவளுடன் தாயின் பக்கத்தே நெருங்கி வர, அதனை ஜீரணித்துக் கொள்ளும் மனநிலை அத் தாய்க்கு இருக்கவில்லை.

“என்ன மன்னிச்சிடுங்கம்மா, உண்மையில சொல்லப் போனா சர்மி எந்தத் தப்பும் பண்ணல்லம்மா, இவள் இல்லாத வாழ்க்க எனக்கு ரொம்ப கஷ்டம் மா. தயவு பண்ணி என்ன மன்னிச்சிடுங்கம்மா..”

பதிலுக்கு சிரித்தாள் வாஹிதா.

“நீ யாருடா ஏன்ட?”

“உம்மா…”

“உம்மாவா? அது எல்லாம் முடிஞ்சி போன உறவு.”

“அப்படி சொல்லாதிங்கம்மா, எனக்கு நீங்களும் வேணும் மா…”

“வாய மூடிட்டு வெளிய போ.. உன்ன என் வயித்தால பெத்த புள்ளன்னு சொல்லவே வெக்கமா இருக்கு, எனக்கு துரோகம் செய்ற அளவுக்கு நீ மாறிட்டாய்ல..?”

“அப்படி இல்லம்மா, நான் சொல்றத கேளுங்க பிளீஸ்.”

“யாரும் எதுவும் சொல்லத் தேவயில்ல. ஒழுங்கு மரியாதயா இந்த வீட்ட விட்டு போயிடு.. போயும் போயும் இப்படி ஒருத்திய ஏன்டா கலியாணம் பண்ணிட்ட?” ஏக்கமாய் அத்தாய் கேட்க,

“சர்மி தப்பு பண்ணல்லம்மா” சொல்லி முடிக்கும் முன்னதாகவே சீறிப் பாய்ந்த வாஹிதா,

“இவளுக்கு வக்காலத்து வாங்க வராத, ஆம்புள பைத்தியம், உன்னப் போல எத்துனய வெச்சிட்டி இருக்காளோ யாருக்கு தெரியும்?”

“உம்மா இதுக்கு மேல எதுவும் பேசாதிங்க நான் போயிட்றன்.”

“போடா போ… உன்ன யாரு இங்க வர சொன்னது? போ இங்கிருந்து. இனிமே உனக்கு இந்த உம்மாவே இல்ல..”

கோவத்தின் உச்சத்தில் வாஹிதா கர்ச்சிக்க, இதற்கு மேல் இங்கிருப்பது நல்லதல்ல என்பதை ஊகித்துக் கொண்ட அதீக், மௌனமாய் நின்றிருந்த மனைவியை அழைத்துக் கொண்டு வந்த வேகத்தில் திரும்பிச் சென்றான். தனக்காக தன் தாயையே விட்டு வந்த அதீக் மேல் அவளது காதல் இரு மடங்காக,

“தேங்ஸ் டா” மெதுவாய் கணவனின் காதோரம் சொல்ல,

“உம்மா பேசினது எதையும் மனசுல வெச்சிக்காத சர்மி” எனக் கவலையோடு சொல்ல, கணவனின் கன்னத்தை முத்தத்தால் நனைத்து, தனக்கு எவ்வித வருத்தங்களும் இல்லை என்பதை வெளிப்படுத்தினாள்.

இங்கு கட்டியவளை விடவும் முடியாமல், ஈன்றவளை மறக்கவும் முடியாமல் அவன் உள்ளம் அலை பாய்ந்துக் கொண்டிருக்க, எது எப்படிப் போனாலும் சர்மி மீது சிறந்த கணவன் என்பதற்குரிய சகல தகுதிகளுடனும் பாசமாய் உடனிருந்தான். தான் மனப்பூர்வமாய் விரும்பியவள் தன் மனைவியாய் வாய்த்திருக்க, தாயுடனான வருந்தங்களை மறக்குமறவுக்கு தன்னவனை குழந்தையாய் வைத்திருந்தாள் சர்மி.


“சர்மி”

“என்ன ஹபி?”

“இப்படி என் பக்கத்துல வாயேன்..”

“ஹ்ம்ம் சொல்லுங்கடா..?”

“இன்னம் நெருக்கமா வாடி..”

“ஓகே தங்கம் சொல்லுங்க..”

“இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு? உன் மூச்ச வாங்கிட்டு இருக்கன்ல”

அவளது வதனம் வெக்கத்தால் சிவந்து போக, ஆசை மனைவியை அப்படியே அள்ளி தனக்குள் பொத்திக் கொண்டான். கணவனின் விருப்புக்குள் தன் நாணத்தை தொலைத்தவள், தன்னை அப்படியே தன்னவனிடம் ஒப்படைக்க காதல் உலகத்தில் மூழ்கிப் போயினர் இருவரும்.

கதை தொடரும்..
Aathifa Ashraf

“ச்சே! நான் ஒருத்தன் அவசரப்பட்டு உம்மாக்கிட்ட சொல்லிட்டன். யா அல்லாஹ்வே! என் உம்மாவுக்கு ஏதும் நடந்து இருக்கக் கூடாது.” உள்ளம் நிறைய பதட்டத்துடன் வாகனத்தை செலுத்திய ஆதில், தன்னால் எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ…

“ச்சே! நான் ஒருத்தன் அவசரப்பட்டு உம்மாக்கிட்ட சொல்லிட்டன். யா அல்லாஹ்வே! என் உம்மாவுக்கு ஏதும் நடந்து இருக்கக் கூடாது.” உள்ளம் நிறைய பதட்டத்துடன் வாகனத்தை செலுத்திய ஆதில், தன்னால் எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *