ஒரு முறை தான் வாழ்க்கை

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒன்றும் கண்னைக் கட்டுக்கொண்டு கடந்து போடக்கூடிய இலகுவான பாதையை கொண்டது அல்ல; மாறாக நிறையவே மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டது என்பது நாம் அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் புரிந்து கொண்ட உண்மை. இந்தப் பயணத்தின் நமக்கான ஒவ்வொரு பக்கத்தையும் நாம் தான் எழுத வேண்டும்.

நம் வாழ்க்கையை ஓர்  அழகான ஓவியமாய் வரைய வேண்டும். அனைவரது வாழ்விற்கும் ஓர் அழகான அர்த்தம்  (பொருள்)உண்டு அதை அவர் அவர் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். நம்மிடத்தில் உள்ளவற்றை கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இருப்பதை விட சிறந்ததைத் தேடி இறுதியில் இருப்பதையும் இழந்து விடக்கூடாது. நம்முடைய வாழ் நாள் தேவைகள் ஒருபோதும் தீர்ந்து விடப்போவதில்லை என்ற உன்மையை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டால் பல சமயங்களில் வீணான குழப்பங்களில் இருந்து தப்பித்து விடலாம்.

விருப்பங்களும் எதிர்பார்ப்புக்களும் இன்றி வாழ்வது கடினம் தான் ஆனால் நம் விருப்பத்தின் படியோ அல்லது எதிர்பார்ப்பின் படியோ இங்கு அனைத்தும் நடப்பதில்லையே. எதுவும் நடக்கும் முன் நல்லதே நடக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள் நடந்த பின் நடந்தது அனைத்தும் நல்லதற்கே  என நினைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் விரக்தியில்  இருந்து தப்பித்து  விடலாம். நமது பெறுமதியையும் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளவற்றின் பெறுமதியையும் உணர்ந்து வாழும் நாட்களை அழகாக வாழுங்கள்.

உன் வாழ்வில் என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்பது முக்கியமல்ல மாறாக நீ யார் யாரையெல்லாம், எதை எதையெல்லாம் தொலைத்து விடாமல் வைத்திருக்கின்றாய் என்பதே முக்கியம்.  எவ்வளவு தான் தலைக்குமேல் சொத்து செல்வம் என சேர்த்து வைத்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒரு சொட்டு உண்மை நேசத்தை நீ சம்பாதிக்கவில்லை எனில் வாழ்க்கையே அர்த்தம் அற்றதாய்போய்விடும்.

கோபம், வெறுப்பு, பொறாமை,  கௌரவம் இது எதுவும் பார்க்காமல் விட்டுக்கொடுத்தும் தட்டிக்கொடுத்தும் வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை சந்தோசமாக திருப்தியாக இருக்கும். மற்றவர்களைப் பார்த்து அவர்களைப் போல் நீ வாழ வேண்டும் என நினைத்தால் உன்னை போல யார் தான் வாழ்வது. நீ நீயாக இரு யாரோ ஒருவரால் பின்பற்றப் படுவாய். உனக்கான இடத்தில் உயர்த்தப்படுவாய். வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஏதோ ஓர் ரூபத்தில் ஏதோ ஓர் பெயர் கொண்டு மாறி மாறி பிரச்சினைகளும் கஷ்டங்களும் வந்து கொண்டே தான் இருக்கும் அது தான் வாழ்வின் நியதி. ஆனால் எந்த நிலையிலும் மனம் தளர்ந்து விடக்கூடாது.

பிரச்சினைகளைக் கண்டு தூர ஓடக்கூடாது நமக்கு ஏற்படும் சோதனைகளை எண்ணி விரக்தியடைந்து விடக்கூடாது. துணிந்து நில்லுங்கள் சவால்களை எதிர்த்துப் போராடுங்கள். உற்சாகமான உறவுகளையும் கனவுகளையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்காான நிமிடங்களை இரசிக்க தவறாதீர்கள்.

கடந்த கால இறப்புக்களையும் தவறுகளையும் எண்ணி உங்களை நீங்கள் வருத்திக்கொள்ளாதீீீகள், இறந்த காலத்தைக் கொண்டு எதிர் காலத்தை செதுக்குங்கள். நிலவை அழகாகத் தானே இரவு இருளை பூசிக்கொண்டது அதுபோல உங்களுக்கு  ஏற்படும் கஷ்டங்களும் உங்கள் வாழ்க்கையை அழகுபடுத்தும் என்று நம்பிக்கைகொள்ளுங்கள். கரையும் மெழுகின் துணையுடன் இருளைக் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை நம் வாழ்க்கையிலும் இருக்கட்டும். மகிம்ச்சியானதும் ஆரோக்கியமானதுமான அழகாான வாாழ்க்கை வாழ்வோம்.   இந்த வாழ்க்கை ஒரு முறை தான் அதை இரசித்து அழகாக  வாழ்வோம்.

Happiness is not about getting all what you want, it is about enjoying what you have
Jàzira Junaideen
Facultyof Technology
University of Colombo


நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒன்றும் கண்னைக் கட்டுக்கொண்டு கடந்து போடக்கூடிய இலகுவான பாதையை கொண்டது அல்ல; மாறாக நிறையவே மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டது என்பது நாம் அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் புரிந்து கொண்ட உண்மை.…

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒன்றும் கண்னைக் கட்டுக்கொண்டு கடந்து போடக்கூடிய இலகுவான பாதையை கொண்டது அல்ல; மாறாக நிறையவே மேடுகளையும் பள்ளங்களையும் கொண்டது என்பது நாம் அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் புரிந்து கொண்ட உண்மை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *