நாய்க்குட்டி

  • 10

இத்தனை ஊளையிடும்
இந்த நாய்க்குட்டியின்
தீர்மானம்தான் என்ன

இரவைத் துரத்தி இருளுக்கு
வர்ணச் சேலையணிவிக்கப் போகிறதா

மின்னும் நட்சத்திரங்களை
யாருடைய பல் வரிசை என்றெண்ணியதோ
வானைப் பார்த்து ஊளையிடுகிறது

பனித்துளிகளையல்லவா
தொண்டை வரழ விடாமல் அருந்திக் கொள்கிறது இந்த நாய்க்குட்டி

பூக்கள் விடியலில் மொட்டவிழ்க்குமா
அல்லது இந்த நாயின் ஊளையில்
அஞ்சி உறக்கம் தொலைத்த
காரணத்தால் இதழுறக்கம் செய்யுமா

இன்னும் இருளுக்கு இருள் போர்த்திய
பௌர்ணமியை மறைத்த மேகத்தை
விலகிடச் சொல்லி உரத்துக் கத்துகிறது

கங்கை கோபம் தான்
நண்டுகளின் காதலைக் கண்டு மகிழும்
அலைகளுக்கு – இருள் மறைத்த
மேகங்களின் மீது

அலைகள் அடித்துப் பிரித்து
வேடிக்கை பார்க்க நண்டுகளும்
தலை தெரித்து ஓடி துணை சேர
வேடிக்கை கூடும்தான்

இந்த இரவின் நாய்க்குட்டியும் அந்த
அலையின் மேகத்தின் மீதான
கோபமும் இரவைப் புரட்டிப் போட
என் இமைகளும் புரண்டது

க.ஷியா

இத்தனை ஊளையிடும் இந்த நாய்க்குட்டியின் தீர்மானம்தான் என்ன இரவைத் துரத்தி இருளுக்கு வர்ணச் சேலையணிவிக்கப் போகிறதா மின்னும் நட்சத்திரங்களை யாருடைய பல் வரிசை என்றெண்ணியதோ வானைப் பார்த்து ஊளையிடுகிறது பனித்துளிகளையல்லவா தொண்டை வரழ விடாமல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *