உன் வருகை எதற்காக

உலகம் உன்னால்
உறுதியற்று உயிர் வாழ்கிறது
சில உயிர்கள் உன் பெயரால்
உயிரற்று வீழ்கிறது

உலகிலுள்ள நோய்களைவிட
நீதான் உயர்ந்தவன் என்று என்னிக் கொண்டாயோ
எவ்வித நோயாக இருந்தாலும்
மரணம்தான் உயர் அந்தஸ்தை பெறும்
என்பதை அறிவாயோ

எதற்காக உனது வருகை இங்கு
ஏழைகள் வாழ்வை பறிக்கவா
இல்லை
நேர்மையற்றவர்கள் உடமையை
இழக்கவா
உடமை என்றது உயிராகிப் போகுதே

இதுவரை எதில் மரணம் என்பது
தெரியாது
இன்று முதல் அது உன்வசம்
என்பதை எம் மனமோ மறுக்காது

ஈன்ற தாயருகில்
இடைவெளிகள் தருகிறாய்
நீயோ இடைவிலகாது
எம்மை தொடர்கிறாய்

இயற்கை அனர்த்தங்கள் ஏராளம்
கண்டோம்
இப்படி உன்வருகை எதற்கு
பிஞ்சு முதல் தொடர்வது எதற்கு
உன் பிறப்பிடம் எங்கே
உயிரோடு அதை எறிப்பதற்கு!
ஆதங்கம் அடிவயிறு வரை
ஆனால் உன்னருகில் வர முடியவில்லை

அங்கங்கே கொடுமைகள்
ஆயிரக்கணக்கில் பறிபோகும்
உயிர்கள் கண்டு
உன் பிறப்பு நிகழ்ந்ததோ
ஆனந்தத்தில் அண்டம் சுற்றுக்கிறாய்
அன்னம் இன்றி வாழ்பவர் நிலை
அறிவாயா!

ஏரோட்டும் விவசாயி நிலை
உணர வைத்தாய்
விவசாயம் வீடுகளில்
பெருக வைத்தாய்
வீதிகளில் வீண்பேச்சு தவிர்க்க வைத்தாய்
கொலை கொள்ளை கற்பழிப்புகளை முடக்கி வைத்தாய்
கட்டியவள் ஆசை நிறைவேற்றிட
வைத்தாய்

காமக் கண்களை கதிகலங்க வைத்தாய்
நன்மைகள் நீ கோடி செய்திருக்கிறாய்
விலகாமல் இன்னும் ஏன் இருக்கிறாய்

உலக அழிவே இதில்தானா
நீயே அதில் உயர்வுதானா
சிட்டுக் குழந்தைகளுக்கும்
பட்டுத்துணி தேடுகிறோம்
விடிவு காலம் வேண்டி
காத்திருக்கிறோம் வீடுகளில்

சுடுகாட்டிலும் இடமில்லை
சீக்கிரம் விலகிவிடு !

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help