சிறகில்லா தேவதை அவன்

  • 13
அண்மையில் ஒரு பதிவு அதைக் கண்டு கலங்கியதென் உள்ளம்!

இதோ அது:

பெண்களை விட ஆண்கள் பலமாக படைக்கப்பட்டது ஏன்?
  1. தேங்கா உடைக்க
  2. துதல், மஸ்கத் கெண்ட்ட
  3. சிலின்டர் தூக்க
  4. குப்பை பேக்க புலக்கட பக்கம் இருந்து ரோட்டுக்கு தூக்கி வர
  5. கோழி மாடு அறுக்க
  6. அரிசி மூடை தூக்க
  7. ஊடு கழுவுர டைம் தையமிசின், சோபா சாமான தூக்கி வெக்க.
  8. கரண்ட் இல்லாத டைம் கிணத்துல தண்ணி அல்ல
  9. தண்ணி டாங்கி கழுவ
  10. பலாப்பழம் அறுக்க
  11. மடுவு வெட்ட
  12. மயங்கினா தூக்கிட்டுப் போக
  13. பிள்ளைகளுக்கு அடிக்க
  14. பயங் காட்ட
  15. ஏணில ஏற தூக்க
  16. பைக் தள்ள ஓட
  17. கொள்ளி கொத்த
  18. மரம் தறிக்க
  19. பெயின்ட் அடிக்க
  20. நாய் விரச

ஆண்
உச்சரிக்கும் போதே ஒரு
உறுதி, வீரம்
உயர்வு, தைரியம்
கண்ணியம், கடுமை
கலந்த ஏதோ ஒரு உணர்வு

ஆணாதிக்கம், பெண் விடுதலை
அதற்கப்பால்
ஆண் சரிதை கொஞ்சம் கேளாயோ?
பெண்சாபம் பொல்லாதெனில்
ஆண் சாபம் சொல்லாதது!

எம் மத்தியில்
சிறகின்றி நடமாடும் தேவதை
ஆண்!

மகனாய் சகோதரனாய்
கணவனாய் தந்தையாய்
பாட்டனாய் பல
கனரகப் பாத்திரங்களேற்று
பலரக கஷ்டங்களையும்
பலருக்காய் இஷ்டமென்றேற்று
வலம் வருகிறான்
ஆண் தேவதை!

பிறப்பில் கொண்டாடப்பட்டு
வளர்ப்பில் கோலாட்டம் பெற்று
பின் திண்டாட்டம் கண்டு
நடமாடுகிறான்
ஆண் தேவதை!!

தகுந்த படிப்பிருந்தும்
திறமைகள் தட்டிக்கழிக்கப்பட்டு
தள்ளிவிடப்பட்டாலும்,

தயாள குணமிருந்தும்
தகுந்த தொழிலின்றி வீட்டில்
எள்ளிநகையாடப்பட்டாலும்,

சதா நாழிகைகளும்
நெஞ்சறைகளில்
வளிக்கு பதிலாய் வலியை
சுவாசித்துக் கொண்டு
எதையோ நோக்கி
எவருக்காகவோ
நகர்ந்து கொண்டுதான்
இருக்கிறான்
ஆண் தேவதை!

தான் கட்டிய
கனவுக் கோட்டையை
தானே இடிப்பவன்
தன் பெற்றோருக்காய்

ஆசையாய் வாங்கிய
பண்டங்களின் தியாகம்
தன் உடன்பிறப்புகளுக்காய்

இளநரையுடன்
வயதுகளின் தியாகம்
தன் மனைவி, பிள்ளைகளுக்காய்

மேற்படிப்பாசைகளின் தியாகம்
தன் தங்கைகளின் திருமணத்திற்காய்

ஆயுள் முழுதும்
அர்ப்பண தியாகம் பூண்டு
அங்குமிங்குமாய்
நின்று கொண்டிருக்கிறான்
ஆண் தேவதை!

உதவாக்கரை தண்டச்சோறு
ஆத்திரக்காரன் அலட்சியக்காரன்
இலிச்சவாய் கடுகடு மூஞ்சி
பெண்ணுக்கடிமை
அடக்கியாள்பவன்
என்ற வர்ணணைகள்
தாங்கினாலும் தன்
பொறுப்பை முடிக்கும் வரை
பொறுமையாய்
ஓடிக்கொண்டிருக்கிறான்
ஆண் தேவதை!

ஓவென அழுதிட முடியாது
ஓடி ஒழியவும் இயலாது
மென்று விழுங்கவும் முடியாது
மெல்ல உமிழவும் இயலாது
சில பொழுதுகள் நகராமல்
சிலையாய் நிற்க
ஆழ் மனதில் அழுத்தி வைத்து
அடுத்த யோசனையில்
அயர்ந்திடுவான்
ஆண் தேவதை!

இத்தனையும் தாண்டி

ஒரு மகனாய் தன் ஆசைகள் துறந்து
ஓராயிரம் ஏமாற்றம் தாங்கி
ஓடிக்கொண்டிருக்கிறான்

ஒரு சகோதரனாய்
பல்லாயிரம் சிக்கல்களில் சிக்கி
சிதைந்து கொண்டிருக்கிறான்
ஆண் தேவதை!

ஒரு கணவனாய்
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்

ஒரு தந்தையாய்
தன்னையே தகனித்து
தியாகித்து திண்டாடி
தலை நிமிர்ந்து நிற்கிறான்
ஆண் தேவதை!

தன் துயர் மறைக்க
தனக்குத் தானே பூண்ட ஆடையோ
“அவனின் கடுமைத் தன்மை!”

ஒவ்வொரு ஆணும் ஒரு தேவதையே!

கண்ணியம் மிக்க ஒவ்வொரு ஆண்மகனுக்கும் சமர்ப்பணம்!

ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ _ SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

அண்மையில் ஒரு பதிவு அதைக் கண்டு கலங்கியதென் உள்ளம்! இதோ அது: பெண்களை விட ஆண்கள் பலமாக படைக்கப்பட்டது ஏன்? தேங்கா உடைக்க துதல், மஸ்கத் கெண்ட்ட சிலின்டர் தூக்க குப்பை பேக்க புலக்கட…

அண்மையில் ஒரு பதிவு அதைக் கண்டு கலங்கியதென் உள்ளம்! இதோ அது: பெண்களை விட ஆண்கள் பலமாக படைக்கப்பட்டது ஏன்? தேங்கா உடைக்க துதல், மஸ்கத் கெண்ட்ட சிலின்டர் தூக்க குப்பை பேக்க புலக்கட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *