குரங்கு மனசு பாகம் 42

  • 94

இங்கனம் சர்மி, அதீக் வாழ்க்கை இன்பமயாய் நகர, இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வுடனும், வற்றாத காதலுடனும் காலம் கடத்தினர். இப்பொழுது அதீக் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு விட்டான். மனைவியை பிரிய முடியாத வருத்தம் அவனது வெளிநாட்டு வாழ்க்கைக்கு முடிச்சுப் போட்டிருக்கலாம். ஆயினும் போதுமான சம்பளத்தில் நாட்டிலேயே ஒரு நல்ல தொழில் வாய்ந்ததும் அதீக், சர்மி உட்பட ராபியாவும் குளிர்ந்து போனாள். தனது மகளுக்கு இவ்வளவு பொருத்தமான வாழ்க்கைத் துணையாய் வாயில் தேடி வந்தவரை வார்த்தைகளால் பொசுக்கி திருப்பியனுப்பி விட்ட வலி இன்னமும் ராபியாவை வாட்டிக் கொண்டு தானிருந்தது. பழைய சர்மியாய் கலகலவென வீட்டைச் சுற்றி வந்த மகளை எண்ணியும், அவளைக் கண்போல் காக்கும் மருமகனை எண்ணியும் பெரும் திருப்தி கொண்டாள் ஈன்றவள்.

“மகள்.. புள்ள”

“ஓம்மா??”

“மருமகன் ஆபிஸ் போக ரெடி ஆவிட்டாறா?”

“இன்னக்கி போவ மாட்டாறும்மா.. எனக்கு உடம்புக்கு கொஞ்சம் ட்டயர்ட் ஆஹ் இருக்கு. என்ன விட்டுட்டு போக ஏலான்னு சொல்லி இருக்காரும்மா.”

“யேன் என்ன புள்ள உங்களுக்கு? என்கிட்ட சரி சொல்லல்ல, கொஞ்சம் வெளிய வாங்களன்.”

மருமகன் அறையில் இருக்க உள்ளே சென்று மகளைக் காண்பது பொருத்தமில்லை என நினைத்தவள் மகள் வெளியே வரும் வரை காத்திருந்தாள்.

“என்னம்மா? சொல்லுங்க.” தலை முடியைக் கோதிக் கட்டியளாய், முந்தானையை கழுத்தில் மாட்டிக் கொண்டு வெளியே வந்தாள் சர்மி.

“என்ன புள்ள? என்ன வருத்தம்? மகன் பாவமில்லயா? உம்மா இருக்கன் தனே? அவர அனுப்பி வைக்க இருந்தே..” வாய் மூடாமல் வார்த்தைகளை தொடர்ந்த தாயை இடைமறுத்து,

“நான் என்ன செய்யம்மா? அவர் போகவே ஏலான்னு சொல்றாரு இன்னம் கொஞ்சத்துல டாக்டர் வந்ததும் போய் என்னான்டு பார்த்துட்டு வரனும் மா” உண்மையில் அவள் பூ வதனம் வாடித்தானிருந்தது. இலேசான சோம்பல் அவள் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொள்ள,

“நல்ல ஸ்ட்ரோங் டீ ஒன்னு ஊத்தித் தரவா?” கேட்டது ராபியா தான்.

“வேணாம் மா. வொமிட் வருது” மகளின் செயற்பாடுகளும், நிலைமையும் ராபியாவுக்கு எதையோ உணர்த்த,

“சரிம்மா நீ போய் சாஞ்சிக்க, மகன் எழும்பினதும் சொல்லுங்க டீ போட்டு தாரன்.”

“ஹ்ம் சரிம்மா” எழும்பி மீள் அறைக்குள் சென்றவள், விழித்திருந் கணவனின் பக்கத்தில் போய் நெருக்கமாய் படுத்துக் கொண்டாள்.

“என்ன சர்மி பேபி, நல்ல வருத்தமாடா?”

“நோ டா, நோர்மல் தான்.”

“என் நெஞ்சுக்கு வாம்மா. ஏன்ட புள்ளய நான் வெச்சிக் கொள்றன்” சொன்னது தான் தாமதம் கணவனின் நிமிர்ந்த மார்பில் தலை வைத்துப் படுத்துக் கொண்டவளுக்கு எந்த வலிகளும் பெரிதாய் தோன்றாத நிலையில் அவளை வாரி அணைத்துக் கொண்டான் அதீக்.

கதை தொடரும்
Aathifa Ashraf

இங்கனம் சர்மி, அதீக் வாழ்க்கை இன்பமயாய் நகர, இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வுடனும், வற்றாத காதலுடனும் காலம் கடத்தினர். இப்பொழுது அதீக் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு விட்டான். மனைவியை பிரிய முடியாத வருத்தம் அவனது…

இங்கனம் சர்மி, அதீக் வாழ்க்கை இன்பமயாய் நகர, இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வுடனும், வற்றாத காதலுடனும் காலம் கடத்தினர். இப்பொழுது அதீக் வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு விட்டான். மனைவியை பிரிய முடியாத வருத்தம் அவனது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *