பார்வைகளை ஒழிக்காதே

எதையும் தாங்கும்
இதயம் என்றுதான்
இதையும் தாங்கிக்
கொள் என்று
இருதயத் துடிப்பிற்கு விடுதலை
தருகிறதா உன் மௌனங்கள்

விடியலைத் தேடும்
என் விழிகளுக்கு
விடுதலை தருகிறாய்
சுதந்திரமாய்
சுற்றித்திரி என்று
ஆனால் உன்னைத்தானே
சுற்றிக் கொண்டிருக்கிறது
விடியலைத் தேடியபடி

உனது மௌன ராஜ்யத்தில்
மரண தண்டனைக்
கைதியாய் நானிருக்கிறேன்
மீண்டும் ஏன் என்னில்
போர் தொடுக்கிறாய்
பார்வைகளை ஒழித்து வைத்து

உனது பார்வைகளை
ஒழிக்காதே பெண்ணே
மரண வேதனை பெறுகிறது
எனது உயிர் நாடிகள்

வார்த்தையில்தான்
வாழ்க்கை தரவில்லை
உன் பார்வையில்
வாழ நினைக்கிறேன்
ஏன் மறுக்கிறாய் ?

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help