கொரோனாவின் பிடி

  • 14

சோறு சாப்பிட்ட
காலமெல்லாம் போயிற்று
கஞ்சி தானும் கிடைக்குமா?
சந்தேகம் தான்

தேசிய மாயமான
பாணும் பருப்பும் கூட
அன்னியமாகி
ஆடம்பர உணவாகி விட்டது

இந்த இக்கட்டிலும்
தேர்தல் நடாத்தனும்
இது ஒரு கூட்டம்
தேர்தலே வேண்டாம்
இது பெருங்கூட்டம்

சாதக பாதகமெல்லாம்
ஒரு புறம் இருக்கட்டும்
தேர்தல் நடக்கட்டும்

திறக்காத வாய்கள்
பல திறக்கும் கதைக்கும்
சமூகத்திற்காக கண்ணீர் வடிக்கும்

காலியாய் இருந்த
கைப்பை எல்லாம்
நோட்டும்
சில்லரையுமாய்
வாரி இறைக்கும்

ஓலை வீட்டின் ஓரத்தில்
நின்று ஓட்டை சட்டியில்
கஞ்சியும் குடிப்பர்
ஒரு கூட்டத்தினர்

ஆனாலும் ஒரு சந்தோசம்
ஒட்டி உலர்ந்த பட்டினி வயிறுகள்
தேர்தல் புண்ணியத்தில்
பசியாற உண்ணட்டும்

அவமானம் தான்
உயிரே போனாலும்
உரிமையை விடமாட்டோம்
சொன்னவன் தான்
என்ன செய்ய
உயிருக்காக உரிமை
சோரம் போகிறது

உரிமைகுரலுடன்
கூடவே இருக்கும் பட்டினியை
சிதறும் நோட்டுகள்
சிரித்துக் கொண்டே விலை பேசுது

உரிமையை விற்று
உயிர் வாழ்வதே
இன்று அவசியமாய் இருக்கிறது

முக்கியமான பின்குறிப்பு
இந்த நிலைக்கு
யாருமே காரணமில்லை
பாகுபாடின்றி மூச்சு விட
வைக்கும் நானே முழுக்காரணம்

இப்படிக்கு எல்லார்
வீட்டிலும் மூச்சிலும்
நிறைந்து இருக்கும் காற்று

அத்ஹர் அலி





yX Media - Monetize your website traffic with us Advertising that works - yX Media

சோறு சாப்பிட்ட காலமெல்லாம் போயிற்று கஞ்சி தானும் கிடைக்குமா? சந்தேகம் தான் தேசிய மாயமான பாணும் பருப்பும் கூட அன்னியமாகி ஆடம்பர உணவாகி விட்டது இந்த இக்கட்டிலும் தேர்தல் நடாத்தனும் இது ஒரு கூட்டம்…

சோறு சாப்பிட்ட காலமெல்லாம் போயிற்று கஞ்சி தானும் கிடைக்குமா? சந்தேகம் தான் தேசிய மாயமான பாணும் பருப்பும் கூட அன்னியமாகி ஆடம்பர உணவாகி விட்டது இந்த இக்கட்டிலும் தேர்தல் நடாத்தனும் இது ஒரு கூட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *