நித்யா… அத்தியாயம் -33

  • 6

லட்சுமி சொல்ல ஆரம்பித்தாள். நித்யா எப்போதும் தனது முகத்தில் புன்னகை பூசியே திரிவாள். அன்றும் இளம் செம்மஞ்சள்நிற சல்வாரில் அழகின் வடிவாகவேயானாள்.

”ஹாய் நித்தி..”

அவள் திரும்பிப் பாராமலே சென்றாள். அவளுக்கு பிடிக்காத ஒரேயொரு குரலது. அவன் மீண்டும் அவளது முன்னால் ஓடி வந்தான். முகத்தில் கடுகு பொறிந்தது.

”ஹேய்…. ஒனக்கு கொழும்பு ஏறிபோச்சா? பதிலே சொல்லாம போற?” அவள் முகம் சற்றுச் சுருங்கியது.

”ஹலோ மிஸ்டர் விக்னேஷ்… எனக்கு புடிக்காதவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல அவசியமில்ல…”

” ஓஹ்… அப்டியா? சரி..சரி…. எல்லா ஆட்டமும் அவன் வரபோய் தானே.. பாரு…” கடுமையான குரலில் விரலை சுட்டிச் சென்றவனை அலட்சியமாகக் கடந்தாள்.

”நித்தி… ஒன்ன பொஸ் கூப்டாரு… போ…”

லட்சுமி சிரிப்புடன் கூறினாள். மீண்டும் அவளது முகம் புன்னகை பூத்தது. கண்ணாடிக் கதவை மெல்லத் தட்டியவளை நோக்கி,

”கம் இன் சுவிட்டி” இனிமையான குரல் காற்றில் கலந்து அவளை வந்தடைந்தது.

”ஹாய் பொஸ்…” வினோத்தின் முகத்தில் சிரிப்பு மறைந்தது.

”சுவிட்டி… அப்டி சொல்லாத என்டு எத்தன தடவ சொல்லியிருக்கேன்.”

”ஓகே…ஓகே மிஸ்டர் ஸேர்….” இனம்புரியா உணர்வு முகத்தில் தெரிய ,

”என்ன….?”

”ஒன்னுமில்ல…. ஏ கூப்புட்டீங்க?” அவளது தவிப்பை உணர்ந்தவன் நகைத்தான்.

”ஹேய்…. என்ன சிரிப்பு முத்து உதிர்வது போல…” அவளும் சிரித்தாள்.

”சுவிட்டி… ஒன்ட சிரிப்ப வர்ணிக்க தெரியல…”

”ஐயோ… போதும் ஐஸ் வெச்சது… சீக்கிரம் சொல்லுங்க? விக்னேஷ் வரப்போறாரு…”

”ப்பூ…. அவனுக்கா நீ இவ்ளோ நாளா பயந்த… லூஸு…” அவளது முகம் மாறுவதை அவதானித்தவன்,

”கூல்… ஈவினிங் ஒனக்கு புடிச்ச எடத்துக்கு போலாம் நாலு மணிக்கி வேர்க் எல்லாம் முடிச்சிடு சுவிட்டி.”

நித்யாவின் கண்கள் மின்னின.

”எங்க போகப் போற”

”ம்ஹும்…. அது சீக்ரட்….” அதே சமயம் கதவு திறக்கும் சப்தம் கேட்டு இருவரும் திரும்பினர்.

”வாடா…” வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷை அவன் வரவேற்றான்.

”சரி…. நா போறன்.”

நித்யா அமைதியாக நகர்ந்தாள். விக்னேஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

லட்சுமி சொல்ல ஆரம்பித்தாள். நித்யா எப்போதும் தனது முகத்தில் புன்னகை பூசியே திரிவாள். அன்றும் இளம் செம்மஞ்சள்நிற சல்வாரில் அழகின் வடிவாகவேயானாள். ”ஹாய் நித்தி..” அவள் திரும்பிப் பாராமலே சென்றாள். அவளுக்கு பிடிக்காத ஒரேயொரு…

லட்சுமி சொல்ல ஆரம்பித்தாள். நித்யா எப்போதும் தனது முகத்தில் புன்னகை பூசியே திரிவாள். அன்றும் இளம் செம்மஞ்சள்நிற சல்வாரில் அழகின் வடிவாகவேயானாள். ”ஹாய் நித்தி..” அவள் திரும்பிப் பாராமலே சென்றாள். அவளுக்கு பிடிக்காத ஒரேயொரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *