கொரோனா கோவிட் 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா?

  • 64

இந்த கேள்விக்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னர் இது சம்பந்தமான இன்னும் சில விடயங்களை நோக்குவோம்.

கொரோனா காலத்தில் கோவிட் 19 தொற்றாதவர்கள், அவர்களுக்கு நோன்பை முறிக்கும் வேறு நோய்களும் இல்லாத போது வழமை போன்று நோன்பு பிடிப்பது கட்டாயக் கடமையாகும். இதிலிருந்து நம் விளங்குவது கொரோனா தொற்று நோய்க் காலம் நோன்பை விடுவதற்கான ஒரு சலுகை அல்ல.

நோன்பு வைப்பது மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவிதல்லை. பதிலாக நோன்பு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றே துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அல்லாமா அலி கரதாகி அவர்கள் தனது பத்வாவில் ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளார். இறந்த கலங்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் நோன்புக்கு உள்ளதாகவும் வைத்திய வைத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

‘நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது’ என சூரா பகராவின் 184ம் வசனம் கூறுவது எவ்வளவு பேருண்மையாகும். நோன்பு உலக வாழ்வுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் மறுமை வெற்றிக்கும் நல்லது என்பது இறை வழிகாட்டலாகும்.

கொரோனா தொற்றிய ஒருவர் அவர் ஒரு நோயாளி என்ற வகையில் நோன்பை முறித்து விட்டு பின்னர் கழா செய்யவேண்டும். நோய் காரணமாக நோன்பை விடுவதும் கழா செய்வதும் பரவலாக அனைவரும் அறிந்த விடயமே.

கொரோனா தொற்றும் என்று பயந்து நோன்பை விட முடியாது என்பது ஷரீஆவின் வழிகாட்டலாகும். தகுதிவாய்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் பரிசோதனை மூலம் கோவிட் 19 தொட்டும் வாய்ப்பு 50% மேல் சாதகமாக உள்ளது என்பது நிரூபனமானால் கழா செய்யும் நிய்யத்தோடு நோன்பை விடுவதற்கு முடியும் என ஹனபி பிக்ஹ் கலைக்களஞ்சியமான ஹாஷியதுல் இப்னுல் ஆபிதீனில் விளக்கம் தரப்பட்டுள்ளது. (1/116) மாலிக் மத்ஹபில் நோய் பீடிக்கும் என்ற பயத்தை காரணம் காட்டி நோன்பு நோற்பதை விட முடியாது என்ற கருத்தே வலுவான தெரிவாக உள்ளது.

கோவிட் 19 பரிசோதனை நோன்பை முறிக்குமா என பலர் வினவுகின்றனர்.

துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் இந்த பரிசோதனை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தியதன் பின்னரே இந்த கேள்விக்கான மார்க்கத் தீர்ப்பை வழங்க முடியும் என முஸ்லிம் அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் பத்வா குழுத் தலைவர் (கடார் கிளை) அஷ்ஷெய்க் ஜாஸிம் முஹம்மத் அல்ஜாபிர் அவர்கள் தனது பத்வாவில் குறிப்பிட்டுள்ளார்.

துறை சார்ந்த வைத்திய நிபுணர்களின் கூற்றின் படி கோவிட் 19 பரிசோதனை என்பது சுவாச சுரப்பிகளின் மாதிரியை பெறுவதற்காக ஒரு முறைமையாகும். வலைந்து நெலிந்து கொடுக்கும் ஒரு நீண்ட மென்மையான கோளின் நுனியில் ஒருவகை விசேட பருத்தி பஞ்சி பொருத்தப்பட்டிருக்கும். தொண்டை மற்றும் மூக்கின் அடிப்பாகத்திற்கு அதனை செழுத்தி தேவையான மாதிரி பெறப்படும்.

இந்த பரிசோதனை மூலம் வயிற்றுக்குள் எதுவும் செல்வதில்லை. அதற்கு பயன் படுத்தப்படும் விசேட குச்சியும் அதில் இருக்கும் பருத்தியும் தின்மமானதே. அதனால் எந்த திரவும் கசிந்து உள்ளே செல்லும் நிலை இல்லை.

எனவே நோயை அடையளம் காண்பதற்கு செய்யப்படும் இந்த பரிசோதனை நோன்பை முறிக்காது என்பது தெளிவாகும்.

முஹம்மத் பகீஹுத்தீன்

இந்த கேள்விக்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னர் இது சம்பந்தமான இன்னும் சில விடயங்களை நோக்குவோம். கொரோனா காலத்தில் கோவிட் 19 தொற்றாதவர்கள், அவர்களுக்கு நோன்பை முறிக்கும் வேறு நோய்களும் இல்லாத போது வழமை போன்று…

இந்த கேள்விக்கான விளக்கத்தை பார்ப்பதற்கு முன்னர் இது சம்பந்தமான இன்னும் சில விடயங்களை நோக்குவோம். கொரோனா காலத்தில் கோவிட் 19 தொற்றாதவர்கள், அவர்களுக்கு நோன்பை முறிக்கும் வேறு நோய்களும் இல்லாத போது வழமை போன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *