குரங்கு மனசு பாகம் 48

  • 10

இங்கனம் ஒருவருக்கொருவர் அன்புடனும், விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் தம் இல் வாழ்க்கையைக் கடாத்த, சர்மி அதீக் தம்பதியினர் தன் மூத்த பிள்ளையைக் கண்டும், வாஹிதா மனம் இறங்கி இவர்களை சேர்த்துக் கொண்டதாயிருக்கவில்லை. ஆயினும், “என்னோட உம்மா எப்போ சரி எங்கள புரிஞ்சிக்குவாங்க” என வெகுவாய் நம்பி வாழ்ந்தான் அதீக்.

மூத்தவன் கிடைத்த பொழுது,

“உம்மா உங்களுக்கொரு பேரக்குழந்தை வந்திருக்கு” ஏதோ நப்பாசையில் ஆரவாரமாய் சொன்ன பொழுது,

“அவ வயித்தால பெத்துக்கிட்டது நம்ம பரம்பரையாவாது” என வெடுக்கென்று தன் தாய் சொன்னதும் வெகுவாய் உடைந்து போனவன், இன்று வரை தன் தாய் மாறி வருவாள், தன்னவளை ஏற்றுக் கொள்வாள் என ஏதோ ஒரு ஏக்கத்தில் எண்ணி வாழ்ந்தான். அன்று ஆபிஸ் விட்டு நேரகாலத்தோடே வீடு வந்த அதீக் தன் குட்டிக் குழந்தையோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த போது,

“அபி உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்…”

“என்ன கண்ணு கேளுடா…”

“அதில்ல அபி, உங்களுக்கு உம்மா இருக்காங்களா? இல்லையா? உம்மம்மிய மட்டும் தான் எனக்கு தெரியும், நீங்க அபிஉம்மி பத்தி நெறய சொல்றப்போ அவங்கள பார்க்க ஆசயா இருக்கும் தெரியுமா? ஆனா அபிம்மீ என்ன பார்க்க வாரதேயில்ல. யே அபி அவங்க வரமாட்டாங்களா?”

“அதில்ல செல்லம், அவங்க கண்டிப்பா வருவாங்க” இடையில் குறுக்கிட்டது சர்மி தான்.

தன் மகனின் இந்தக் கேள்வி இவ்வளவு காலமாக உள்ளத்தில் படர்ந்திருந்த சோகத்தை இருமடங்காக்க, தன் தாயின் நெகிழாத உள்ளம் எண்ணி மிகவும் வேதனைப் பட்டான்.

“சர்மி”

“என்ன ஹபி?”

“வெளிய எங்கயாச்சும் போய் வருவோமா?”

தன்னவன் ஏதும் வேதனையில் இருக்கும் பொழுது வீட்டில் இல்லாமல் எங்காவது தன்னைக் கூட்டிச் சென்று தன் மனநிலையை சரிப்படுத்திக் கொள்ளும் வழக்கம் இருக்க, அதீக் எப்பொழுது, எங்கு அழைத்தாலும் அவள் மறுத்தது இல்லை.

“உம்மா நாம கொஞ்சம் வெளிய போய் வாரோம், ட்டினர் எடுத்துட்டு வாரன், நீங்க கவனமா இரியுங்க” அவசர அவசரமாய் தயாரானவள் தமக்குரிய சின்னவனை தூக்கிக் கொள்ள,

“புள்ளய என்கிட்ட தாங்க” அதீக் வாங்கிக் கொண்டான்.

“அபி நைட் ல கார்னி வேல் ஷோ இருக்கும்ல, அங்க போவோமா?” ஆரவாரமாய் மகன் கேட்க, அங்கு குதூகலமாய், உள்ளாசமாய், எந்த கவலையும் அறியாது விளையாடும் சிறிசுகளைக் காண அதீக் அகமும் சந்தோஷம் கொள்ளும் என்பதாலோ என்னவோ உடனே சரி சொல்லி விட்டான்.

“ஹே ஜொலி, நாம கார்னிவேல் ஷோ போறோம்” சின்னவன் குதூகலிக்க அவனைப் பத்திரமாய் மடியில் இருப்பாட்டிக் கொண்டாள் சர்மி.

குறித்த இடத்தில் வாகனத்தை நிறுத்த, பல வண்ண நிறங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த அவ்விடம் குட்டிப் பையனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி விட,

“ட்ரைன் ல போகவா அபி” தாயின் கைவிட்டு முன்னால் ஓடியவனின் விருப்பப்படி டிக்கர்ட் வாங்கி, கூட்டிச் சென்றான்.

“சர்மி”

“என்னடா?” கண்ணால் எதையோ அதீக் காட்ட, அவன் காட்டிய திசையை நோட்டமிட்டாள்.

அவள் இவர்களின் பிள்ளையை விட சிறிது இளையவளாகத் தானிருக்கும். சுருண்ட முடியும், பெரிய கண்களும், முறைப்புப் பார்வையும், குள்ளமான தோற்றமும், துடிதுடிப்பான தன்மையும் சர்மியையும் மெய் மறந்து பார்க்க வைத்திட்டு,

“ரொம்ப கியூட் ஆஹ் இருக்காள், நம்ம பையன தான் இந்தளவு கோவமா பார்க்குறாள்” சொல்லி முடிக்கும் முன்னதாகவே துறுதுறுவென வந்தவள்,

“இது என்னோட பிலேஸ்” சர்மியைப் பார்த்து சொன்னாள்.

“ஓஹ் அப்படியா செல்லம், ஓகே! நாம வேற பிலேஸ் போறோம், சொறிடா” சின்னவளின் கன்னத்தை கிள்ளிவிட, சிறிதாக நகைத்தவள் தன் இடம் கிடைத்த ஆனந்தத்தோடு, இலக்காரமாய் அமர்ந்து கொள்ள, அவளின் ஒவ்வொரு சைகைகளும் சர்மி, அதீக் உள்ளத்தில் வெகுவாக இடம்பிடித்திட்டு. அன்றிரவு வீடு வந்தவன், மனைவியை நெருக்கமாக அணுகினான்.

“என்னடா?”

“நான் சந்தோஷமா இருக்கன் சர்மி…”

“என்ன சொல்றீங்க ஹபி?”

“எப்போ தரப் போற?” ஆசையாய் கேட்டான். பதிலுக்கு அறியாதவள் போல் கணவனை நோக்கினாள் சர்மி…

“என் கவல எல்லாத்துக்கும் சொலியூஷன் கெடச்சிருச்சு, சொல்லு சர்மி எனக்கு ஒரு அழகான மகள எப்ப தருவாய்?”

“ஓஹ் இதுவா விஷயம்?” அறியாதவள் போல் பாசாங்கு செய்யவே, மனைவியை இன்னும் இன்னும் நெருங்கிச் சென்றான். கணவனின் நெருக்கம் அவளையும் வசப்படுத்த தன்னவனின் இச்சைக்குள் தன்னைத் தொலைத்தவள் காதல் உலகத்தில் உறைந்து போனாள்.

கதை தொடரும்…
Aathifa Ashraf

இங்கனம் ஒருவருக்கொருவர் அன்புடனும், விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் தம் இல் வாழ்க்கையைக் கடாத்த, சர்மி அதீக் தம்பதியினர் தன் மூத்த பிள்ளையைக் கண்டும், வாஹிதா மனம் இறங்கி இவர்களை சேர்த்துக் கொண்டதாயிருக்கவில்லை. ஆயினும், “என்னோட…

இங்கனம் ஒருவருக்கொருவர் அன்புடனும், விட்டுக் கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் தம் இல் வாழ்க்கையைக் கடாத்த, சர்மி அதீக் தம்பதியினர் தன் மூத்த பிள்ளையைக் கண்டும், வாஹிதா மனம் இறங்கி இவர்களை சேர்த்துக் கொண்டதாயிருக்கவில்லை. ஆயினும், “என்னோட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *