இரவு

  • 6

இராப் பொழுதுகள்
ஒவ்வென்றும் பெரும்
நதிகளை விட அழகான
சப்தங்களை- கண்முன்
கொண்டு வரக்கூடியவைகள்.

இரவின் அழகை இமயம்
சென்று வர்ணித்தாலும்
அது எதற்கும் ஈடாகப்போவதில்லை.

அன்புகளை அடக்கமாகவும்
பாசங்களை பத்திரமாகவும்
உறவுகளை உன்னதமாகவும்
நட்புகளை நன்றியோடும்
விட்டுவிட்டு- தூக்கம் எனும்
தோழிக்கு கைகொடுக்கும்
அழகிய பொழுது -அது

அழகாக அன்பாக வர்ணிக்கும்
இரவினை எத்தனை வீணைகளின்
சப்தத்தாலும் அடக்கிவிட முடியாது.

காதலில் தோற்றவனுக்கும்,
கை,கால் முறிபட்டவனுக்கும்,
வயிற்றோடு போராடுபவனுக்கும்,
வாழ்க்கையோடும் முரண்படுபவனுக்கும்,
அழகான ஓய்வை பத்திரமாக வழங்குகிறது
இந்த இராப்பொழுது

தேடித தேடி அலையும் நாட்களில்
தேடாமல் கிடக்கும் இந்த இரவின்
மகிமை எங்களுக்கு விளங்குவதில்லை.

பஸ்ல் அஹமட்

இராப் பொழுதுகள் ஒவ்வென்றும் பெரும் நதிகளை விட அழகான சப்தங்களை- கண்முன் கொண்டு வரக்கூடியவைகள். இரவின் அழகை இமயம் சென்று வர்ணித்தாலும் அது எதற்கும் ஈடாகப்போவதில்லை. அன்புகளை அடக்கமாகவும் பாசங்களை பத்திரமாகவும் உறவுகளை உன்னதமாகவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *