இலங்கை முஸ்லிம்களுக்கு தேவையான ஊடகம் எது?

  • 90

இன்றைய எனது ஆய்வு இலங்கை முஸ்லிம்களின் ஊடகத்துறை சார்ந்ததாகும். இலங்கையை பொறுத்தவரையில் ஊடகத்துறையை பிரதானமாக இரண்டு வகையாக பிரித்து நோக்கலாம். தேசிய ஊடகம், சமூக வளைத்தளம் என்பன அவையாகும்.

தேசிய ஊடகம் என்பது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்பன உள்ளடங்குகின்றன. சமூகவளைத்தளம் என்ற பகுதி Facebook, Twitter, Instragram, What sup, Viber என விரிந்து கொண்டு செல்கின்றது.

இதில் முஸ்லிம் சமூகத்திற்கு குரல் கொடுப்பதற்கு பத்திரிகை, இணையதளம், சமூகவளைத்தளம் என்பன காணப்பட்டாலும் வானொலியும், தொலைக்காட்சியும் இல்லாமை பாரிய குறைபாடாகும். என்றாலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் மொழிப் பிரிவு வருமானம் உழைப்பது இலங்கை முஸ்லிம் உம்ரா வர்த்தகர்களின் விளம்பரத்தின் மூலம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். தினந்தோறும் முஸ்லிம் நிகச்சி என்ற பெயரில் 4 மணிநேர ஒலிபரப்பில் சுமார் இரு மணிநேர நமது உம்ரா வியாபாரிகளின் விளம்பரம் ஒளிபரப்பாகிறது. அதற்காக நமது முஸ்லிம் சமூக உலமாக்களும், வர்த்தகர்களும் செலவிடும் பணத்தை கொண்டு நமக்கென ஓர் வானொலியை அல்லது தொலைக்காட்சியை உருவாக்கலாம். என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சிந்திக்குமா நமது உம்ரா உலமாக்கள்?????

இன்று சமூகவளைத்தளம் இலங்கை அரசுக்கே ஓர் தலையிடியாக உள்ளது. அதில் முஸ்லிம் சமூகம் பற்றி பேசுவதால் நமக்கென ஓர் தேசிய ஊடகமாக வானொலியோ, தொலைக்காட்சியோ தேவையில்லை என தவறாக மதிப்பிட வேண்டாம். எனின்றால், சமூக வலைத்தளம் என்பது ஓர் வாராந்த சந்தை போன்றது. அங்கு உமக்கு இலகுவாக புதிய தகவல்களைப் பெறலாம். ஆனால் 100% உண்மையான தகவல்களைப் பெறுவது கடினம். சமூகவளைதளம் என்ற பகுதியில் இலங்கையில் முதலிடம் உள்ளது Facebook ஆகும். அதுவும் புதிய உண்மையான தகவல்களைத் தருவதாக நினைக்க வேண்டாம். அந்நிறுவனம் உமது Facebook பாவனையை மதிப்பீடு செய்து உமகேற்ற தகவல்களை மாத்திரமே வழங்கும். அதாவது நீர் ஓர் இனவாதியாக இருந்தால் இனவாதத் தகவல்களையும், சகவாழ்வு பற்றி தேடினால் சகவாழ்வு தகவல்களையும் வழங்கும். ஆனால் இன்று இலங்கை முஸ்லிம் சமூக இளைஞர்களின் சமூகவளைத்தளப் பாவனை பாதையில் வாகனங்கள் செல்கின்றபோது பின்னால் குறைத்துக் கொண்டு ஓடுகின்ற நாய்கள் போல்தான் உள்ளது. அதாவது நாட்டில் ஓர் பிரச்சினை ஏற்பட்டவுடன் அதுபற்றி பேசுகின்றனர். காலம் செல்ல செல்ல அதுக்கான நிரந்தர தீர்வை முன்வைக்க முன் இன்னொரு பிரச்சினை ஏற்பட்டால் அதுபற்றி பேசுகின்றனர். தீர்வுகள் இன்றி பிரச்சினை பற்றி மட்டும் பேசிக்கொண்டு செல்கின்ற நிலை காணப்படுகின்றது.

நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் அம்பாறை கலவரம், கண்டி கலவரம், தென்னங்குமுற பள்ளி விவகாரம், ஹக்கானிய மதரச விவகாரம் என்பன கடந்த 7 வாரங்களுக்குள் இலங்கை சமூகத்தில் ஏற்பட்ட சில இஸ்லாத்திற்கு எதிரான உள்ளக மற்றும் வெளியாக தாக்குதல்களாகும்.

சமூகவளைதளத்தை எடுத்த குறித்த நிகழ்வுகள் ஏற்பட்டவுடன் அதுபற்றி பேசியதை அவதானிக்கலாம். ஆனால் சில பிரச்சினைகள் முடிந்தவுடன் அதுபற்றி நாம் மறந்தே போய்விடும் நிலைதான் உள்ளது. இதில் நான் முதலாவதாக குறிப்பிட்ட அம்பாறை கலவரத்தை இன்று சமூகம் மறந்துள்ளது. ஆனால் அன்று நமக்கெதிராக முன்வைத்த உணவில் மலட்டுத்தன்மை மருந்தை கலப்பது என்ற வதந்தி வயது வேறுபாடின்றி மாற்று சமூகத்தின் மனங்களில் ஆழமாக பதிந்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனவே நாம் நமது ஊடகப் பாவனை பற்றி மீள் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதொடு சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளோம். நம்மை ஊடகத்துறையில் பலபடுத்த நமக்கென ஓர் தொலைக்காட்சி, வானொலியை ஆரம்பிக்க வேண்டும். இன்று நமது ஊடக தகவல் பரிமாற்றம் இனவாத தாக்குதல், விபத்துக்கள், அரசியல் விமர்சனம், இஸ்லாமிய பிக்ஹ் ஆய்வு என்று குறுகிய வட்டத்திற்குள் உள்ளது. நாம் நமது தகவல் பரிமாற்றத்தை இஸ்லாமிய பொருளாதரம், விஞ்ஞானம், முகாமைத்துவம், கிராமிய நிலையான அபிவிருத்தி, இலக்கியம், வரலாறு, மருத்துவம், சட்டம், வணிகம், கணக்கியல், பொறியியல் என விரிவு படுத்த வேண்டும்.

நமது ஊடகவியாளர்கள் பிரச்சினையை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் முன்வைக்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முயற்சிக்க வேண்டும். இன்று பெரும்பாலான முஸ்லிம் இளஞர்கள் ஊடகவியாளர் என்ற பெயரில் தீர விசாரிக்காமல் கிடைக்கின்ற செய்தி மற்றும் தகவல்களை பரிமாறுகின்றனர். குறிப்பாக நாடாளாவிய ரீதியில் நமது சமூகம் வெறும் செய்திகளை பரிமாறும் தளத்தில் உள்ளனர். இந்நிலைமை மாறி நாம் உண்மையான தகவல்களை உருவாக்கி பலமாக மக்கள் மயப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இறுதியாக தென்னிலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஊடகத்துறை சம்பந்தமாக சில விடயங்களை முன்வைக்க வேண்டும். மாத்தறை மாவட்டம் பற்றி நாளாந்தம் சிங்கள பத்திரிகைகளில் குறைந்தது ஒரு பக்கத்திற்கு செய்திகள் வரும்போது தமிழ் நாளேடுகளில் ஒரு வாரத்திற்கு ஒரு பக்கத்திற்கு கூட மாத்தறை மாவட்ட செய்தி வருவதில்லை.

நமக்கென உறுதியாக பேச பாராளுமன்றத்திலும், தென்மாகாண சபையில் உறுப்பினர்கள் இல்லை, ஆசிரியர் நியமங்களில் பல தென்பகுதி பாடசாலைகள் ஆண்டுதோறும் புறக்கணிக்கப்படுகின்றது. இவை பற்றி தமிழ் ஊடகங்களும் பேசுவதில்லை. நமக்கென ஊடகவியாளர்கள் இல்லையா அல்லது நாம் நமது பிரச்சினையை சொல்ல பயப்பிடுகிறோமா

அதாவது தென் இலங்கையை பொறுத்தவரையில் அனைவரும் தேசிய ஊடகங்கள் வாயிலாக தமது தேவைகளை முன்வைக்க முன்வருவதில்லை. இவ்வாறு நாம் மௌனமாக இருந்தால் நாம் தெற்கில் அடிமையாக மாற வேண்டி ஏற்படும்.

நமக்கு இன்று தெற்கில் ஆயுதத்தால் தாக்குவதில்லை மாறாக தொழில் வாய்ப்பு மற்றும் ஆசிரியர் நியமனங்கள், வள ஒதுக்கீடு என்பன மூலம் புறக்கணிக்கப்படுகின்றது. இது பற்றி நாம் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்காமை காரணமாக நம்முடன் சேர்ந்து இன்னொரு சாரார் நமது கழுத்துக்களை அறுத்துக் கொண்டுள்ளனர்.

நாம் வெளியிடும் செய்திகள் அவசரமான ஆத்திரமூட்டும் செய்திகளாக உள்ளன. இந்நிலமை மாறி அமைதியான அறிவூட்டும் செய்திகளை வெளியிட வேண்டும்.

இந்நிலைமை மாறவேண்டும் என்றால் நாம் ஆன்மீகம், ஊடகத்துறை, சட்டம், அறிவியல், ஆளுமை, என பலதுறைகளில் முன்னேற வேண்டும். மேலும் நம்மிடம் உள்ள பொருளாதார பலத்தை கொண்டு நமது ஊடகத்துறையை பலப்படுத்த முடியும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும்.

Ibnuasad

இன்றைய எனது ஆய்வு இலங்கை முஸ்லிம்களின் ஊடகத்துறை சார்ந்ததாகும். இலங்கையை பொறுத்தவரையில் ஊடகத்துறையை பிரதானமாக இரண்டு வகையாக பிரித்து நோக்கலாம். தேசிய ஊடகம், சமூக வளைத்தளம் என்பன அவையாகும். தேசிய ஊடகம் என்பது பத்திரிகை,…

இன்றைய எனது ஆய்வு இலங்கை முஸ்லிம்களின் ஊடகத்துறை சார்ந்ததாகும். இலங்கையை பொறுத்தவரையில் ஊடகத்துறையை பிரதானமாக இரண்டு வகையாக பிரித்து நோக்கலாம். தேசிய ஊடகம், சமூக வளைத்தளம் என்பன அவையாகும். தேசிய ஊடகம் என்பது பத்திரிகை,…

One thought on “இலங்கை முஸ்லிம்களுக்கு தேவையான ஊடகம் எது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *