உம்மா எங்கட ஊருக்கும் கொரோனா வருமா?
[cov2019]
மே மாதம் இடையே,…. இத்தனை நாட்கள் வீட்டுக்குள் முடக்கப்படுவோம் என்று நினைத்து பார்த்தோமா? சிலருக்கு இது ஒரு நெருக்கடி, இன்னும் சிலருக்கு இது ஒரு அசகுனம், இன்னும் சிலருக்கு இது ஒரு பாக்கியம், இன்னும் பலருக்கோ இது ஒரு புது அனுபவம்.
சமூகம் என்ற தளத்திலிருந்து, தனது காரியாலயம் (office), வேலைப்பழு (busy shedule), ஒரு நேர சூசு படியான இயக்கம் (working shedule) வேலை இலாபம் அடைதல், என்பதில் பூரண கவனம் (Bussiness) இடையில் இயந்திர சத்தங்களும் மாலையானால் வாகனங்களின் சத்தம், பிரயானத்தின் நடுவே வாகன நெரிசல் (Traffic) நிறைய பேருக்கு திட்டு, இடையில் தலைவலி, நாளைய வேலைகள் பற்றிய யோசனை, வீட்டுக் கடமைகள் பற்றிய மனைவியின் வேண்டுதலும், முறைப்பாடுகளும், பிள்ளைகளின் நச்சரிப்புக்கள், பிள்ளைகளின் நடைத்தைகள் பற்றிய பிறரது முறைப்பாடு. இவ்வளவு யோசனைகளுக்கு மத்தியிலும் இரவில் தூக்கம் போவதற்கு படும் பாடு, காலநிலை வேறு பகலானால் உச்சி மண்டை காய வெயில் இரவானால் நடுமண்டையிலிருந்து பாதம் வரை வியர்வை.
இப்படி இயந்தர மயமாக்கப்பட்ட சுதந்திரம் என்ற போர்வையில் வாழ்வின் கைதியாக ஒவ்வொரு நாளையும் நாளை விடியும், நிலமை சீராகும் என்ற ஆறுதலோடு சுற்றித்திரிந்த மனித பிராணி. திடீரென வீட்டுக்குள் முடக்கப்பட்டு, பிரயாணம் இல்லை, தொழில் இல்லை, இயந்திர சத்தங்கள் இல்லை, வாகன நெரிசல் இல்லை, “ஒன்றுகூடல்” (Meetings) இல்லை HR இன் நச்சரிப்புக்களும், தொல்லையும் இல்லை, நேர சூசி படி இயங்க கடமைகள் இல்லை, ஏன் தொழிலுக்கு போவதில்லையா? என்று கேட்க யாருமில்லை, நாளைய நாட்கள் பற்றிய யோசனை இல்லை, அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள் இல்லை, கடன் காரனுக்கு பதில் சொல்ல தேவையுமில்லை அவரது அழைப்பும் இல்லை மொத்தமாக இயந்திரமயமான வாழ்க்கை போக்கின்றி சும்மா இயங்கா நிலையில் இருக்கும் படியான வேண்டுதல்”
அப்படா என்று பெரு மூச்சு விட்டு ஒரு vacation யைEnjoy பன்னும் மனநிலையும் இல்லை. கூலித் தொழிலாளியானால் அல்லது தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் என்றால் அவன் உள்ளத்தில் விடை தெரியாத ஆயிரம் கேள்விகள். மறுபக்கத்தால் வறுமைப் பயமும், covid 19 பற்றிய பயங்கரமான பாரதூரமான தகவல்களும் பலரது தூக்கத்தையே பரித்துவிட்டன.
Stress உம் Depression உம் Anxiety யும் ஏன் Ocd யும் இப்படியான உளக் கோளாறுகளும் பலரோடு கலந்து விட Tension உம் மிகை கோபமும் அர்த்தமில்லாத பேச்சுக்களும், நடையும், சண்டைகளும், பிரச்சினைகளும், சச்சரவுகளும் ஆங்காங்கே தோன்றி மறைகின்றன.
இப்படியான மனித இயல்புகளை மீறிய சவாலான பொழுதுகளை கடந்து செல்ல வேண்டும் என்று விதியுடனே போராட்டம். இங்கு குறிப்பிட்டு செல்ல வேண்டிய ஒரு விடயமே ஆடுகளம் அல்லது போராட்ட களம்.
ஒவ்வொருவருக்கும் covid 19 விதித்துள்ள ஆடுகளம் தத்தமது குடும்பங்களாகும். ஆம் தங்கமான அல்லது பயங்கரமான மனைவி (கடந்த கால வாழ்வியல் அனுபவத்தை பொருத்து) சாந்தமான அல்லது தறுதலையான குழந்தைகள் ( இதுவும் கடந்து வந்த வாழ்க்கையில் தான் பிள்ளைகளின் மூலம் அனுபவித்ததைப் பொருத்து). பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் இப்படியான குறிப்பிட்ட நபர்களுடன் சுருங்கிய உறவு நிலை என்ற களத்தில் நின்றே இன்றைய நாட்களின் போராட்டம் தொடர்கிறது.
தனது குடும்பம் என்ற ஒழுங்கை சீர்படுத்தி கொள்வதற்கு ஓர் அழகிய சந்தர்ப்பம் ஒவ்வொரு வீட்டு தலைவருக்கும் கிடைத்திருப்பினும், அசாதாரண சூழ்நிலையில் குடும்ப நிறுவனத்தை ஒழுங்கு படுத்தல் என்பது ஒரு சவால் தான், இருந்த போதிலும் ஒழுங்குபடுத்தலுக்கான அடிப்படைகளை மிக இலகுவாக மேற்கொள்ளலாம்.
இன்றைய நாட்களில் குடும்ப அங்கத்தவர்களின் பசியை போக்குதல், தனது குடும்ப உறுப்பினர்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான மூலோபாயங்களை உறுதிப்படுத்தல். என்ற கடமைகளுக்கு அப்பால், குடும்ப அங்கத்தவர்களின் குறிப்பாக தமது பிள்ளைகளின் நெருக்கடி நிலை உளவியல் தேவை சம்பந்தமாக பேசுவது வழிகாட்டுவது மிகக் குறைவாகவே இருக்கிறது.
நெருக்கடி நிலையின் போது பூரணப்படுத்த வேண்டிய உளவியல் தேவைகளும் இருக்கின்றன என்ற ஞாபகமூட்டலோடு…
இன்று மாலை கிட்டத்தட்ட 6:30 மணியிருக்கும், மழைச் சாரல் சொட்டு சொட்டாக கொட்ட ஆரம்பித்திருக்கும் நேரம், நீண்ட இடைவேளை க்கு பின்னர் மழை நீரினால் நணையப் போகும் எமது கிராமம், பலர் வயல்களை கொத்தி தமது தோட்டங்களை துப்பரவாக்கி களைப்புற்றிருக்கும் இத்தருணத்தில், பெய்கின்ற மழையைப் பார்த்து சந்தோசப்படப்போகும் அந்த உள்ளங்களை நினைவு படுத்தி , மண்வாசனையை நுகர்ந்து ரசித்து இறை அருளுக்கு நன்றி கூறி
“இறைவா பொழிகின்ற மழையை பிரயோஜனமான மழையாக ஆக்கிவிடு” என்ற பிராத்தனையில் இருக்கும் போது ஓர் தொலை பேசி அழைப்பு.
“சேர் உங்களோடு பேசேலுமா?” என்ற வார்த்தைகள் பேசுகின்றவர் யார் என்ற தகவலை எடுத்த பின்னர்.
தரம் 2 இல் கல்வி பயிலும் தனது மகள் அடிக்கடி கொரானா வைப்பற்றி கேட்டுக் கொண்டே இருக்கின்றாள். வாயை திறந்தாலேயே கொரானா பற்றியே கேட்கின்றாள். நேற்றிலிருந்து படுக்கையையும் நனைக்கின்றாள் (Bed wet) பயமாக்கு ஈக்குது சேர் மகளுக்கு கொஞ்சம் 4n இல் counselling கொடுக்கேலுமா சேர் என்று கேட்ட போது,
“இப்படி ஓரே அத பத்தி கேக்குரது சங்கடமெனா?” எவ்வளவு தான் பதில் சொன்னாலும் திரும்ப திரும்ப அதே கேள்வியை கேட்கும் போது வெறுத்துப் போகுதெனா? என்ற கருத்துப் பரிமாருதலோடு இது உங்கள் பிள்ளைக்கு மட்டுமான கேள்வியல்ல எல்லோரிடமும் இன்றைய நாட்களில் வருகின்ற கேள்விதான். சோ பெரிய பிரச்சினை ஒன்றல்ல “வெரி சிம்பலாக உங்களது பதிலின் ஊடாகவே உங்கள் பிள்ளையின் மனநிலையை சரிபன்னலாம் என்ற ஆறுதல் வார்த்தைகளோடு,
“கோரோனா பற்றி உங்களிடம் பிள்ளை எப்படியான கேள்வியை கேட்டது? நீங்க என்ன பதில் கொடுத்தீங்கேன்றத்த சொல்ல ஏழுமா??? என்று கேட்டதற்கு,
- உம்மா கொரோனாண்டா என்னத்தென்?
- ஏன் உம்மா சீனால இது பரவின?
- ஏன் உம்மா இன்னும் மருந்து கண்டுபிடிச்சல்ல?
- எங்கட ஊருக்கு வருமா?
- ஏ உம்மா ஊட்டுக்குள்ள ஈக்கோனும்?
- கோரோனால செத்துபோனா சுட்டா நோகுமா?
- எங்கட நாட்ல எல்லாருக்கும் வந்தா?
- ஏ உம்மா செத்த ஆட்கள ரோட்ல வீசுர?
- ஏன் உம்மா இவ்வளவு துஆ கேட்டும் இன்னும் கொரோனா ஈக்குர?
- ஏன் உம்மா மனிசனுக்கு மட்டும் இது வார?
- கெட்ட ஆட்களுக்கு வாரேண்டா ஏ உம்மா பொறந்த பிள்ளைக்கும் வரோனும்?
- கொரானான்டு பிடிச்சுட்டு போனா எங்க உம்மா போடுவாங்க?
இப்படி மகள் கேட்ட கேள்விகள் பலதையும் அதற்கு தான் எப்படி பதில் கொடுத்தேன் என்பதையும் கூறினாள்.
“குறிப்பாக கெட்ட மனிதர்களுக்கு கடவுளின் தண்டனை அதே நேரம் சீனாவில் வௌவால் சாப்பிட்டதால் பரவி இருக்கிறது. சீனர்களிடமிருந்து எல்லோருக்கும் பரவிஇருக்கிறது. ஒரால் பேசுரத்தால, இருமுரத்தால பரவுது, இலங்கையிலும் ஒவ்வொரு ஊர் ஊராக பரவுது நாங்க அங்கயும் இங்கையும் ஓடப்படாது. வீட்டுக்குள் இருக்காவிட்டால் வரும், கொரோனா வந்தவர்களை பிடித்துட்டு போனா தனி தனி ரோம்ல வெச்சி பாப்பாங்க.”
இப்படி கேள்விகளுக்கு ஏற்ப அழுப்பில்லாமல் தாய் தொடர்ந்து பதில் வழங்கியுள்ளார், குழந்தையின் எதிர்பார்புக்கு ஏற்ற பதில் இன்னும் சரியாக தாயினால் வழங்கப்பட வில்லை என்பதனை புரிந்து கொண்டேன்.
உண்மையில் “Between Parents and Child” என்ற புத்தகத்தை வழங்கிய Dr. Haim Ginott (தமிழ் மொழியிலும் ஆசிரியர் S.k விக்னேஸ்வரன் என்பவரால் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையிலே என்ற தலைப்பில் பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.) என்பவர் குறிப்பிடுவதைப் போல குழந்தைகளின் கேள்விகள் சூழ்நிலையைப் பொருத்து பல வகையான உட்கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுள்ளது.
குறிப்பாக ஆபத்துக்கள் அல்லது பயங்கரமான நிலமைகள் பற்றிய கேள்விகளானது குறித்த ஆபத்து பயங்கரமான நிலமை பற்றியதாக இருந்தாலும் அந்த ஆபத்துக்கு நானும் உட்படுவேனா அப்படி உட்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலையே முன்வைக்கப்படுகிறது. தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் குறித்த ஆபத்தோடு சம்பந்தமான கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். எனவே ஆபத்து அல்லது பயங்கரமான விடயம் தொடர்பாக பிள்ளைகள் கேட்கும் போது ஆபத்து நிலமைக்கும் பிள்ளைக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி சம்பந்தமாக பதில் கொடுத்து பாதுகாப்பு உத்திகளையும் சொல்லிக் கொடுக்கும் போது பிள்ளை திருப்தியடையலாம்.
உதாரணமாக கொரோனா பற்றி வினவும் குழந்தையிடம் கொரானா எந்த விதத்திலும் உங்களுக்கு வர விடமாட்டேன். கொரானா எங்கட குடும்பத்தில் யாருக்கும் வந்ததில்லை எங்கட குடும்பத்துக்கு வாரத்துக்கு chance உம் இல்லை ஏன்டா எல்லோரும் ஊட்லதான் ஈக்குராங்க உனக்கு வரவே வராது என்டா நீங்க எங்கயும் போகல்ல, உங்கட ஆடை இடம் எல்லாம் சுத்தமா ஈக்குது , அதோட நீங்க அடிக்கடி கையையும் களுவுரீங்க உங்களுக்கு வராது நான் உன்னோடு இருப்பேன் தங்கம்”
என்று கொரோனா ஆபத்திற்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையில் இருக்கும் தூரத்தை சொல்லி விட்டு practically கொரோனா தடுப்பு என்ற பெயரில் வீட்டில் சில சுகாதார நடவடிக்கைகளை பிள்ளைகளுடன் இணைந்து மேற்கொள்ளலாம்.
உதாரணமாக அடிக்கடி வீட்டில் ஒவ்வொரு அறையையும் கிருமி நீக்கம் செய்யலாம், உட்காருகின்ற நடமாடுகின்ற இடங்களை “Dettol” திரவத்தை கொண்டு துடைத்தல், கொரோனா செய்திகளில் positive ஆன செய்திகளை மட்டும் வலியுறுத்தி பிள்ளைகளோடு கதைத்தல். இப்படி தனக்கும் கொரோனா வருமா? என்ற மனப்பதிவில் அதற்கான எதிர்பார்ப்பில் கேட்கும் கேள்விகளுக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ற பதில்களை கொடுப்போம்.
மேலே நான் சொன்னதை அடி யொட்டி பின்வரக்கூடிய வாறு கேள்வி தொடுக்கும் 3 வயதுச் சிறுமியின் கேள்விக்கு எப்படி பதில் கொடுப்பீர் முயற்சி செய்து பாருங்கள்.
“உம்மா பொலிஸ் எஹின்தால வாரதோ தெரியவே கொஞ்சம் ரோட்டுக்கு பெய்து வாரத்துக்கு?”
பதிலை Comment பண்ணவும்
குறிப்பு : ஆக்கத்தின் இடையிடையே வாசிப்பின் சுவைக்காக எமது ஹெம்மாதகமை பேச்சு வழக்கில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களும் பாவிக்கப்பட்டே இவ்வாக்கம் எழுதப்படுகிறது. என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளுங்கள்
Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Deneme Bonusu