நித்யா… அத்தியாயம் -30

  • 15

கார்த்திக் கோபத்தின் உச்சியில் நின்றான். அவனுள் பல தடுமாற்றங்கள். தலையை கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவனது நிலையைப் பார்த்தவன்

”டேய்…. என்ன இது ? ஓஹ்… பொண்டாட்டிய நெனச்சியா? ” வாய்விட்டுச் சிரித்தான் விக்னேஷ்.

”டேய்… போடா… எனக்கு தெரியும் என்னோட கல்யாணி என்ன தா நம்புவா…”

”ஓஹ்… அப்டியா? பாக்கலாம்….” கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

”டேய்…. இவனுக அந்த எடத்துல என்ன பண்ணாணுகளோ?” கார்த்திக்கைப் பார்த்தவன்.

”டேய்… அங்க போறன்டு சொன்னா… அவள் பவித்ராவுகும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு போல…” கார்த்திக்கின் முகம் வியர்க்கத் தொடங்கியது.

”சரி…சரி… அவனுகளாள எதயும் புடிக்க முடியாது… ”

”போடா….” கார்த்திக் அலட்சியமாகக் கூறினான்.

”நீ பாருவே நா செய்ய போறத…” அட்டகாசமாகச் சிரித்தான் விக்னேஷ்.

”மச்சான்… எனக்கென்னமோ செய்யகூடாதத செஞ்சிட்டமாதிரியே ஒரு பீல் டா…” அவனை முறைத்தவன்,

”போடா…. எனக்கு கெடச்சாதவ, யாருக்கும் கெடக்க கூடாது…” அவனுடைய முகத்தில் அசட்டுப் புன்னகை படிந்து மீண்டது.

அதை ஒற்றை நொடியில் கண்டான் கார்த்திக்.

***********************

வாசலிலே நின்றவளைப் பார்த்து,

”பவி… வா உள்ள…”

அவளது முகத்தில் பல கேள்விக்குறிகளைக் கண்டவன்

”ஹேய்… என்ன யோசன? ”

”இல்ல இங்க எப்டி லட்சுமி அக்கா….” அவள் கேட்கும் போதே லட்சுமி புன்னகையுடன் எதிர்பட்டாள்.

”நீ உள்ள வா… சொல்றன்….”

அவள் உள்ளே சென்றாள். அங்கே சுவரில் மாட்டப்பட்ட ஓவியங்களைக் கண்டவளின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

 

கார்த்திக் கோபத்தின் உச்சியில் நின்றான். அவனுள் பல தடுமாற்றங்கள். தலையை கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவனது நிலையைப் பார்த்தவன் ”டேய்…. என்ன இது ? ஓஹ்… பொண்டாட்டிய நெனச்சியா? ” வாய்விட்டுச் சிரித்தான் விக்னேஷ்.…

கார்த்திக் கோபத்தின் உச்சியில் நின்றான். அவனுள் பல தடுமாற்றங்கள். தலையை கைகளால் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அவனது நிலையைப் பார்த்தவன் ”டேய்…. என்ன இது ? ஓஹ்… பொண்டாட்டிய நெனச்சியா? ” வாய்விட்டுச் சிரித்தான் விக்னேஷ்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *