சோதனை

  • 9

கவிஞனுக்கு கற்பனையில்
காவியம் படிப்பதும் சோதனையாம்
கலைஞனுக்கு கலைகளால்
கரைகடந்து கவிஞனென்று
பெயர் எடுப்பதும் சோதனையாம்

பட்டங்கள் பல பயின்று
பதவிகளில் தடம் பதிப்பதுவும்
ஒரு சோதனையாம்
அலைகடல் கடந்து சென்று
குடும்பத்திற்கு அல்லியிறைப்பதுவும்
ஒரு சோதனையாம்

மொத்தத்தில் – ஒரு
அணுத்துணிக்கை தொட்டு
அணுகுண்டின் அட்டூழியமும்
சோதனையாகும் இம்மைதனிலே!

வட்டியும் முதலுமாய்
சேர்த்து வைத்த செல்வமெங்கே?
பெற்ற மக்களெங்கே?
உடன் பிறந்தோர்
உற்றார் உறவினர் எங்கே?

காதலித்து கட்டியவர் எங்கே?
தோல் கொடுத்த தோழரெங்கே?
தான் பெற்ற கல்வியெங்கே?
தேடிப் பெற்ற புகழெங்கே?
அனைத்தும் சோதனையாகும்
மறுமைதனிலே!

பத்து மாதம் சுமந்தவளின்
பாலகனுமொரு
சோதனையாகும் போது!
சேர்த்து வைத்த
சொத்து செல்வம்
பணம் பட்டம் பதவிகள்
எல்லாம் இவ்வுலகில்
எம்மாத்திரம்?

சோதனை வேதனை
ஆகுமுன்னே
இறையோனை மறந்து
அவன் மறைதனை மறந்து
கறை படிந்து
பாவச்சிறையில் விழாது
தீன் மார்க்க நெறிமுறையில்
திருமறை குர்ஆன்
நபிவழியினின்று இறையோனின்
திருப்பொருத்தத்தை அடைவதே
சாதனையாகும்.

Binth Abdhul Faleel
SEUSL
BA®️

கவிஞனுக்கு கற்பனையில் காவியம் படிப்பதும் சோதனையாம் கலைஞனுக்கு கலைகளால் கரைகடந்து கவிஞனென்று பெயர் எடுப்பதும் சோதனையாம் பட்டங்கள் பல பயின்று பதவிகளில் தடம் பதிப்பதுவும் ஒரு சோதனையாம் அலைகடல் கடந்து சென்று குடும்பத்திற்கு அல்லியிறைப்பதுவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *