சந்தேகம்தான்

  • 16

எழுத்துக்கள் எப்போதும்
சலித்துப்போவதே இல்லை!
இதயத்தின் கனதியை
எழுத்துக்களை விட
யார் புரிய முடியும்
அதனாலோ என்னவோ
எழுதுவதில் அத்தனை
இஷ்டம் எனக்கு!

யதார்த்தங்களை மீரிய சில
சமாளிப்புக்கள் இக்கனத்தை
அழகு படுத்தும்
அதில் சந்தேகமில்லை
ஆனால்
வாழ்க்கை முழும்
அவ்வழகு வாடாமல்
அப்படியே பூத்திருக்குமா?!

பேனாவில் மை தீர்ந்து விட்டது
அதற்கே சந்தேகம்
வந்துவிட்டதோ என்னவோ!
சந்தேகம்தான்!

இது தோடர்ந்தால்….
இப்படியே நடந்தால்….
இதுவே முடிவானால்….

கோபத்தின் ரணங்களை
பற்றியே தினமும்
பேசிக்கொண்டிருக்கிறோம்!!

அது, இன்னுமின்னும்
நம்பிக்கையின்மை
பலமாகிக்கொண்டே போவதை
அதன் உறுதி
அன்பின் பிணைப்பை விட
கனக்கிறதென்பதை உணரவைக்கும்.

அது இன்னும் எம்மை
பலவீனப்படுத்தும்
எம் இதயத்தை
பலவீனப்படுத்தும்!

சிரித்து மகிழ்ந்த நிமிடங்கள்
விட்டுக்கொடுத்த விடயங்கள்
மாற்றிக்கொண்ட பழக்கங்கள்
அன்பு செய்த பொழுதுகள்

அத்தனையும் ஒரே கனத்தில்
மறந்து போகிறோம்!!

அத்தனையும்
அந்த ஒற்றை வார்த்தையில்
அந்த கோபத்தில்
கரைந்து விடுகிறது!!

இது வாழ்க்கைக்கு
ஒத்து வருமா என்ற
சந்தேகத்தை உனக்குள்
தோற்றுவித்து விட்டது!

மொத்த வாழ்க்கையும்
ஒற்றை வார்த்தையில்
முடிந்து விட்டது!!

அதில் ஆச்சர்யமில்லை
மனிதன் நன்றிகெட்டவன்
என்பதில் எனக்கு
சந்தேகமும் இல்லை

நானும் தான்!!

போதும்….

இனி கடந்து வந்த
அழகான பொழுதுகளை
பற்றி எழுதப்போகறேன்,

அது,
நம்பிக்கையின்மையை விட
அன்பின் பிணைப்பு
இன்னுமின்னும்
கனக்கிறதென்பதை
உணரவைக்கும்!!

அது போதும்..
வாழ்ந்துவிடலாம்

சப்னா செய்ன்

எழுத்துக்கள் எப்போதும் சலித்துப்போவதே இல்லை! இதயத்தின் கனதியை எழுத்துக்களை விட யார் புரிய முடியும் அதனாலோ என்னவோ எழுதுவதில் அத்தனை இஷ்டம் எனக்கு! யதார்த்தங்களை மீரிய சில சமாளிப்புக்கள் இக்கனத்தை அழகு படுத்தும் அதில்…

எழுத்துக்கள் எப்போதும் சலித்துப்போவதே இல்லை! இதயத்தின் கனதியை எழுத்துக்களை விட யார் புரிய முடியும் அதனாலோ என்னவோ எழுதுவதில் அத்தனை இஷ்டம் எனக்கு! யதார்த்தங்களை மீரிய சில சமாளிப்புக்கள் இக்கனத்தை அழகு படுத்தும் அதில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *