கொரோனா விடுமுறையில்…

  • 10

கொரோனாவின் விடுமுறையில்
குதூகலிக்கும் குழந்தைகளே!
சற்றிங்கு வாருங்கள்
சளைக்காமல் பேசிடவே!

ஆரோக்கியமும் ஓய்வுமது
இறையோனின் அருட்கொடையாம்
எனும் இறைதூதர் வாக்கதனை
உணர்ந்திட்டு நீ-இங்கு
வகுத்திடு உன் நேரமதை!

நாள் முழுதும் உறங்காமல்
நாளை நீ கழிக்காமல்
நாளைய உன் வெற்றிக்காய்
நாட்டிடு உன் பயிர்களதை!

வாசிப்பெனும் காற்றை-நீ
சுவாசி உன் வாழ்வதனில்
உற்றார் நலனதிலும்
உதவி பல நல்கிடுவீர்!

ஆற்றல் பல வளர்த்திடும்
அருமையான பொழுதினிலே!
அளந்திடு உன் இலக்குதனை-அதை
அடைந்திடவே முயன்றிடு-நீ

மொழிவளமும் நீ வளர்க்க
முறையான தருணமிது!
முஹாஸபா செய்திடவும்
முத்தான தருணமிது!

இனிய இவ்வேளையிலே
இபாதத்தும் பல செய்து
இறையோனை நெருங்கிடவே
இழப்பின்றி இணைந்திடு-நீ

சமூகத்தின் எழுச்சிக்காய்
சரித்திர வரலாற்றை
சாதிக்க நீ-இன்று
வரைந்திடு உன் திட்டமதை
வல்லோனின் உதவியுடன்!

J.Noorul Shifa
SEUSL

கொரோனாவின் விடுமுறையில் குதூகலிக்கும் குழந்தைகளே! சற்றிங்கு வாருங்கள் சளைக்காமல் பேசிடவே! ஆரோக்கியமும் ஓய்வுமது இறையோனின் அருட்கொடையாம் எனும் இறைதூதர் வாக்கதனை உணர்ந்திட்டு நீ-இங்கு வகுத்திடு உன் நேரமதை! நாள் முழுதும் உறங்காமல் நாளை நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *