கருநீல வான்பரப்பில்
வெண்ணிறச் சுடரொளியாய்
சட்டென மின்னி மறைந்திடும்
சிறு கீற்றுப் பிறையின்
வருகையால் சங்கை மிகு
றமழானும் உதயமாகிறதே….
இதயங்கள் துள்ளிக் குதித்திட
இதழ்களில் புன்னகை தவழ்ந்திட
இஸ்லாமிய நெஞ்சங்கள்
இன்பமாய் வரவேற்றிடும் றமழானிது….
பசித்திருந்து தாகித்திருந்து
பகலிரவாய் கரமேந்தி
பாவக் கரைகளை நீக்கி
சுவனத்தை சுவைத்திட
வந்ததே எமக்கு றமழான்…..
வேலைப்பளுவின் சுமையாயினும்
வேதனை தரும் வெயிலாயினும்
பெருமை மிகு றமழானை
பக்குவமாய் கடைபிடிக்கனுமே
இன்ஷா அல்லாஹ்….
உள்ளங்களை உயிர்ப்பித்து
இல்லங்களை ஒளியூட்டி
உதித்திடும் றமழான்
வருக வருகவே !!!