காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

  • 27

எதுவும் நிரந்தரமில்லை நாம் மனிதர்கள் அல்லவா! கிடைகும் வாய்பை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருவறையில் இருந்த காலம் தொட்டு கப்ருக்குள் செல்லும் காலம் வரை இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் மனிதனின் வாழ்க்கை அமையப் பெற்றிருக்கிரது. இன்றிருப்பது நாளை எம்மிடம் இருப்பதில்லை.

எமது காலம் ஒவ்வொரு கட்டாமாக கடந்து சென்று கொண்டே இருக்கிறது. வாலிபத்திலிருந்து வயோதிபம் வரை இவ்வாறு ஒவ்வொரு கட்டம் கட்டமாக எம்மை அது நகர்த்திச் செல்கிறது. ஆனால் காலத்தின் கொடுமை என்ன தெரியுமா? மனிதன் அந்தந்த காலங்களில் தத்தம் சந்தர்ப்பங்களை தவற விடுவது தான்.

நாம் இருக்கும் இந்த காலத்தை பொருத்த மட்டில் எமக்குத் தெரியாமலே இரு சந்தர்ப்பங்கள் எம்மை விட்டும் நழுவிக் கொண்டிருக்கிறது.

  • கொரோணா தந்த ஓய்வு.
  • ரமளான் என்னும் சிறந்த மாதம்.

நாம் நினைக்கலாம் கொரோணாஅது ஒரு சந்தர்ப்பமா? நமக்கு வந்த சாபம் அல்லவா அது இருக்கலாம் வீடுகளுக்குள் முடங்கச் செய்து விட்டதல்லவா. ஆனால் சீரிய சிந்தனை உள்ளவர்கள் இதனை தனக்குக் கிடைத்த ஒரு வாரமாக ஒரு சந்தர்ப்பமாக நினைத்து அதை பயன்படுத்தி வருகிறார்கள்.

வரலாற்றை சற்று புரட்டிப் பாருங்கள். கொடுங்கோல் அரசர்களால் சிறை வைக்கப்பட்ட பொழுது சிறைக்குள் இருந்தும் மக்களுக்கு நலம் தரக்கூடிய பலன் தரக்கூடிய பற்பல படைப்புக்களை படைத்திருக்கிறார்கள்.

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹ்மத்துல்லாஹி அவர்களால் எழுதப்பட்ட அதிகமான நூற்கள் அவர் சிறையில் இருக்கின்ற பொழுது தான் எழுதினார்கள் என்று அவரின் மாணவர் இபுனு அப்துல் ஹாதி என்பவர் கூறுகிறார். இமாம் ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் மிக பிரபல்யம் வாய்ந்த நூலான “பீ ழிலாலில் குர்ஆன்” என்ற குர்ஆன் விளக்க உரை நூல் அவர் சிறையில் இருக்கின்ற பொழுது அவர்களால் எழுதப்பட்டதாகும்.

இவ்வாறு ஒன்று இரண்டல்ல பல அறிஞர்கள் அவர்களின் இக்கட்டான சூழ் நிலைமைகளில் அந்த காலங்களை வீணாகாது சந்தர்ப்பமாக பயன்படுத்தி இருக்கின்றதை வரலாற்றின் ஊடாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் நாம் பலதும் சொல்லிச்சொல்லி புலம்பி புலம்பியே காலத்தை, சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டுக் கொண்டிருக்கிறோம்.

அடுத்தது எமக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய சந்தர்பம் ரமழான். ஆனால் நாட்கள் கடந்து செல்கின்றனவே தவிர நடத்தியது ஒன்றுமில்லை. வீணாக காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறோம்.

இறையருள், பாவவிமோசனம், நரக விடுதலை என்று மூன்றாக பிரித்து ஒரு சுன்னத்துக் ஒரு பர்ளுடைய நன்மையையும்; ஒரு பர்ளுக்கு எழுபது பர்ளுகளின் நன்மைகளையும் கொடுத்தும் நாம் அவைகளை அடைவதற்கு தயாரில்லை.

இவ்வாறான ஒரு அருமையான வாய்ப்பை கை நழுவ விடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஆனால் ஒரு காலம் வரும் அப்பொழுது மனிதன் இறைவனிடம் கெஞ்சுவான்.

“இறைவா என்னை உலகத்திற்கு திருப்பி அனுப்பு நான் விட்ட நல்லமல்களை செய்து வருகிறேன்”

ஆனால் காலம் கடந்து ஞானம் பிறந்து என்ன பயன்?

ஐந்து விடயங்கள் உன்னை வந்து சேரும் முன் ஐந்து விடயங்களை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள் என்றார்கள் அன்றொருநாள் மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

  1. வயோதிபம் வரும்முன் உன் வாலிபத்தையும்.
  2. நோய் வரும்முன் உன் ஆரோக்கியத்தையும்.
  3. ஏழ்மை வரும்முன் உன் செல்வத்தையும்.
  4. மரணம் வரும் முன் உன் வாழ்வினையும்.

சந்தர்ப்பங்களாக பயன்படுத்திக் கொள் என்றார்கள். ரமலான் நாம் செய்த பாவங்களை மன்னித்து சுத்தப் படுத்த வந்த மாதம். இத்தனை நாட்களில் நம்மில் எத்தனை பேர் இறைவனிடம் இரு கரம் ஏந்தினோம்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளவோம். ரமலான் மாதத்தை அடைந்தும் பாவவிமோசனம் பெறாதவன் நாசமாகட்டும் என்று ஜிப்ரீல் (அலை) சாபிக்க ஆமீன் கூறி ஆமோதித்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

மனிதா உன் காலம் முடிந்தால் ஒரு நொடியேனும் அவகாசம் இல்லை உனக்கு. சிந்தித்துக்கொள்.ஒரு நொடி கழிந்த காலத்தை எண்ணி கைசேதப் படாமல் இருக்க. ஆகவே, சிந்திப்போம்.

இறைவன் நம் அனைவருக்கும் இந்த ரமலானை பயன்படுத்துகின்ற பாக்கியத்தை தந்தருள்வானாக.

IzzathMismail
BA®
SEUSL

எதுவும் நிரந்தரமில்லை நாம் மனிதர்கள் அல்லவா! கிடைகும் வாய்பை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கருவறையில் இருந்த காலம் தொட்டு கப்ருக்குள் செல்லும் காலம் வரை இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் மனிதனின் வாழ்க்கை…

எதுவும் நிரந்தரமில்லை நாம் மனிதர்கள் அல்லவா! கிடைகும் வாய்பை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கருவறையில் இருந்த காலம் தொட்டு கப்ருக்குள் செல்லும் காலம் வரை இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் மனிதனின் வாழ்க்கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *