தளராதே! மனமே! தளராதே!

  • 12

கொரோனா கொள்ளையதில்
கொழுவியுள்ள உள்ளத்திற்கு
கொஞ்சமேனும் ஆறுதல்-நான்
கூற இங்கு விளைகின்றேன்!

ஜும்ஆ எனும் தொழுகையதில்
நுழையவில்லை-நாமின்று
என்றெண்ணி ஏங்கும்
பல வதனமதின்
உளக்குமுறல் தெரிகிறதே!- இங்கு

ஐங்கால தொழுகை பல
அனுதினமும் ஜமாஅத்துடன்
தொழுதிட்ட பாதமின்று
தொழச் செல்ல நடுங்குதம்மா?
ஏன் இந்த அவலநிலை?

ஈமானின் சோதனையா? – இல்லை
பாவமதின் தண்டனையா?
(அல்லாஹு அஃலம்)

தும்மினாலும் பெருங்குற்றம்
தொட்டாலும் கிருமியதாம்
என்று சொல்லி உன் மனதை
வாட்டும் சொற்கள் – இன்று
வடுவாய்ப் பதிகிறது
பலரின் உள்ளமதில்..

சஞ்சலம் வேண்டாம் – கண்ணே!
சங்கையாளன் பணியதனை
சரியாய் நாம் செய்திட்டால்
நமக்கில்லை – அவலநிலை
நாமதனை உணர்ந்திடுவோம்!

சகோதரத்துவ மார்க்கமதில்
பிறந்திட்ட நாமிங்கு
சந்தேகக் கண் கொண்டு
சனங்களை நாம் நோக்காது

சங்கையாளன் வகுத்தளித்த
விதியதிலே நாமென்றும்
சளைக்காமல் இருந்திட்டால்
சகவாழ்வு உண்டென்றும்!

நோயெனும் காரணத்தால்
நோவினை – பல தந்துமக்கு
தனிமையெனும் போர்வைதனை
தருகிறதா சமூகமது?

தளராதே மனமே! தளராதே!

தற்காப்பு முயற்சி பல
தயங்காமல் நாம் செய்திடினும்
தயாளன் விதித்தது எல்லாம்
தடையில்லாது வந்து சேரும்

இதை நீ உணர்ந்திடு
உள்ளமதில் பதித்திடு!

அணுவளவும் ஈமானில்
அசையாத உறுதியுடன்
துஆவெனும் ஆயுதத்தால்
துடைத்திடுவோம் – நாமதனை
தயாளனின் அருளதனில்
தளராமல் நாமிருப்போம்!

( قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ [ At-Tauba – 51 ]
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்”என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!)

J.Noorul Shifa
SEUSL

கொரோனா கொள்ளையதில் கொழுவியுள்ள உள்ளத்திற்கு கொஞ்சமேனும் ஆறுதல்-நான் கூற இங்கு விளைகின்றேன்! ஜும்ஆ எனும் தொழுகையதில் நுழையவில்லை-நாமின்று என்றெண்ணி ஏங்கும் பல வதனமதின் உளக்குமுறல் தெரிகிறதே!- இங்கு ஐங்கால தொழுகை பல அனுதினமும் ஜமாஅத்துடன்…

கொரோனா கொள்ளையதில் கொழுவியுள்ள உள்ளத்திற்கு கொஞ்சமேனும் ஆறுதல்-நான் கூற இங்கு விளைகின்றேன்! ஜும்ஆ எனும் தொழுகையதில் நுழையவில்லை-நாமின்று என்றெண்ணி ஏங்கும் பல வதனமதின் உளக்குமுறல் தெரிகிறதே!- இங்கு ஐங்கால தொழுகை பல அனுதினமும் ஜமாஅத்துடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *