ஒரு விடயம் தெரிந்ததும் மற்றவரை தரக்குறைவாக காண்பது தற்பெருமையே!

  • 10

ஒவ்வொரு அறிஞருக்கும் மேல் ஓர் அறிஞன் இருக்கிறான் எனும் இறைவனது கூற்றுக்கும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு எனும் வாசகத்திற்கிணங்கவும் உலகில் தோன்றிய யாரும் அறிவில் பூரணத்துவம் பெற்றவர்கள் அல்லர் (நபிமார்களைத் தவிர)

தெரியாவற்றை தெரிந்தவர்களுக்கு முறையாக கற்பிப்பது கடமை போன்று அவற்றை இடம், காலம், சமூகத் தேவை நிமித்தம் அவசியத்தைக் கருதிற்கொண்டு கற்பதும் கடமையாகும்.

ஒரு சில அறிவுகள், தகவல்கள், தரவுகள் சற்று மற்றவரை விட அதிகம் தெரிந்திருப்பதை வைத்து நாம் பெருமையடித்து மற்றவரை ஏளனமாக பார்ப்பதும், ஏனையோரை தரம் தாழ்த்தி, அவமரியாதையாக நடத்துவதும் இன்று வளர்ந்து வரும் மாணவ சமூகத்தில் குறிப்பாக இளம் இஸ்லாமிய அழைப்பாளர்களிடம் காண முடிகிறது.

இஸ்லாம் மென்மையாக, நலினமாக அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் பொழுது, மூத்தவர்களை குறிப்பாக மூத்த ஆசிரியர்கள், ஆலிம்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் ஆகியோருடன் உரையாடும் வேளையிலும் அறிவுசார் கல்விக் கலந்துரையாடல்களிலும் அவர்களை அவமதித்து, ஆளுமைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வண்ணம் நடப்பதானது பண்பாடற்று, ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கத் தெரியாததன் அடையாளமாகும்.

கல்வி கற்பதற்கு முன் ஒழுக்க விழுமியங்களை கற்றுத் தேருங்கள் என்று முன்னைய அறிஞகள் கற்பிப்பதற்கு முன் ஒழுக்கதை ஆர்வமூட்டியிருப்பதானது அன்றைய அறிஞர்களை அறிவுடன் கூடிய பண்பாட்டாளர்களாக மாற்றியிருப்பதை நிதர்சனமாக அவதானிக்க முடியும்.

இன்றைய வளர்ந்து வரும் சில மாணவர்கள் பிரசித்திபெற்ற அறிஞர்களுக்கு Voice Clipகள் அனுப்பி சந்தேகம் கேட்பதற்கு பதிலாக தனது வாதத்தை/ கருத்தை சரியென நியாயப்படுத்துவதற்காக குறித்த அறிஞர்களை இழிவுபடுத்தி தரக்குறைவாக பேசிய பதிவுகளும் உண்டு.

ஆக்கபூர்வமான கருத்தாளமுள்ள கருத்துக்கான விமர்சனங்களைத் தவிர்த்து தனிப்பட்ட ஆளை விமர்சித்து, நக்கல் நையாண்டி செய்து பெரும் அறிஞர்களை அவமதிக்கும் செயல் இன்று சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது.

எல்லாம் தெரியும் எனும் நிலைப்பாடு வருபவன் கர்வம் தலைக்கேறி ஷைதானிய தன்மை கொண்டவனாக மாறிவிடுகிறான். உண்மையில் பண்பாடுள்ள அறிவாளியின் அறிவு அதிகரிக்க அதிகரிக்க அவரது பணிவும், பண்பாடுகளும், பக்குவமும் அதிகரிக்கும்.

இக்காலத்தில் அதிகம் google ஐ மையமாக வைத்து தகவல்களை புறக்கி எடுத்து வைத்துக் கொண்ட சிலர், பல நூல்களை வாசித்த ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரிய விரவுரையாளர்களிடம் கற்றுத் தேர்ந்த, அல்லது தாமாக புத்தகங்களை தேடி, கொள்வனவு செய்து வாசித்து ஆய்வு செய்து அறிவுப் பின்னணியில் பேசும் ஆலிம்கள், அறிஞர்களை மட்டம் தட்டி, குத்தலும் நக்கலும் செய்து அவமதித்து உயரிய ஆளுமையை தரக்குறைவாக நடத்தும் இழிச் செயலை தவிர்த்து பண்பாட்டுடன் அணுக எத்தனிப்பது சாலச்சிறந்ததாகும்.

இத்தவறுகளை உணர்ந்து மூத்த கல்விமான்களை மதித்து, பண்பாடுகளைப் பேணி நடந்து சிறந்த புது யுகத்தினரை உருவாக்க முயல்வோம்.

நட்புடன்
Azhan Haneefa

ஒவ்வொரு அறிஞருக்கும் மேல் ஓர் அறிஞன் இருக்கிறான் எனும் இறைவனது கூற்றுக்கும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு எனும் வாசகத்திற்கிணங்கவும் உலகில் தோன்றிய யாரும் அறிவில் பூரணத்துவம் பெற்றவர்கள் அல்லர் (நபிமார்களைத் தவிர) தெரியாவற்றை…

ஒவ்வொரு அறிஞருக்கும் மேல் ஓர் அறிஞன் இருக்கிறான் எனும் இறைவனது கூற்றுக்கும் கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு எனும் வாசகத்திற்கிணங்கவும் உலகில் தோன்றிய யாரும் அறிவில் பூரணத்துவம் பெற்றவர்கள் அல்லர் (நபிமார்களைத் தவிர) தெரியாவற்றை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *