நோயாளிகளை அல்லது மரணித்தவர்க​ளை ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தல் மக்கள் சேவையல்ல

  • 9

[cov2019]

இன்று செய்திகள் ஒரு நொடி பிந்தும் போது பழசாகி விடுகிறது. சமூக வளைத்தளங்களில் முதலிடம் பெறுவதற்கும், முதல் செய்தி நமது பதிவுதான் என்ற பெயரைப் பெறுவதற்கு ஆர்வம் மிகைத்துள்ளது. எனவே பின்விளைவுகளை கவனத்தில் எடுக்காமல் சுயநல நோக்கங்களுக்காக செய்திகளையும் படங்களை பதிவேற்றும் செய்வதில் கடும் போட்டியும் வளர்ந்துள்ளது. இதனால் அடுத்தவர்களின் உரிமை, கண்ணியம், மானம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயர் பெறுமானங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலில் வருவதற்கு முந்துவது ஒன்றே இலக்காய் கொண்டு செய்திகளை தரும் ஆர்வலர்கள் கவனிக்க வேண்டிய ஒரு பகுதியுண்டு.

இன்று சமூக ஆர்வலர்கள் முழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய் பற்றிய தகவல்களை பரிமாறும் போது பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் மரணித்த உடல்கiளும் எரிக்கும் காட்சிகளையும் சர்வசாதரணமாக படம் பிடித்து போடுகிறார்கள். இது ஊடக தர்மத்திக்கு முற்றுலும் முரணானது. இலங்கை அரசின் தடையுத்துரமை மீறும் ஒரு குற்றச் செயலாகும். இஸ்லாம் இத்தகைய மானபங்க படுத்தும் தோரணையில் வரும் காட்சிகளை எந்த தேவையுமின்றி காட்சிப்படுத்துவது உரிமை மீறலாக பார்க்கிறது. உயிருள்ள ஒருவரை மானபங்கப்படுத்துவது போன்ற ஒரு குற்றமாக கருதுகிறது.

மனிதனுக்கு இறைவன் வழங்கும் கௌரவமானது, இறையில்லமான கஃபதுல்லாவிற்கு வழங்கப்பட்டுள்ள கௌரவத்தை விட மகத்தானது. (தர்மிதி) ஒரு மனிதன் நோயாளியாக உள்ள போதும் அல்லது மரணித்த பின்னரும் அவனுக்குரிய அந்தஸ்து மரியாதை கௌரவம் அப்படியே தொடர்கிறது. எனவே மனிதனை நோயில் தவிக்கும் போது எந்தத் தேவையுமின்றி சும்மா ஒரு செய்திக்காக அம்பலப்படுத்துவதை அவன் விரும்ப மாட்டான். தன் சோக வெளிப்பாடுகளை பிறர் பார்ப்பதையோ, அவலத்தின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை மக்கள் பார்வைக்கு வருவதையோ ஒரு போதும் விரும்பமாட்டான். அதை மீறி அவனது புகைப்படங்களை எடுப்பதும் பரப்புவதும் அவனது பிரத்தியேக ரகசியங்களை பகிரங்கப்படுத்தும் பண்பாடற்ற செயலாகும். அவனை மானபங்கப்படுத்திய குற்றமாகவே நோக்கப்படும்.

எனவே தான் மரணித்தவர்களை மற்றும் நோயாளிகளை படம்பிடித்து பகிரங்கப்படுத்துவது மனித சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றச் செயலாக உள்ளது. இஸ்லாமிய சட்டமும் இத்தகைய செயலை வன்மையாக கண்டிப்பதுடன் படு போசமான குற்றச் செயலாகவே பார்க்கிறது.

அல்குர்ஆன் மரணித்தவரின் உடலை ‘ஸவ்அத்’ என்ற பதத்தைக் கொண்டு அறிமுகம் செய்கிறது. அதன் பொருள் பார்ப்பவரை அது புண்படுத்துகிறது என்பதாகம். மரணித்த வரை பார்க்கும் போது மனது புண்படுகிறது என்பதால் தான் சூரா மாயிதாவின் 31வது வசனம் கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கான வழியை காட்டும் சம்பவமென்றை சித்தரிக்கிறது. எனவே முசுப்புக்கு மக்கள் சேவை என்று நினைத்துக் கொண்டு மரணித்த உடலையோ அல்லது நோயாளிகளையோ பதிவேற்றம் செய்வது பிறர் மானத்தில் கைவைத்த குற்றமாகவே இஸ்லாம் பார்க்கிறது.

மரணித்தவரை குளிப்பாட்டுபவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான விதிமுறைகளில் ஒன்று நேர்மையானவராக, நாணயமுள்ளவராக இருக்கவேண்டும் இஸ்லாமிய போதனையாகும். காரணம் அவர் மையித்தின் குறைகளை மறைக்க வேண்டும். அப்படி நேர்மையாக நடந்து கொண்டால் அவருக்கு இறை மன்னிப்பு நாற்பது தடவை உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹாகிம்)

மரணித்த உடம்புக்கு எந்த ஜாதியுமில்லை. எந்த மதமும் இல்லை. எனவே மரணமான உடலை படம் பிடித்து ஊரார் தெரிந்து கொள்ள சமூக வளைதளங்களில் பரப்புவது மையித்துக்கு செய்யும் அகௌரவமாகும். அது யாராக இருந்தாலும் எந்த இனமாக, சாதியாக, மதமாக இருந்தாலும் மரணத்வருக்கு செய்யும் துரோகமாகும்.

கொரோனா போன்ற உயிர்கொல்லி வியாதிகளால் அவஸ்தைப்படும் நோயாளிகள், சோகத்ததில் தள்ளாடும் மனிதர்களின் அவலமான காட்சிகள், மரணித்த உடல்களை அவமரியாதைப்படுத்தும் புகைப்படங்கள் மக்கள் பார்வைக்காக வருவதை எந்தவொரு ஆத்மாவும் விரும்பாத செயலாகும். அது பிறறை மானபங்கப்படுத்தும் காட்சிகளாகும். ஊடக தருமத்திற்கும் பங்கமாகும்.

குறிப்பாக இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு கடுமையாக தடை செய்துள்ள ஒரு விடயமாகும். இது மனித சட்டம் போன்றே இஸ்லாமிய சட்டப்பரப்பில் தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். எனவே மனட்சாட்டியுடன் நடந்து கொள்வோம். பதிவேற்றம் செய்யும் புகைப்படம் நானாக இருந்தால் அதனை அனுமதிப்பேனா என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்வோம். மானம் என்பது உயிரைப் போலவே பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.

முஹம்மத் பகீஹுத்தீன்.



[cov2019] இன்று செய்திகள் ஒரு நொடி பிந்தும் போது பழசாகி விடுகிறது. சமூக வளைத்தளங்களில் முதலிடம் பெறுவதற்கும், முதல் செய்தி நமது பதிவுதான் என்ற பெயரைப் பெறுவதற்கு ஆர்வம் மிகைத்துள்ளது. எனவே பின்விளைவுகளை கவனத்தில்…

[cov2019] இன்று செய்திகள் ஒரு நொடி பிந்தும் போது பழசாகி விடுகிறது. சமூக வளைத்தளங்களில் முதலிடம் பெறுவதற்கும், முதல் செய்தி நமது பதிவுதான் என்ற பெயரைப் பெறுவதற்கு ஆர்வம் மிகைத்துள்ளது. எனவே பின்விளைவுகளை கவனத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *