மீண்டும் வருமா

admin

தாயே
தான் வயிறு பசித்திருக்க
தன் பிள்ளை தாங்காது என்றுணர்ந்து
தாலாட்டி நீ தந்த நிலாச் சோறும்
நிமிர்ந்து நான் உண்ட நிமிடங்களும்
நீ இன்றி மீண்டும் வருமா

ஐவிரல் உனக்கிருக்க
அதில் ஒருவிரல் எனக்கென்று
நான் பிடித்து நடந்து வந்த
அந்த நடை பாதை தந்த இன்பங்கள் மீண்டும் வருமா

நிமிடங்கள் போவதறியாது
நீ தந்த தாலாட்டின் தன்னம்பிக்கையால்
நான் உறங்கிய அந்த
உறக்கங்கள் மீண்டும் வருமா

குதூகலமாய் நான் செய்த குழப்படிகளைக் கூட
புதுவிதமாய் நான் செய்யும்
சாதனைகள் என்று என்னை அணைத்து
நீ தந்த முத்தங்களும் மீண்டும் வருமா

தோல் பட்டை நசியும் வரை
தொட்டிலில் நான் கேட்ட இசையும்
நிலாப்பாட்டி சுட்ட வடையென
நீ போக்கிய அந்த பசியும்
நான் இருக்கும் வரை
மீண்டும் வருமா

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08
Open chat
Need Help