மாற்றாற்றலுடையோர்

  • 15

கானகத்தில் வீசும்
தென்றலைப் போல்
என் மனமும் ஊசலாடுகிறது
எம் சகோதர உறவுகளான
வலுவிழந்தோர் நிலையெண்ணி

எனினும் நான் உன்னைக் கண்டு
பரிதாபப்படமாட்டேன்-கண்ணே!
பரிதாபப்படமாட்டேன்

அங்கவீனமாய்ப் பிறந்தது-உன் தவறன்று
அது ஏக இறைவன் வகுத்த விதி

மாற்றாற்றலுடையோரெனும் பெயர் தாங்கி
மாற்றங்கள் பல காணாது
சாதிக்கும் சவாலாய்-அதை நீ கொள்ளாது
வீழ்ந்து கிடப்பதே-உன் தவறு

மனிதா! இன்றிலிருந்தே புறப்படு!
உன் வெற்றிப் படியை நோக்கி…

இறைவன் ஒன்றையெடுத்தால்
பலவற்றைக் கொடுக்கும்
ஆற்றலுல்லவன்
தளராதே மனிதா! தளராதே!

நீயும் ஓர் மனிதப் பிறவியே!
இதை என்றும் மறவாதே!
இலைமறை காய் போல்
உன்னுள்ளும் பல்லாற்றல்…

சமூகத்தின் சோம்பேறிகள்
உன்னையோர் அடையாளமாய்
வெளியுலகுக்குக் காட்டி
சாதனைகள் பல புரிந்து
சரித்திரங்கள் பல படைக்க
தாமதம் வேண்டாம்-கண்ணே!
இன்றே புறப்படு-உன் புதுவாழ்வை நோக்கி…

J.Noorul Shifa
SEUSL

கானகத்தில் வீசும் தென்றலைப் போல் என் மனமும் ஊசலாடுகிறது எம் சகோதர உறவுகளான வலுவிழந்தோர் நிலையெண்ணி எனினும் நான் உன்னைக் கண்டு பரிதாபப்படமாட்டேன்-கண்ணே! பரிதாபப்படமாட்டேன் அங்கவீனமாய்ப் பிறந்தது-உன் தவறன்று அது ஏக இறைவன் வகுத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *