தர்மம் செய்து அதை Photo பிடித்தல்

  • 20

நிறைய Negatives comments இந்த தர்மம் செஞ்சிட்டு அத Photo பிடிச்சு போடுறாங்க இது விளம்பரம் அது இது னு ?

1st யாருக்கும் தீர்ப்பு சொல்லாதிங்க It depends on his faith, ஹராத்துல உழைச்சிட்டு அத வட்டிக்கும் குடுத்துட்டு அதுல வார இலாபத்துல பள்ளிக்கு உதவினவன் வெளில சொல்ல வானாம் அல்லாஹ்வுக்காக செஞ்சது என்றான்?

ஹலாலா உழைச்சி அவனால முடிஞ்சத ஒரு சமூகத்துக்கு நான் கொண்டு போறன் என்ன போல ஆர்வம் இருந்தா நீங்களும் கொண்டு போங்கனு ஒரு Photo பிடிச்சு போடுறான் Is this pride , Is this prohibited in islam?

மனசாட்சிய தொட்டு சொல்லு ஒரு பத்து ரூபா குடுக்குறதா இருந்தாலும் எவனாச்சும் பாக்குற டைம்ல அந்த மிஸ்கின்ட கைக்குல வெச்சிபோட்டு எதோ Thanos கிட்ட இருந்து உலக காப்பாத்தின Iron man மாதிரி எத்துன தடவ போயிருக்கம் அப்ப அது பெரும இல்லையா நண்பா ?

“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர் களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்”. (2:262)

இங்க சொல்லிக்காண்பித்தல் என்பது Photo க்கும் பொருந்துமா? அப்டினா இந்த இறை வசனம் பாருங்க

“நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே. ஏனெனில் அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும். ஆயினும் நீங்கள் அதனை மறைத்தே கொடுப்பது, அதுவும் ஏழைகளுக்கு கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த இருவகை தர்மமும் உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் ஆகும். நீங்கள் செய்யும் வெளிப்படையான மற்றும் மறைவான அனைத்தும் அல்லாஹ் நன்கு அறிவான்”. (2:271)

நிச்சயமாக வெளிப்படையான தர்மம் அடுத்தவனை தூண்டும், காச கடவுள் போல பொத்தி பிடிக்கும் ஒரு சில பீடைகளுக்கு வெறுக்கத்தான் செய்யும். ஆனா எல்லாரும் உங்களை போல பணப்பிரியர்கள் இல்ல நண்பா இங்க பசினா தன்னிடமுள்ள அனைத்தையும் தர்மம் செய்யும் மனிதனும் மனிதமும் வாழத்தான் செய்கிறது.

குடுக்குறத மறச்சி குடுனா அவன் என்ன கஞ்சாவா குடுக்கான் ?

ஏன்டா எத செய்தாலும் குறை கண்டு பிடிக்கிங்க போங்கடா போய் புள்ள குட்டிக்கு சரி செலவு செய்ங்க அதும் தர்மம் தான்.

Note: தர்மம் செஞ்சிட்டு Photo போடுறது தப்பில்ல, வாங்கின ஏழையின் முகத்தை சேர்த்து போடுவது பெரும் தப்பு. இந்த காரி துப்புற Gang Available ஆஹ் இருந்தா அப்டி பன்றவன் மூஞ்சில துப்பு.

பணத்தால தான் தர்மம் செய்யனும் னு இல்ல நண்பா இது இஸ்லாம்! செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொருத்தே அமைகிறது – Prophet muhammed saw

உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமே – Prophet muhammed saw

உன் மனைவிக்கு உணவூட்டுவது , முத்த மிடுவதும் தர்மமே – Prophet muhammed saw

வீதியில் இடையூராக இருப்பவற்றை அகற்றுவதும் தர்மமே – Prophet muhammed saw

இப்டி நிறைய இருக்கு ஆக, பணத்த தான் குடுக்க முடிலனாலும் பசினு வாரவனுக்கு சாப்பாடாச்சும் குடு இல்லனா தண்ணியாச்சும் குடு ..

“If i hurt anybody – Apologises Brothers”

Suhail Hassen

நிறைய Negatives comments இந்த தர்மம் செஞ்சிட்டு அத Photo பிடிச்சு போடுறாங்க இது விளம்பரம் அது இது னு ? 1st யாருக்கும் தீர்ப்பு சொல்லாதிங்க It depends on his faith,…

நிறைய Negatives comments இந்த தர்மம் செஞ்சிட்டு அத Photo பிடிச்சு போடுறாங்க இது விளம்பரம் அது இது னு ? 1st யாருக்கும் தீர்ப்பு சொல்லாதிங்க It depends on his faith,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *