அறியாமை சொன்ன அனுபவங்கள்

  • 9

தோற்றத்தை வைத்து
தேற்றம் எழுதும் மனிதர்களிடம்
தோற்றுப்போய்விட்டதாய் எண்ணுவது
என்னளவில் மடமை தான்

போற்றுபவர்கள் போற்றட்டும்
தூற்றுபவர்கள் தூற்றட்டும்
போரடிதாதான் பார்போம் வாழ்க்கையை
இது புத்திசாலித்தனம்

ஆதங்கத்தில் மனிதன்
ஆயிரம் பேசிவிட்டுப்போவான்
அத்தனையும் உண்மையென
ஆராய்ந்து திரிவதும் மடமை

வேலி தாண்டிவிட்ட பின்
சோsலி முடிந்துவிட்டது
தாலியை திருப்பி தாவேன
தோழியிடம் கேட்கிறது அறியாமை

மறைப்பதற்கு ஒன்றுமில்லையென
மனம் விட்டு எல்லாம் பேசிவிட்டு
மறுநொடியே வாக்குகள் மறந்து
மனம்மாறிப் போவது புதுமை

ஓடச் சொல்லி விரட்டி விட்டு
ஆடச்சொல்லி பழக்கிவிட்டு
ஓரமாய் நின்று பார்த்துக்கொண்டே
அத்திவாரம் சரியில்லையென்பது கொடுமை

சத்தியத்தை அடிக்கிவிட்டு
சாமர்த்தியமாய் பேசிவிட்டு
சந்தர்ப்பம் பார்த்து சந்தேகித்து
சட்டென விலகுவது தனிதிறமை

எத்தனையோ மை கள் இருந்தும்
அத்தனைக்கும் அர்தமில்லை
எண்ணிலடங்கா மெய்கள் இருந்தும்
அசத்தியம் வெல்லும் நிலமை

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

தோற்றத்தை வைத்து தேற்றம் எழுதும் மனிதர்களிடம் தோற்றுப்போய்விட்டதாய் எண்ணுவது என்னளவில் மடமை தான் போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் போரடிதாதான் பார்போம் வாழ்க்கையை இது புத்திசாலித்தனம் ஆதங்கத்தில் மனிதன் ஆயிரம் பேசிவிட்டுப்போவான் அத்தனையும் உண்மையென…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *