கொரொனாவும் வியாபாரிகளும் பாகம் 01

வியாபாரிகளே! மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவோரே! இது பதுக்கலுக்கான காலமல்ல. நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் விளையாடுவது ஏழைகளோடும், நோய்களோடும் அதன் மூலம் நீங்கள் பெறுகின்ற இலாபத்தைப் போன்ற பல மடங்கு பணத்தை உங்கள் நோய்களுக்காக எதிர்காலத்தில் செலவு செய்ய வேண்டி வரும். (வாழ்வில் பலரைக் கண்டுவிட்டோம்)

“அல்லாஹ் அநியாயம் செய்வோரை மன்னிக்கமாட்டான்”

நாட்டில் இவ்வாறான ஒரு நோய் பரவி வரும் நிலையில் மக்கள் நமது வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில் உணவுப் பொருள்களுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை சமீப நாட்களாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அரசியலிலும், கலாச்சாரத்திலும் நம் நாட்டிலும் பெரும் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவதே இதற்கான காரணம் என சிலர் கருதுகின்றனர். இலங்கை பொருட்கள் சேமிப்பில் உள்ளது. பாரிய அளவில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இந்த விடயம் தெரியும். ஆனால், தமது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக சில இஸ்லாமிய கட்டளைகளுக்கு அப்பால் இவர்கள் அனைவரும் வேலை பார்க்கிறார்கள்.

உணவு தானியங்களின் உற்பத்தியைப் பொறுத்த வரையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையில் பல மடங்கு குறைவாகவே உள்ளது.

இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏழை மக்களுக்கு அநியாயம் செய்யலாமா.???

பொருளாதாரம் ஓர் அருள் என இஸ்லாம் கூறுகிறது. இதனை நாம் தவறான முறையில் பயன்படுத்தலாமா..???

பொருளாதாரத்தின் அவசியம்

செல்வம், பொருளாதாரம் மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் பிரதானமான ஒன்றாகும். ஒரு மனிதனை அவன் உயிரோடு இருக்கும் போதும், இறந்த பின்னரும் சமூகத்திற்கு நல்லவனாய் அடையாளப்படுத்துகிற முக்கிய காரணியாகும். அந்த பொருளாதாரத்தை உலகின் நாலா பாகங்களிலும், ஏன் கடல் கடந்தும் சென்று தேடித் திரட்டுமாறு இஸ்லாம் தூண்டுகிறது. பொருளாதாரத்தை அலங்காரம் என்று அறிமுகப்படுத்தும் அல்குர்ஆன்..

الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا

“செல்வ வளமும், மக்கள் செல்வமும் ( மனிதனின் ) உலக வாழ்வின் அழகிய அலங்காரமாகும்”. (அல்குர்ஆன்: 18:46 )

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ

“பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால் நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது ஆசை கொள்வது (ரசனை கொள்வது) மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இவ்வுலகின் வாழ்க்கைக்குரிய சாதனங்கள் ஆகும். திண்ணமாக, அழகிய மீள்விடம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது.” (அல்குர்ஆன்: 3:14)

பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள்வளம் என்று வர்ணிக்கும் அல்குர்ஆன்.

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا

“மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளை தேடிடும் நேரமாக ஆக்கவில்லையா?” (அல்குர்ஆன்: 78:11 )

فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ

“நீங்கள் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருள்வளங்களைத் தேடும் பொருட்டு!” (அல்குர்ஆன்: 62:10 )

اللَّهُ الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ

“அல்லாஹ் தான் உங்களுக்கு கடலினை வசப்படுத்திக் கொடுத்தான். அவனது கட்டளைப்படி கப்பல்கள் அதில் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருள்வளங்களை தேடிச்செல்வதற்காகவும்!” (அல்குர்ஆன்: 45:12 )

அதே வேளையில் பொருளாதாரத்தைத் தேடுகிற வழி அனுமதிக்கப்பட்டதாகவும், ஆகுமானதாகவும் அமைந்திருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

وعن مالك بن أنس، رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: «طلب الحلال واجب على كل مسلم» رواه الطبراني.

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ஆகுமான வழியில் சம்பாதித்து பொருளீட்டுவது முஸ்லிமான ஒவ்வொரு ஆணின் மீதும், பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்”. ( நூல்: தப்ரானி )

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ

“இறை விசுவாசிகளே! உங்களில் ஒருவர் மற்றொருவரின் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்!”. ( அல்குர்ஆன்: 4:29 )

வியாபாரமும் வளமும்

மனித வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையான பொருளாதாரத்தை அடைய வேண்டுமானால், அதை தேட வேண்டும். அதற்காக அனுமதிக்கப்பட்ட, ஆகுமான வழியை மேற்கொள்ள வேண்டும். அதற்காக இஸ்லாம் ஆகுமான பல வழிகளையும், நெறிகளையும் பகல் வெளிச்சம் போல் தெளிவாகக் காண்பித்துத் தந்திருக்கிறது.

عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن الله تعالى طيب لا يقبل إلا طيبا ، وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين ، فقال : ياأيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا ( المؤمنون : 51 ) ، وقال تعالى : ياأيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ( البقرة : 172 ) ، ثم ذكر الرجل يطيل السفر : أشعث أغبر ، يمد يديه إلى السماء : يا رب يا رب ، ومطعمه حرام ، ومشربه حرام ، وملبسه حرام ، وغذي بالحرام ، فأنى يستجاب لذلك ؟ . رواه مسلم .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு நாள் எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் தூயவன், அவன் தூய்மையான பொருட்களையே ஏற்றுக் கொள்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைவிசுவாசிகளுக்கும் கட்டளையிடுகின்றான். மேலும், அல்லாஹ் கூறினான்: “தூய ஆகாரத்தையே புசித்து நற்செயல் புரியுங்கள்!” (23:53)

இறைவிசுவாசிகளை நோக்கி இறைவன் இவ்வாறு கூறினான்: “இறை விசுவாசிகளே! நாம் உங்களுக்கு அருளிய ஹலாலான தூய ஆகாரத்தையே புசியுங்கள்!” (7:8)

பிறகு, நபி {ஸல்} அவர்கள் ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிட்டார்கள். அவன் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு புழுதி படிந்து, அழுக்கடைந்த நிலையில் வருகின்றான். தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கி “என் இறைவனே! என்று இறைஞ்சுகின்றான்.

ஆயினும், அவன் உண்ணும் உணவு ஹராம், பருகும் நீர் ஹராம், உடுத்தியிருக்கும் ஆடை ஹராம். அவன் முழுமையான ஹராமிலே வளர்ந்துள்ளான். அவ்வாறெனில், அவனின் இறைஞ்சுதல் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” (நூல்: முஸ்லிம் )

وعن عبد الله بن مسعود
رضي الله عنه ، عن رسول الله – صلى الله عليه وسلم قال
” لا يكسب عبد مالا حراما فيتصدق منه فيقبل منه ، ولا ينفق منه ; فيبارك له فيه ، ولا يتركه خلف ظهره إلا كان زاده إلى النار ، إن الله لا يمحو السيئ بالسيئ ، ولكن يمحو السيئ بالحسن ، إن الخبيث لا يمحو الخبيث
رواه أحمد وكذا في ” شرح السنة “

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை விட்டு விட்டு அவன் இறந்து விட்டால் அவனது நரகப் பயணத்திற்கு அது சாதகமாகத்தான் அமையும். அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக, தீய செயலை நற்செயலின் வாயிலாகவே அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னொர் அசுத்தத்தை அழிப்பதில்லை” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: மிஷ்காத் )

இந்த இரு நபிமொழிகளிலிருந்து நமக்கு புலப்படும் விஷயம் எதுவென்றால் “ஆகுமான வழிகளில் ஈட்டப்பட்ட தூய்மையான பொருளாதாரத்தையே அல்லாஹ் விரும்புகின்றான். ஹராமான வழியில் பெறப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டு செலவழித்தாலும், தர்மம் செய்தாலும் அதனை அவன் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், எவனுடைய சம்பாத்தியம் ஹராமான வழியில் இருந்து பெறப்படுகிறதோ அவனுடைய இறைஞ்சுதலை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை”.

ஆகவே, ஆகுமான வழிகளில் பொருளாதாரத்தை பெற்றிட இஸ்லாம் கூறும் நெறிகளைக் கையாள்வதோடு, அது கூறும் வழிகளில் சென்று பெற்றிட வேண்டும். இஸ்லாம் கூறும் வழிகள் இரண்டு. ஒன்று உடல் உழைப்பு இன்னொன்று உடல் உழைப்பும், செல்வமும் கலந்திருக்கிற வியாபாரம், வணிகம்.

தொடரும்…….
NAFEES NALEER
(IRFANI), BA (R),
Diploma in counseling (R),
Editor of veyooham media center.


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

One Reply to “கொரொனாவும் வியாபாரிகளும் பாகம் 01”

Leave a Reply

Your email address will not be published.