குரங்கு மனசு பாகம் 47

  • 10

“பேர்ஷன் கு ரொம்ப நெருக்கமான யாராவது ஒருத்தர் உள்ள வரலாம்” ஒரு தாதி வந்து சொல்ல, சர்மியும், வாஹிதாவும் ஒரேயடியாக எழுந்து நின்றனர்.

“இங்க சர்மி யாரு?” கேட்டது அத் தாதிப் பெண் தான்.

“நா.. நான் தான்” குறைவின்றி வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டவளாய் பதில் கொடுத்தாள்.

“நீங்க உள்ள வாங்க மெடம், அவரு மயக்கம் தெளிஞ்சதுல இருந்து உங்களத் தான் சொல்லிட்டு இருக்காறு” இப்படியொரு அவமானத்தை வாஹிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சர்மியை முறைத்துப் பார்த்தவள் அவ்விடத்தே தாமதிக்காது, இரண்டாமவனையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.

சர்மி தன்னை தைரியப் படுத்திக் கொண்டவளாக தன்னவனைக் காண உள்ளே சென்றாள். அங்கு அதீக் சர்மியைக் காணும் அருகதையற்றவனாக எங்கோ முகத்தை திருப்பிக் கொண்டு படுத்திருந்தான்.

“உங்க புண்ணியம் மா, ஆழமா வெட்டிப்பட்டில்ல, இல்லன்னா இவங்க உயிருக்கு…” அருகிலிருந்த தாதி விளக்கம் கொடுக்க முனைகையில்,

“வேணாம் பிளீஸ் இதுக்கு மேல எதுவும் சொல்லாதிங்க, அவருக்கு எதுவும் ஆவாது, அப்படியொரு கஷ்டத்த நிச்சயமா கடவுள் எனக்கு தர மாட்டான்” கணவனின் அருகில் சென்றவள், அவன் தலையை வருடி பரந்த நுதலுக்கு முத்தம் கொடுத்தாள்.

“என்ன விட்டு போக எப்புடி மனசு வந்துச்சு ஹபி?” விம்மியழுதவளாக தன் மார்போடு சாய்த்து கணவனின் முகத்தை கட்டியணைத்துக் கொண்டாள்.

அதீக் எதுவும் பேசவில்லை. மௌனமே உருவாய் தனது புத்தியற்ற செயலை நினைத்து உள்ளுக்குள் வருந்திக் கொண்டிருந்தான்.

“சரி ஹபி, நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் உங்களுக்கு சாப்பிட ஏதாச்சும் எடுத்து வாரன்” புறப்பட எழுந்த மனைவியின் கைகளை பற்றிக் கொண்டான்.

“என்ன மன்னிச்சிடு சர்மி..” சின்னவன் போல் விசும்பிய தன்னவனை நோக்கியவள்,

“அவ்வளவு சீக்கிரமா நாம பிரிஞ்சிட மாட்டோம் அதீக்” இளம் புன்னகையுடன் கணவனை சமாதானப் படுத்தினாள்.

“என் பக்கத்துல வாயேன் சர்மி..”

“என்னடா?”

“இன்னம் நெருக்கமா வாம்மா…”

“என்ன ஹபி” மனைவியின் வயிற்றை தடாவி விட்டான்.

“அபி தப்பு பண்ணிட்டன் செல்லம், அபி ய மன்னிச்சிடுங்க பிளீஸ்”

“அப்படி எதுவும் இல்ல ஹபி். ஒவ்வொரு சிடிவேஷன்னும் நம்மல மாத்திடும். நாம நெனச்சாத்துகள செய்ய வெச்சிடும். தப்பு உங்க மேல இல்ல. உங்களால தாக்குப் பிடிக்க இயலாத அளவுக்கு ஏதோ ஒரு கஷ்டம் உங்கள வருத்தியிருக்கு” அப்பொழுது தான் அவனுக்கு தன் தாயின் ஞாபகம் வந்தது.

“ஆஹ் சர்மி, உம்மஆ எங்க? என்ன ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணினது அவங்க தானே?”

“ஓம் ஹபி, அப்புறம் வாரன்னு சொல்லிட்டு போனாங்க, வந்துடுவாங்க டா.. யூ டேக் ரெஸ்ட்” கணவனின் உள்ளம் சஞ்சலப்படும் எதையும் சொல்லாதிருப்பதே பொருத்தம் என நினைத்துக் கொண்டாள்.

“சர்மி இப்புடி கொஞ்சம் என் பக்கத்துலயே இரியேன். நான் உன்ன மிஸ் பண்ணிட மாட்டன்ல…”

“ஹபி பிலீஸ் தேவயில்லாம யோசிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, இதோ நான் இப்ப வந்துட்றன்” தன்னை தைரியப் படுத்தியவளாய் வெளியில் சென்ற மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன மன்னிச்சிடு சர்மி” தன்னை அறியாமல் அவன் நா உச்சரிக்க, அன்றிலிருந்து தன்னவளுடனான நெருக்கம் இன்னும் ஒருபடி அதிகமானது..

கதை தொடரும்…
Aathifa Ashraf

“பேர்ஷன் கு ரொம்ப நெருக்கமான யாராவது ஒருத்தர் உள்ள வரலாம்” ஒரு தாதி வந்து சொல்ல, சர்மியும், வாஹிதாவும் ஒரேயடியாக எழுந்து நின்றனர். “இங்க சர்மி யாரு?” கேட்டது அத் தாதிப் பெண் தான்.…

“பேர்ஷன் கு ரொம்ப நெருக்கமான யாராவது ஒருத்தர் உள்ள வரலாம்” ஒரு தாதி வந்து சொல்ல, சர்மியும், வாஹிதாவும் ஒரேயடியாக எழுந்து நின்றனர். “இங்க சர்மி யாரு?” கேட்டது அத் தாதிப் பெண் தான்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *