உடல் எரிக்கப்பட்டது உண்மைதான் அதன் பின்னர் நாம் என்ன செய்வது?

கலவரம் செய்தால் சரியா?

ஆர்ப்பாட்டம் நடாத்தினால் சரியா?

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தா சரியா?

விமர்சன கட்டுரைகள் வரைந்தால் சரியா?

சமூக வலைத்தளங்களில் இதை கண்டித்து எழுதினால் சரியா?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்க்கு ஏசினால் தான் சரியா?

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இது எமது பாதுகாப்பு, நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு முடிவு இதை எங்களால் ஜீரணிக்க முடியாது என்பது தான் உண்மை ஆனாலும் இந்த விடயத்தில் நாம் பொறுமையாக இருக்க வேண்டியது தான் எங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான நிலையாகும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை எங்களுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் தெளிவாக வழிக்காட்டி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த வகையில் அந்த ஜானாஸாவுடைய விடயத்தில் இஸ்லாமிய மார்க்க வரையறையில் சிறந்த ஒரு நிலைப்பாட்டை அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

எனவே எமது வீடுகளில் நாம் அந்த மனிதருக்காக துஆ செய்வோம் யா அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாக்கியத்தை கொடுப்பாயாக ஆமின்.

அவருடைய குடும்பத்தினருக்கும் உள அமைதியை வழங்குவாயாக ஆமின்.

மேலும் இந்த நிலையை சீர் செய்து உலக மக்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வாயாக ஆமின்.

பூரா உலக மக்களின் பாவங்களையும் மன்னித்து எங்களுக்கு உனது அருளை தந்தருள்வாயாக ஆமின்.

எல்லா விடயங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்ற பூரண நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் முறையிடுவோம். அல்லாஹ் எங்களுடைய முயற்சியை வீணடிக்க மாட்டான் அல்லாஹ்வுடைய அருள் எங்களுக்கு வந்தே தீரும் இன்ஷா அல்லாஹ்.

நாங்கள் அனைவரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, நாட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு பொறுமையாக இருப்போம். நிச்சயமாக பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.

குறிப்பு: புகைப்படம் இந்தியா கலாசார புகைப்படம்.

Nafees Naleer (Irfani)
BA.(R) (SEUSL)
Diploma in counseling (R)
Editor of veyooham media center.

One Reply to “உடல் எரிக்கப்பட்டது உண்மைதான் அதன் பின்னர் நாம் என்ன செய்வது?”

Leave a Reply

Your email address will not be published.