உள ஆரோக்கியம்

  • 25

ஒரு மனிதன் ஆரோக்கியமானவனாக வாழ அவன் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளிலும் அதனோடு இணைந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவசியமாகும். ஆனால் இன்று உலகில் வாழும் பெரும்பாலானவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரும் பிரச்சினையே மனஅழுத்தம் ஆகும். இம் மனவழுத்தம் ஒருவரிடம் குடிகொள்ளுமானால் அது அவனை பல்வேறு இன்னல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அந்தவகையில் இம் மனவழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது கட்டாயத் தேவையாகவுள்ளது. எனவே இக் கட்டுரையின் கீழ் உள ஆரோக்கியம் என்றால் என்ன?, இவ் உள ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் அவ் உள ஆரோக்கியத்தைப் பேண இஸ்லாமிய வழிகாட்டல்கள் எவ்வாறமைந்துள்ளன? போன்ற தலைப்புக்களின் கீழ் நோக்குவது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென நினைக்கின்றேன்.

எனவே இதனடிப்படையில் உள ஆரோக்கியம் என்பது பொதுவாக உள்ளமானது கவலைகள், துன்பங்கள், சோகங்கள் என்பவற்றில் இருந்து விடுபட்டு தான் எதிர் கொள்கின்ற சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து பிரச்சினைகளை எதிர் கொண்டு மனமகிழ்வுடனும் நிம்மதியுடனும் வாழும் நிலையே உள ஆரோக்கியம் என்பதால் கருதப்படுகின்றது.

இவ் உள ஆரோக்கியத்தைப் பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் நோக்குமிடத்து அவை மற்றவர் மீது கொள்ளும் பொறாமை, காழ்ப்புணர்வு மற்றும் பெருமை, ஓர் விடயத்தில் தீவிர ஈடுபாடு, தோல்விக்கு அஞ்சுதல், அதனை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையின்மை, நேர முகாமைத்துவமின்மை, கிடைத்ததைக் கொண்டு திருப்தியுறும் மனநிலையின்மை, உலக மோகத்தில் மூழ்குதல் போன்ற பல்வேறு காரணிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவ்வாறான காரணிகள் உள ஆரோக்கியத்தைப் பாதித்து அவை மனிதனுக்கு இரத்த அழுத்தம், தலைவலி, தலைச் சுற்று, மாரடைப்பு போன்ற பல்வேறு வகையான நோய்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது.

எனவே இதனடிப்படையில் உள ஆரோக்கியம் என்பது பொதுவாக உள்ளமானது கவலைகள், துன்பங்கள், சோகங்கள் என்பவற்றில் இருந்து விடுபட்டு தான் எதிர் கொள்கின்ற சவால்களை வெற்றிகரமாக முகங்கொண்டு மனமகிழ்வுடனும் நிம்மதியுடனும் வாழும் நிலையே உள ஆரோக்கியம் என்பதால் கருதப்படுகின்றது.

எனவே இவற்றையெல்லாம் தவிர்த்து உள ஆரோக்கியத்துடன் வாழ இஸ்லாம் 1440 வருடங்களுக்கு முன்பே பல நடைமுறைகளையும் செயற்பாட்டுத் திட்டங்களையும் வகுத்துத் தந்துள்ளதோடு அதனை நபியவர்கள் மூலம் செயற்படுத்தியும் காட்டியுள்ளமை சிறப்பிற்குரியதாகும். அந்தவகையில் ஆரம்பமாக எந்தவொரு விடயத்தை மேற்கொள்ளும் போதும் அதற்கு ஆரம்பமாக இஃலாஸ் எனும் மனத்தூய்மையைக் கடைபிடிக்குமாறு இஸ்லாம் போதிக்கின்றது. அதாவது எந்தவொரு செயலைச் செய்யும் போதும் மக்களுக்காகவோ பெயருக்காகவோ புகழுக்காகவோ மேற்கொள்ளாமல் அல்லாஹ்விற்காக என்ற இஃ;லாஸான மனத்தூய்மையுடன் செய்யுமாறே பணிக்கின்றது. இவ்வாறான உளத்தூய்மையுடன் அப்பணியை மேற்கொள்ளும் போது அச்செயலின் மூலம் அதற்குரிய கூலியை அல்லாஹ்விடம் மாத்திரமே எதிர்பார்த்திருக்கும் நிலை உருவாகின்றது. இதனால் ஏனையோரின் விமர்சனங்கள், பழிச்சொல் போன்றவற்றிற்கு இலக்காகும் போது ஏற்படும் கவலை, துன்பம் என்பன தவிர்க்கப்பட்டு மன நிம்மதியுடன் வாழ வழி உருவாகின்றது.

அடுத்து தௌபா எனும் வழிமுறையை இஸ்லாம் அனுமதித்ததன் ஊடாகவும் நாம் செய்த பாவங்களுக்காக உடனே அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு மீள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது. இதன் மூலம் அல்லாஹ் நிச்சயம் மன்னிப்பான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உருவாகி உள்ளத்தில் உள்ள சுமை குறைவதோடு மீண்டும் அப்பாவத்தின்பால் செல்ல ஓர் வெட்க உணர்வு உருவாகி விடுகின்றது. இவ்வாறான இவ் உணர்வு காலப் போக்கில் பாவத்தின் மீது வெறுப்பை உருவாக்கி பாவங்களை விட்டு மனிதன் தவிர்ந்து வாழ்வதற்கான வழியை உருவாக்குகின்றது. எனவே இவ்வாறு ஒரு மனிதன் பாவங்களை விட்டுத் தூரமாவதால் அவன் நிம்மதியோடும் உள அமைதியோடும் வாழ முடியும்.

அதுமட்டுமல்லாது ‘திக்ர்;’ எனும் அல்லாஹ்வின் நினைவாலும் உள்ளத்தில் அமைதி நிலை உருவாவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அல்லாஹ்வை தனிமையில் இருந்து தியானிக்கும் போதும் அவனது ஆற்றல்கள்இ அருட்கொடைகள் போன்றவற்றை சிந்தித்துப் பார்க்கும் போதும் உள்ளத்தில் ஒருவித அமைதி நிலை உருவாகின்றது. இது உள ஆரோக்கியத்திற்கு மிகப் பெரும் உந்து சக்தியாகும்.

……..அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலமே உள்ளங்கள் அமைதியடைகின்றன(13:28)

என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இன்னும் ஸுஹ்த் என்ற உலகப்பற்றற்ற தன்மை மூலமும் ஒரு மனிதன் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு உள ஆரோக்கியத்துடன் வாழ முடியும். ஆனால் இன்று மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உலக மோகத்தில் மூழ்கி மேற்கத்தேய கலாசார நாகரீக வாழ்விற்குள் சிக்குண்டு ஆடம்பர வாழ்வை விரும்பி நிற்பதனை நாம் காணலாம். இவ்வாறு ஆடம்பர வாழ்விற்குள் நுழைந்தே இன்று பலர் தம் நிம்மதியைத் தொலைத்தவர்களாக அழைந்து திரிகின்றனர். ஆனால் இஸ்லாமோ மனிதனை முற்றுமுழுதாக உலகிற்காக வாழ்ந்து மறுமையைப் புறக்கணிக்குமாறோ அல்லது உலகைத் துறந்து முற்றுமுழுதாக மறுமைக்காக அர்ப்பணித்து வாழுமாறோ பணிக்கவில்லை. மாறாக நடுநிலையில் நின்று நோக்குமாறே பணிக்கிறது. சுருக்கமாக “இம்மை மறுமையின் விளைநிலம்” என்றே இஸ்லாம் போதிக்கின்றது. இவ்வாறு ஒருவர் உலக வாழ்வில் மூழ்காமல் அதனைக் கட்டுப்பாட்டுடன் அனுபவித்தால் நாம் எதிர்பார்க்கும் உள ஆரோக்கியத்தைப் பெறலாம்.

அதுமட்டுமல்லாது தவக்குல் எனும் அல்லாஹ்வின் மீது பாரம்சாட்டல் மூலமாகவும் ஒருவர் உள ஆரோக்கியத்தைப் பெறலாம். அதாவது நாம் எம்மால் இயன்றளவு முயற்சியை முழுமையாகச் செய்து விட்டு அச் செயலின் முடிவை அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிடலாகும். எனவே இதன் மூலம் இஸ்லாம் ஒரு மனிதனை முயற்சியற்ற மனிதனாக ஆக்குவதை விட்டும் தவிர்த்து முயற்சியோடு கூடிய பொறுப்புச் சாட்டும் உணர்வைத் தோற்றுவித்து மனிதனை ஓர் ஆளுமை மிக்கவனாகவும் செயற்பாட்டுடன் கூடிய மனிதனாகவும் மாற்றுகின்றது. எனவே இவ்வாறான தவக்குல் என்ற வழிமுறை மூலமும் ஒருவனிடத்தில் வெற்றி, தோல்விகளை சமநிலையோடு ஏற்றுக் கொள்ளும் மனநிலை உருவாகி வாழ்வில் ஏற்படும் எல்லாக் கஷ்ட நஷ்டங்களின் போதும் பொறுமையோடு தாங்கிக் கொள்ளும் மனோதிடத்தையும் தருகின்றது. மேலும் பொறாமை, பெருமை போன்றவற்றிலிருந்து விடுபட்டு கிடைத்ததைக் கொண்டு திருப்தியுறும் மனோநிலையையும் இஸ்லாம் எமக்குக் காட்டித் தந்துள்ளது.

……. நிச்சயமாக கர்வமுடையோராகஇ வீண் பெருமையுடையோராக இருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (4:36)

என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அத்தோடு,

நெருப்பு விறகை எரிப்பது போல் பொறாமை நன்மையை எரித்து விடும். (அல்-ஹதீஸ்)

எனவே ஒருவரையொருவர் மிகைக்க வேண்டும். உலகில் புகழ், பதவி, பட்டங்களை அடைய வேண்டும் என்ற அளவு கடந்த பேராசை பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபட்டு கிடைத்ததைக் கொண்டு அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி வாழும் போது அங்கு நாம் உள அமைதியையும் நிம்மதியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்னும் ‘வரஉ’ எனும் பேணுதல் மூலமும் ஒருவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மன நிம்மதியைப் பெற முடியும். ஹலால்-ஹராம் வரையறைகளை உணவு, உடை மற்றும் கொடுக்கல்-வாங்கல் போன்ற அன்றாட நடவடிக்கைகள், செயற்பாடுகள் போன்றவற்றில் பின்பற்றும் போது அதன் மூலம் பேணுதல்மிகு வாழ்வை வாழும் சூழல் உருவாகி உள ஆரோக்கியமிக்க மனிதராக வாழவும் அது உறுதுணையாக அமையும். “ஹலாலும் தெளிவானது.ஹராமும் தெளிவானது. இவை இரண்டிற்குமிடையே சந்தேகத்திற்;கிடமானவையும் உண்டு………” என இஸ்லாம் போதிக்கின்றது. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான விடயங்களிலிருந்து தவிர்ந்து வாழ்வதன் மூலமும் ஒருவர் உள ஆரோக்கியத்தைப் பெறலாம்.

இதுதவிர “துஆ” என்ற மிகப் பெரும் பொக்கிஷத்தையும் இஸ்லாம் எமக்களித்துள்ளது. இதன்மூலம் எம் எல்லா தேவைகளையும் துன்ப துயரங்களையும் அல்லாஹ்விடம் அழுது முறையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன்மூலம் உள்ளத்தில் உள்ள சோர்வு, கவலை, சஞ்சலம் என்பன குறைந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் கவலைகளை நீக்குவான் என்ற துணிவும் தைரியமும் உருவாகின்றது. “துஆ முஃமினின் ஆயுதமாகும்”(அல்-ஹதீஸ்). இத் துஆவின் மூலம் எதனையும் சாதிக்க முடியும்.

எனவே தொகுத்து நோக்கும் போது இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டியுள்ளது.அந்தவகையில் அதிலோர் அங்கமான உளவளத்துறைக்கும் வழிகாட்டி அதன்மூலம் சிறந்த உள ஆரோக்கியத்தைப் பெற இஃலாஸ், ஸுஹ்த், தௌபா, வரஉ, தவக்குல், துஆ போன்ற வழிமுறைகளையும் காட்டித் தந்துள்ளதனை நாம் மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும். எனவே அன்றாடம் நாம் எதிர் கொள்ளும் மன அழுத்தங்களை இஸ்லாம் காட்டித் தந்துள்ள வழிமுறைகள் மூலம் எதிர் கொண்டு அதன்மூலம் அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற முயற்சிப்போமாக! அதற்கு எல்லாம் எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மனைவருக்கும் நல்லருள்பாலிப்பானாக!

மன அழுத்தம் குறைத்திடவே
மறையோன் வழி நடந்திடுவோம்
உளநலமுடன் வாழ்ந்திடவே
உள்ளமதைப் பேணிடுவோம்

J.Noorul Shifa
2nd Year
SEUSL

ஒரு மனிதன் ஆரோக்கியமானவனாக வாழ அவன் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளிலும் அதனோடு இணைந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவசியமாகும். ஆனால் இன்று உலகில் வாழும் பெரும்பாலானவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகப்…

ஒரு மனிதன் ஆரோக்கியமானவனாக வாழ அவன் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளிலும் அதனோடு இணைந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவசியமாகும். ஆனால் இன்று உலகில் வாழும் பெரும்பாலானவர்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிகப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *