பார்க்க மறுத்தது ஏன்

உன்னருகில் என் விழிகள்
உன்னையே நோக்கி நிற்கையில்
உயிர்த்துளிகள் உதிரும் நிலையை
உணர்த்துகிறாயே பெண்ணே!

உனக்காக நான்
உயிர் துறந்து நின்றும்
உன் விழிகள் இன்றும்
என்னை பார்க்க மறுத்தது ஏன்

உன்னை பார்க்கும் வரை
உறங்க மறுத்த என் விழிகளுக்கு
மறுப்பை தெறிவித்தும்
வெறுப்பை அறிவித்தும்
வாழ்க்கை கடத்துக்கிறாயே

உன் வாசல் தேடி வந்த
என் ஆசை விழிகளை
இன்றும் பார்க்க மறுத்து ஏன்

என்றும் என்னை வெறுப்பதால்தான்
இன்றும் பார்க்க மறுத்ததா உன் விழிகள்

இதயத்தின் இறக்கைகளை
மணவறை விட்டு மண்ணறைக்குள்
சிதைத்துக் கொண்டிருப்பதால்தான் பெண்ணே!
இன்றும் பறக்க நினைத்த என் காதலை
பார்க்க மறுத்ததா உன் விழிகள்

எதிரில் வந்த போதும்
புதிரில் புதைந்து போனேன்
புன்னகையால் சிதைப்பவள் இன்று
படுகுழியில் பார்வையற்று
புதைப்பதேன் என்று

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08


Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help