கண்ணிலே வைத்து பெண்மை போற்று

  • 23

பெண் தேகம் கண்டதும்
கண் மோகம் கொள்வது எதற்கு
சிறுதேகம் என்று என்னாமல்
சீரழிந்திடும் சிறுமிகூட பெண்தானே

கர்வம் திறந்து கணவனை மதிக்கிறாள்
கட்டியவன் கரைசேர கட்டிலிலே தவிக்கிறாள்
மெட்டெடுத்து பாடிய காலம் விட்டு
மெதுவாக கதைக்கிறாள்
தொட்டணைத்த தோழமை விட்டு
தொலைதூரம் இருக்கிறாள்

கண்ணிலே வைத்து பெண்மை போற்று
பெண்ணினம்தான் பேருலகின் பெருமூச்சு

மென்மேனி கொண்டும்
கடுஞ்சொல் தாங்குபவள்
மெழுகென உருகியே
பிள்ளை கணவன்தான் வாழ்க்கை என்று
கனவுகளை களைப்பவள்

பெண்ணிற்கும் இலக்கணமுன்டு
பெண்மையே ஒரு இலக்கணம் என்பதால்
தேவையில்லை அந்த வரிகளும்
இங்கு…

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை-08

பெண் தேகம் கண்டதும் கண் மோகம் கொள்வது எதற்கு சிறுதேகம் என்று என்னாமல் சீரழிந்திடும் சிறுமிகூட பெண்தானே கர்வம் திறந்து கணவனை மதிக்கிறாள் கட்டியவன் கரைசேர கட்டிலிலே தவிக்கிறாள் மெட்டெடுத்து பாடிய காலம் விட்டு…

பெண் தேகம் கண்டதும் கண் மோகம் கொள்வது எதற்கு சிறுதேகம் என்று என்னாமல் சீரழிந்திடும் சிறுமிகூட பெண்தானே கர்வம் திறந்து கணவனை மதிக்கிறாள் கட்டியவன் கரைசேர கட்டிலிலே தவிக்கிறாள் மெட்டெடுத்து பாடிய காலம் விட்டு…

3 thoughts on “கண்ணிலே வைத்து பெண்மை போற்று

  1. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *