மாணவச் சமூகமே வேண்டாம் தற்கொலை எண்ணம்

  • 43

பரீட்சை பெறுபேறுகள்

இம்முறை பரீட்சைக்கு ​தோற்றிய பரீட்சார்த்திகளில், 73.84 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சையில் 10,346 பரீட்சார்த்திகள் 9A சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பெறுபேறுகளுக்கு அமைய கணித பாடத்தில் 66.82 வீதமானோர் சித்தி பெற்றுள்ளனர்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை 4,989 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது. 7,17,246 பரீட்சார்த்திகள் தோற்றியதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 189 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் இரண்டு இலட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள இந் நிலையில் சில அபாயமான சம்பவங்கள் எமது வீடுகளில் நடைப் பெற்று வருவதனை நாம் அறிவோம்.

அதில் முக்கியமான ஒன்றாக இன்று தற்கொலை இடம் பெறுவதை நாம் அவதானிக்கின்றோம்.

இவ்வாறு தற்கொலை நடைபெறுவதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால்,

  1. பரீட்சையில் தோல்வி
  2. எதிர் பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமை
  3. நாடு, மாகாண, மாவட்ட சிறந்த இடங்கள் கிடைக்காமை

போன்ற காரணங்களாகவே காணப்படுகின்றது.

தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம் போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம் பொருளாதாரச் சிக்கல்கள், கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம். தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன .

மாணவர்களைப் பொறுத்த வரை…

  1. பரீட்சையில் தேர்ச்சி அடையாமை.
  2. பள்ளியில் மற்ற மாணவர்களுடன் சுமுகமாக இருக்க முடியாமல் போதல்.
  3. மற்ற நண்பர்களால் ஒதுக்கிவைக்கப்படுதல்.
  4. உடல்ரீதியாக ஏதாவது குறைபாடு இருந்தால், அதனால் சுயபச்சாதாபம் ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்படுவது.

போன்ற பிரச்னைகள் காரணங்களாக இருக்கின்றன.

இவையெல்லாம் இருக்கட்டும். தற்கொலைக்கு 90 சதவிகிதம் உளவியல் காரணங்கள் இருந்தாலும், சமூகக் காரணிகளை நாம் ஒதுக்கிவிட முடியாது.

தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போகிறவரை எப்படி அடையாளம் காணுவது?

  • தங்களுடைய தற்கொலை விருப்பத்தை யாரிடமாவது வேறு வழியில் தெரிவித்திருப்பார்கள்.
  • தங்களுக்கு வாழ்க்கையிலேயே மிக முக்கியம் திருக்கும் பொருளை எளிதாக யாருக்காவது கொடுத்துவிடுவது.
  • விடைபெறுவது போன்ற தொனியில் தொலைபேசியில் பேசுவது.
  • தற்கொலை குறிப்பு எழுதிவைப்பது.
  • பதற்றமாக இருப்பது.
  • எதிலுமே ஈடுபாடு காண்பிக்காமல் இருப்பது.

இதெல்லாம் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள். இப்படிப்பட்டவர்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

இதற்கான தீர்வுகள்…

  • குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  • அம்மா, அப்பா இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்துவது, விளையாடவிடுவது அவசியம். குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர அது உதவும்.
  • விரக்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க பல மையங்கள் இருக்கின்றன. தொலைபேசியில்கூட தொடர்புகொண்டு அவர்களுடன் பேசலாம். இது நல்ல தீர்வு தரும்.
  • `Suicide counter’- என்று ஒன்று இருக்கிறது. நடுத்தர வயது உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வது குறைவு. இளைஞர்களும், வயதானவர்களும் தற்கொலை செய்துகொள்வதுதான் அதிகம். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால் இது நேர்கிறது. வயதானவர்களுக்கு `எல்லாம் போய்விட்டது, நமக்கு யாரும் இல்லை, வாழ்வதில் அர்த்தம் இல்லை’ என நினைத்து இந்த முடிவைத் தேடுகிறார்கள். 30 – 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருப்பார்கள். பிள்ளைகளை வளர்க்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும். என நிறைய பொறுப்புகள் இருக்கும். இந்தப் பொறுப்புகளை வளர்த்துக்கொள்வதைத்தான் `Suicide counter’ என்று சொல்கிறோம். `என் பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சுட்டா போதும். அதுக்கப்புறம் எனக்கு ஒண்ணும் இல்லை. செத்துப் போய்விடுவேன்’ போன்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைத் தவிர்க்கலாம்.
  • உறவினர்களுடனான உறவைப் பேணுவது; நண்பர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுவது; ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது, எல்லாமே இதற்கு நல்ல தீர்வைத் தரும்.
  • ஓய்வுகாலத்தைக்கூட பயனுள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல், மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், இந்த எண்ணம் வராது.
  • தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. உயரமான இடங்கள் (செல்போன் டவர், லைட் ஹவுஸ்…) பாதுகாப்பற்ற இடங்களில் அதை நெருங்க முடியாதபடி தடைகளை (Barricade) ஏற்படுத்தலாம். அதற்கு அரசு ஆவன செய்யலாம்.
  • நம் நாட்டில் துப்பாக்கிக்கு கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், துப்பாக்கியால் செய்துகொள்ளும் மரணங்கள் குறைவு. ஆனால், பூச்சிகொல்லிகளுக்கு தடை இல்லை. பெரும்பாலானவர்கள் பூச்சிகொல்லிகளைத்தான் தங்களைக் கொல்லும் ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். இலங்கையில்கூட இதற்கு கட்டுப்பாடு வந்துவிட்டது.
  • அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, பெற்றோரே குழந்தைகளை எதையும் எதிர்கொள்ளத் தயார்ப்படுத்த வேண்டும். பரீட்சை வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பதல்ல. ஒரு மாதம் கழித்து இன்னொரு பரீட்சை எழுதிக்கூட தேர்ச்சி பெற்றுவிடலாம் என தைரியம் கொடுக்கலாம். இது ஒரு தற்காலிகத் தோல்வி; இதற்காக நிரந்தரமாக ஒரு முடிவைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற விஷயத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதை ஊடகங்களிலும் பரவலாகச் சொல்ல வேண்டும்.
  • பள்ளிகளில் ஸ்டூடன்ட் கவுன்சலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பிரச்னை வரும்போது அவர்களுக்கு உரிய ஆலோசனை தர வேண்டும்.
  • எப்போதாவது பொருளாதார மந்தநிலை வரும்போதும் தற்கொலைகள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசும் மக்களுக்கு உதவ வேண்டும்.

இப்படி மேலுள்ளவாறு பலரும் பல்வேறு விதமான முடிவுகளை முன்வைப்பார்கள்.

“எனவே அவர்கள் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியாமல் பரீட்சையில் தோல்வியுற்று வாழ்கையில் வெற்றி பெற இருக்கும் சாதனையாளர்களை பார்த்து சொல்கிறேன்.”

நீங்கள் நினைத்தால், மீண்டும் முயற்சி செய்து பரீட்சையில் சித்தி பெறலாம். அல்லது தனக்கு இத்துறையில் தொடர விருப்பம் இல்லை என்றால் இன்று ஏராளமான பயிற்சி நெறிகள் (Courses) உள்ளன.

உங்களுக்கு பொருந்தும் ஒரு Course ஐ தெரிவு செய்து அதில் தொடர்ந்து இறுதி வரை செல்ல உறுதி கொள்ளுங்கள்.

“சளைத்து விடாதீர்! நிச்சயம் உன்னையும் ஒருநா‌ள் இவ்வுலகம் திரும்பிப்பார்க்கும்.”

NAFEES NALEER (IRFANI)
Irfaniya Arabic and Islamic College,
BA.Rea..(SEUSL),
Diploma in counseling Rea…(NISD),
Editor of veyooham media center.

பரீட்சை பெறுபேறுகள் இம்முறை பரீட்சைக்கு ​தோற்றிய பரீட்சார்த்திகளில், 73.84 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். பரீட்சையில் 10,346 பரீட்சார்த்திகள் 9A சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை பெறுபேறுகளுக்கு அமைய கணித பாடத்தில்…

பரீட்சை பெறுபேறுகள் இம்முறை பரீட்சைக்கு ​தோற்றிய பரீட்சார்த்திகளில், 73.84 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். பரீட்சையில் 10,346 பரீட்சார்த்திகள் 9A சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இம்முறை பெறுபேறுகளுக்கு அமைய கணித பாடத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *