உடலரசியல்

  • 12

நான் எதையுமே மொழி பெயர்க்க முடியதவன்
உனது ஆட்ட அசைவை எப்படித்தான்
மொழி பெயர்க்க முடிந்ததோ
எனக்கு புரியவில்லை இந்தப் புதுமை

ஆட்ட அசைவற்ற நல்லிரவில்
மனிதர்கள் எப்படியோ
ஒரு போர்வைக்குள்ளே
அடங்கிப் போகின்றனர்

நான் உன்னை
மொழி பெயர்க்கின்றேன்
காற்றில் கலந்த வாசனைபோல்
எனக்குள் நீ மேலோங்குகின்றாய்

மெல்லிய பணித் தூறலுக்கு
விரிந்து கிடக்கும்
மலராக நிஜமாகிறாய் நீ

விறைத்துக் கிடந்த விழை நிலம் நனைந்து
பதமாகி வித்துக்கள் உளமகிழ்ந்து
நிலம் முளை அணிவது போன்று
நீ போர்வை மடிக்கின்றாய்
பேரின்பக் களைப்பில்

கானாத நீர் அலைகளை
உனது விழிக் கோளைகளுள் கானுகிறேன்
ஒரு காதலன் காதலியின் உணர்வு போன்று

ஒவ்வொரு நதியின் நடமாட்டமும்
உனக்குள் இவ்வளவு சாதுரியமா
சவாரி செய்வதை இவ்வளவு இலகுவாக
நான் கண்டதில்லை
நதிகளோ நீயாகின்றாய்

நீர் இல்லாத ஓடைகளை
நான் பார்த்தது உண்டு
உன் பாதங்கள் தொடாத நதிகளை
பார்க்கவில்லையெனத் தோன்றுகிறது

மாறி மாறி வரும் கோடையும் மாரியும்
மௌனித்துக் கிடப்பதும்
சீறி எழுவதும் எவ்வளவு பேரின்பம்
பேரின்பமென்றாலே இதுதானா

உனக்குள் இருந்து இரவை
ஆட்சி செய்யும் பணித் துளிகள்
தூவானமாய் சும்மா கிடந்த உடம்பை
ஊறுகாயை காலங் கொண்டவள்
சுவைப்பது போல் ஒரு சுகம்

அரசியலே எனக்குள் நீயாகின்றாய்
எதற்காக எங்கும் எமக்கு வாதம் பிரதி வாதம்
உனது உடலோ எனக்குள் அரசியலே
எனது ஆரம்பமும் முடிவும் உனக்குள்
நான் கொண்ட உடலரசியலாகவே இருக்கட்டும்
நான் நின்று போகிறேன் உடலரசியலுடன்…

நழீம் ஏ சுல்தான்.

நான் எதையுமே மொழி பெயர்க்க முடியதவன் உனது ஆட்ட அசைவை எப்படித்தான் மொழி பெயர்க்க முடிந்ததோ எனக்கு புரியவில்லை இந்தப் புதுமை ஆட்ட அசைவற்ற நல்லிரவில் மனிதர்கள் எப்படியோ ஒரு போர்வைக்குள்ளே அடங்கிப் போகின்றனர்…

நான் எதையுமே மொழி பெயர்க்க முடியதவன் உனது ஆட்ட அசைவை எப்படித்தான் மொழி பெயர்க்க முடிந்ததோ எனக்கு புரியவில்லை இந்தப் புதுமை ஆட்ட அசைவற்ற நல்லிரவில் மனிதர்கள் எப்படியோ ஒரு போர்வைக்குள்ளே அடங்கிப் போகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *