குரங்கு மனசு பாகம் 54

  • 8

“ஆன்ட்டீ… யாராவது இருக்கீங்களா? பிலீஸ் ஹெல்ப், ஆன்ட்டீ… ஆன்ட்டீ” மருமகன் அலற, சின்னவனோடு விளையாடிக் கொண்டிருந்த ராபியா பதறித் துடித்தவளாக அறை நோக்கி ஓடி வந்தாள்.

“என்ன மகன்? என்னா?”

சர்மி மயங்கிட்டாங்க ஆன்ட்டீ, கொஞ்சம் அவசரமா தண்ணி எடுத்துட்டு வாங்க” மகளின் நிலை கண்ட தாய் துடித்துப் போக, தண்ணீர் சொட்டுக்களால் அவள் அழகிய வதனத்தை ஒத்தடம் செய்தாள்.

“சர்மி, சர்மிம்மா, சர்மி… புள்ள.. சர்மி, சர்மிம்மா..” தாயும் கணவனுமாக மாறி மாறி அவளை தட்டி எழுப்ப இலேசாகக் கண் திறந்தவள் மீண்டும் மயக்கமுற்று விழுந்தாள்.

“ஆன்ட்டி எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அவசரமா டாக்ட்டர் கிட்ட போய் வரலாம்.”

“ஓம் மகன்.. எனக்கும் இது சரியாத் தோனல்ல, நீங்க போய் வாகனத்த எடுங்க” அதீக் எழுந்து நிற்கவே,

“அபி, உம்மிக்கு என்னா?” பக்கத்தில் பரிதாபமாய் நின்றிருந்த மகனை தூக்கிக் கொண்டு வாகனத்தை எடுக்க விரைந்தான்.

அதற்குள் மகளைப் பற்றி ராபியா வெளியில் கொண்டுவர முயற்சிக்க, ஓடிவந்த அதீக் தன் கரங்களால் மனைவியை தூக்கி வாகனத்தில் ஏற்றினான். எல்லோருமாய் வைத்தியசாலை விரைய உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தான் அதீக்.

“எல்லாம் என்னால தான்” தன் மேல் என்றுமில்லாத வெறுப்பை உணர்ந்தவன், “மன்னிச்சிக்க சர்மி” என மனதால் மன்றாடிக் கொண்டிருந்தான். அந்த நீண்டு வளைந்த பாதைபோல அதீகின் உள்ளமும் தன்னவளுக்காக நீண்டு மன்றாடிக் கொண்டிருந்தது. “உம்மா எழும்புங்க, எழும்புங்கம்மா” இடைக்கிடை சின்னவன் மட்டும் தாயை தட்டி எழுப்பிக் கொண்டிருக்க மகனின் நிலை கண்டு இன்னும் உருகிப் போனான் அதீக்.

“இங்கதான் மகன், நிறுத்துங்க” ராபியாவுக்கு நன்கு பழக்கமான ஹாஸ்பிடல் அது. அங்கிருக்கும் தாதிமார், வைத்தியர் என எல்லோரோடும் அவளுக்கு ஏற்கனவே தொடர்பிருக்க, சர்மி விடயத்தில் இங்கையே பரிசோதிப்பது பொருத்தமாய் தோன்றியிருக்கும் தாய்க்கு.

பதிலுக்கு எதுவும் பேசாத அதீக் அவ்விடத்தே வாகனத்தை நிறுத்தி மாமியாரின் துணையோடு தன்னவளை உள்ளே அழைத்துச் சென்றான். அங்கு சர்மி பரிசோதிக்கப்பட, அதீகின் அகம் சர்மிக்காக வெந்து, உறைந்து கொண்டிருந்தது.

“உனக்கு என்ன சரின்னா பிரமிஸ் நான் உயிரோட இருக்க மாட்டன் சர்மி” மனைவியின் கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த அந் நீண்ட முடியை பின்னால் செருகிவிட்டவனாக தனக்குள் பேசிக் கொண்டிருந்தான்.

“என்னம்மா நீங்க எல்லாம். இந்த டெய்ம்ல ஒழுங்கா சாப்புடனுமே? இவங்க பட்டினியில கிடந்திருக்கா போல இருக்கு?” ராபியாவை பார்த்து வைத்தியர் புகார் கூற,

“டாக்டர் அதுவந்து..”

“என்ன அதுவந்து மிஸ்டர்? இப்புடி கெயார்லஸ் ஆஹ் இருக்க நல்லமா சொல்லுங்க? இப்போ அவங்க மட்டுமில்லயே? ஒரு ஹஸ்பன்ட் ஆஹ் நீங்க சரி உங்க வைய்ப் விஷயத்த பார்க்க மாட்டீங்களா?”

“டாக்டர் யூ மீன்…?”

“ஷீ ஈஸ் பிரக்னன்ட்,”

“ரியலீ….?” ஆனந்தத்தில் துள்ளினான் அதீக்.

“இந்தாங்க இப்போதைக்கு இந்த டப்லட்ஸ் அ குடுங்க, அப்புறம் நல்லா சாப்பிட்டா எல்லாம் ஓகே ஆவிடும்.”

“ரொம்ப தேங்ஸ் டாக்டர்.”

“அது எல்லாம் இருக்கட்டும், இனிமேலாவது இந்த விஷயங்களுல கொஞ்சம் கவனமா இரியுங்க. ஓல்ரெடி அவங்க பொடி வீக், மைய்ன்ட் இட்.”

“ஓகே டாக்டர், தெங்க்யூ..”

“மாமி நீங்க சர்மிய பார்த்துக் கோங்க, நான் சாப்புட ஏதாவது எடுத்துட்டு வாரன்” வெளியில் கூட்டி வந்து மெதுவாக மனைவியை இருப்பாட்டியவன், தன்னவளின் வயிற்றுப் பசிபோக்க ஏதும் எடுத்துவர முனைகையில், மயக்கம் தெளிந்தவளாய் கணவனின் கையைப் பற்றிக் கொண்டாள் சர்மி.

“ஹே! சர்மிம்மா.” உற்சாகமாய் குனிந்து மனைவியை வருடிவிட, கௌரவமாய் அவ்விடம் விட்டகன்றாள் தாய் ராபியா.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“ஆன்ட்டீ… யாராவது இருக்கீங்களா? பிலீஸ் ஹெல்ப், ஆன்ட்டீ… ஆன்ட்டீ” மருமகன் அலற, சின்னவனோடு விளையாடிக் கொண்டிருந்த ராபியா பதறித் துடித்தவளாக அறை நோக்கி ஓடி வந்தாள். “என்ன மகன்? என்னா?” சர்மி மயங்கிட்டாங்க ஆன்ட்டீ,…

“ஆன்ட்டீ… யாராவது இருக்கீங்களா? பிலீஸ் ஹெல்ப், ஆன்ட்டீ… ஆன்ட்டீ” மருமகன் அலற, சின்னவனோடு விளையாடிக் கொண்டிருந்த ராபியா பதறித் துடித்தவளாக அறை நோக்கி ஓடி வந்தாள். “என்ன மகன்? என்னா?” சர்மி மயங்கிட்டாங்க ஆன்ட்டீ,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *