குரங்கு மனசு பாகம் 45

  • 29

“அவன் என் வயித்தால பெத்ததுக்கு வயித்துல வெச்சே அழிச்சி இருக்கனும்” பெற்றவளின் சுடு சொற்களால் மிகவும் நொந்து போனவனின் உள்ளம் தாய் வீட்டைக் காணும் வரை அமைதி பெறவில்லை. குதிரை வேகத்தில் வந்து மோட்டார் வண்டியை நிறுத்தியவன், ஒரு அன்னியனாய் தன் வீட்டு வாயிலை அடைந்தான்.

“உள்ள யாராவது இருக்குறீங்களா?” அவனையும் மீறி வந்த அழுகைக்கு அணைக்கட்டு போட்டவனாய்,

“யாரு?” என வெற்றிலை வாயோடு முன்னால் வந்த தாயைக் கண்டதும் அவனை அறியாமல் கண்கள் குளமாகிட்டு, “பொறுமை, பொறுமை” என தனக்குள் கட்டுப்பாடு போட நினைத்தாலும் அவன் அகம் அமைதி பெறவில்லை.

“உங்களுக்கு என்ன அழிச்சிப் போட்டிருக்கனும் ல”

கத்திக் கொண்டே தாயைத் தள்ளிக் கொண்டு, சமையலறை விரைந்தவன் அடுப்பங் கட்டில் கிடந்த கத்தியை கையில் எடுத்தான். வாஹிதா பிரமை பிடித்தவள் போல் மகனை நோக்க,

“இந்தாங்கம்மா என்ன அழிச்சிப் போட்டிடுங்க, நான் செத்துப் போயிட்றன், இந்தாங்க, இந்தாங்கம்மா” தாயின் கைகளில் கத்தியை திணித்தவன்.

“என்னம்மா பார்த்துட்டு நிக்குறீங்க? நான் தான் சொல்றன்ல, என்ன அழிச்சிப் போட்டிடுங்கம்மா” பெத்தமனம் அப்பொழுதும் இலகவில்லை. கல்லாக நின்றவள், ஏதோ நினைவு வந்தது போல் கலகலவென சிரித்தாள். அதீகின் கவலை இருமடங்காக, தாயையே உற்று நோக்கினான்.

“என்னடா? நடிப்பு ரொம்பவே நல்லா இருக்கு… உன்ன எப்புடி என்னால அழிச்சிட ஏலும்? அங்க உன்னயே நம்பிட்டு இருக்காளே ஒருத்தி? அவளுக்கும், அவள் வயித்துல இருக்குற கருவுக்கும் யாரு பதில் சொல்லுவாங்க? சும்மா நொய் நொய் ன்னு பேசாம கிளம்பு, கிளம்பு இங்கிருந்து…”

“ஆமாம் மா, நான் நடிக்குறன் தான், என் பொம்புள, புள்ளய அல்லாஹ் பார்த்துப்பான்” ஒரேயடியாகப் பாய்ந்து தாயின் கைகளில் கிடந்த கத்தியைப் பிடுங்கி தன்னைக் காயப்படுத்திக் கொண்டான்.

“ஹே அதீக் வேணாம் டா, அதீக் அதீக், வேணாம்டா”

“இப்பொழுது நிம்மதியாம்மா?” வலியால் துடித்தவனாய், கண்களால் நீர் வடிய திக்கித் தின்றிக் கேட்டவனை அள்ளியணைத்துக் கொண்டாள்.

“எதுக்குடா இப்படியொரு காரியம் பண்ணின?” கதறினாள் வாஹிதா. யாருடைய நல்ல நேரமோ, அதற்குள் வீடு வந்த ஆதில் விபரீதம் கண்டு நடுங்கிப் போனான்.

“ஆதில் போ போய் ஆட்டோவ எடு, அவசரமா போ ஆதில் ஆதில் போடா” இரண்டாமவனைக் கண்டு வாஹிதா கத்த, சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தவன், சுயநினைவுக்கு வந்தவனாக அண்ணனைத் தூக்கி ஆட்டோவிற்கு கொண்டு சென்றான்.

“உம்மா நீங்களும் வந்து ஏறிக் கோங்க” சொல்லும் முன்னதாகவே வாஹிதா வந்து ஏறிக் கொள்ள, ஆட்டோ வைத்தியசாலை நோக்கி விரைந்தது.

“அதீக் பேசுடா, என்னமாவது பேசுடா… எதுக்கு இப்படி ஒரு காரியம் பண்ணிட்ட? அதீக்… அதீக், ஏதாவது பேசு அதீக்…” எதுவும் பலனற்ற நிலையில் வைத்தியசாலை வந்து சேர்ந்தனர். அதீக் அவசர சிகிச்சை பிரிவிற்குள் அனுப்பப்பட, கண்ணீர் விட்டு அழுதாள் வாஹிதா.

“இந்தாங்க அந்த பேர்ஷன் கிட்ட கிடந்தது” ஒரு லேடி நேர்ஸ் அதீகின் மொபைல், பேர்ஸ், வொட்ச் எல்லாம் கொண்டு வந்து வாஹிதாவிடம் ஒப்படைக்க அவற்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள் அவள்.

இங்கு மறுமுனையில் தன்னையும் மீறி ஆத்திரமாய் கிளம்பிப் போன தன்னவன் குறித்த கவலையில் கிடந்தாள் சர்மி. இப்பொழுது வந்திடுவான், இப்பொழுது வந்திடுவான் என வீட்டு முற்றத்தை வெருச்சோடிப் பார்த்திருந்தவள் கதை இளவுகாத்த கிளியாக,

“மகன் வந்திடுவார் புள்ள, நீ வந்து சாப்பிடு, இந்த நேரம் பசியில இருக்கக் கூடாதும்மா” மகளின் நிலை கண்டு ராபியா கூவ,

“எனக்கு ஏதோ தப்பா தோணுதுமா” கலக்கத்துடன் சொன்னாள் சர்மி..

“அப்படி ஒன்னும் இல்லம்மா, மகன் தானே மொபைல் கொண்டு போயிருக்காறு, என்னான்னு பார்க்குறது தானே?” சர்மிக்கும் அது சரியாய் பட்டது, உள்ளே ஓடி வந்தவள் கணவனுக்கு அழைப்பு செய்ய, ஆங்கு வாஹிதாவின் கையில் கிடந்த மொபைல் “மை வைய்ப்” என்ற நாமத்தில் சிணுங்கியது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“அவன் என் வயித்தால பெத்ததுக்கு வயித்துல வெச்சே அழிச்சி இருக்கனும்” பெற்றவளின் சுடு சொற்களால் மிகவும் நொந்து போனவனின் உள்ளம் தாய் வீட்டைக் காணும் வரை அமைதி பெறவில்லை. குதிரை வேகத்தில் வந்து மோட்டார்…

“அவன் என் வயித்தால பெத்ததுக்கு வயித்துல வெச்சே அழிச்சி இருக்கனும்” பெற்றவளின் சுடு சொற்களால் மிகவும் நொந்து போனவனின் உள்ளம் தாய் வீட்டைக் காணும் வரை அமைதி பெறவில்லை. குதிரை வேகத்தில் வந்து மோட்டார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *