வீட்டுத்தோட்டம்

  • 15

ஊரடங்கு நாட்கள் கடந்து
வாரங்களாக மாற
கால் வயிற்று
கஞ்சிக்கு கூட இல்லை
இன்னும் அதற்கான முன்னேற்பாடு
கொஞ்சம்கூட இல்லை

வீட்டுல வேலையும் இல்ல
கறிக்கு போட தக்காளி
வெங்காயமும் இல்லை
மண்ணு தான் இருக்கு
மழைத்தண்ணி தான் நமக்கு

மண்தான் கிடைக்குதே
மனந்தான் தடுக்குதே
கைபேசியை கொஞ்சம் தள்ளிப்போடு
மண்வெட்டியை கொஞ்சம் கையிலேந்தி
மண்ண கொஞ்சம் கேத்தி விதை போடு

வீரட்டெலும் மரக்கறிய
கொஞ்சம் எட்டிப் பாரு
சோம்பல் தான் உனக்குன்டு
வீட்டிலா சும்மா கிடந்தவனே
சோத்துக்கு வழியத்தேடு

இல்லை இல்லை என்று புலம்புவத
விட்டுவிட்டு இருக்கிறதுல வழிவகுக்கா பாரு

பாமரனும் பணக்காரனும்
ஒன்னு தான் பசி வந்தால்
பத்தும் பறக்கும் பாரு
இன்னாளில்
ருசிக்குத்தான் வழி இல்லை
பசிக்கவது வழி தேடு

பச்சிளங்குழந்தை பதறுது பாரு
வீட்டுத்தோட்டத்தில் மரக்கறிகளா தேடு

ஊருதான் முடங்கிப்போய்டுன்டு
நீயும் முட்டாளாக இருந்திடாது
முடியும் ஆனது செஞ்சி
வீட்டுத்தோட்டத்தில் மரக்கறிய நாட்டு

நாளை மாறலாம் உன் தேவை தீரலாம்
விதைக்காமல் அறுவடை செய்ய முடியாது
விதைத்து பார்
நாளை உன் தேவை தீரலாம்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

Monetize your website traffic with yX Media

ஊரடங்கு நாட்கள் கடந்து வாரங்களாக மாற கால் வயிற்று கஞ்சிக்கு கூட இல்லை இன்னும் அதற்கான முன்னேற்பாடு கொஞ்சம்கூட இல்லை வீட்டுல வேலையும் இல்ல கறிக்கு போட தக்காளி வெங்காயமும் இல்லை மண்ணு தான்…

ஊரடங்கு நாட்கள் கடந்து வாரங்களாக மாற கால் வயிற்று கஞ்சிக்கு கூட இல்லை இன்னும் அதற்கான முன்னேற்பாடு கொஞ்சம்கூட இல்லை வீட்டுல வேலையும் இல்ல கறிக்கு போட தக்காளி வெங்காயமும் இல்லை மண்ணு தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *