உண்மையாளர்களும் சோதனையும்

உண்மையாளர்களுடன் சோதனை என்பது நகமும் சதையும் போன்ற உறவு போன்றது. அவர்களை விட்டு இணை பிரியாது அவர்களோடு ஒட்டிக் கொண்டே இருக்கும். சோதனைகள் இல்லாத உண்மையாளர்கள் காண்பது மிகவும் அரிது வரலாற்றில் அதிகம் இடம் பிடித்தவர்கள் இவர்களாகவே இருப்பார்கள். இதில் துரதிஷ்டம் என்னவென்றால் அவர்கள் வாழும் போது அவர்களின் நீதி, நேர்மை, கடமை உணர்வு, அஞ்சா நெஞ்சம், வீரம், அரசனுக்கும் அடிபணியாத மார்க்க உறுதி போன்றவைகள் பொது மக்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கு செய்யப்படும் அநீதிகளை கை கட்டிப் பார்த்துக் கொண்டிருபார்கள். அவர்கள் மறைந்த பிறகு தான் அவர்கள் பற்றிய உண்மைகள் அவர்களுக்கு புலப்படுகிறது. அதற்கு பிறகு கைசேதப்பட்டு எந்த பிரயோசணமும் இல்லை. உண்மையாளர்களை வீழ்த்துவதற்காக அசத்தியவாதிகள் கங்கணம் கட்டிக் கொண்டு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டிருபார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் கனகட்சிதாமாக அவர்களின் வேலையை செய்து முடித்து விடுவார்கள்.

இப்படி சோதனைக்கு உள்ளான ஏராளமான உலமாக்கள் இருக்கிறார்கள் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அது போல் சோதனை நிறைந்த ஒருவர் தான் முஹம்மத் பின் அஹ்மத் பின் அப்துல் மலிக் பின் நஸீர் அபூ அலாதா அல் பாராயிழி அல் ஜின்னி என்பவர். இவர் ஒரு ஹதீஸ் துறையை சேர்ந்தவர். ஒரு அறிவிப்பாளரும் கூட.

இமாம் இப்னு யூனுஸ் எகிப்திய வரலாறு என்ற நூலில் அவர் பற்றி குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகிறார்: அவருக்கெதிராக பொய் சாட்சி கூறப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் அவருக்கு சாட்டையினால் அடித்தார்கள் சிறைக் கைதியாக இருந்த நிலையிலையே அவரை மரணம் வந்தடைந்தது . (அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை தங்கும் வீடாக ஆக்கி விடுவாயாக) அவர் ஒரு சிறந்த நாவன்மை உள்ளவர். நாட்டின் சில முக்கியம் வாய்ந்தவர்களைப் பற்றி பேசியதே இவர் செய்த தவறு. அவர் யாரை தாக்கிப் பேசினாரோ அவர்களால் பொய் சாட்சியங்களை உருவாக்கி சுல்தானிடத்தில் அவருக்கு எதிராக பொய் சாட்சி சொல்லப் பட்டது. சாட்சியை ஏற்ற சுல்தான் இமாம் முஹம்மத் பின் அஹ்மதை சிறையிலிட்டு சாடையால் அடித்து துன்புறுக்தினான். அவன் சாட்டையால் அடித்து துன்புறுத்தி சில நாட்களுக்கு பிறகு இமாம் அவர்கள் மரணித்து விடுகிறார்கள்.

இமாம் அல் கிந்தி கூறுகிறார்கள்: நாவன்மை உடையவராகவும் முரண்பாடுடையவராகவும் இருந்தார். அதிகமான மனிதர்களிடம் வெறுப்புக்குரியவராக இருந்தார், சிறிய தவறு ஏற்பட்டவுடனே கீழ்தரமானவர்கள் அவருக்கு எதிராக பொய் சாட்சி கூறி அவருக்கு எதிராக கூடினார்கள். இந்த செய்தி சுல்தானிடம் வந்தடைகிறது. மக்களின் சாட்சியையும் ஏற்றுக் கொள்கிறார். பலமுறை சாட்டையால் அடித்து தண்டித்தார்கள். இதன் மூலம் அந்த இழி பிறவிகள் நாடியது அவரை இழிவு படுத்த வேண்டும் என்பதே. மக்களுக்கு அவர் அணியாயம் செய்யப்பட்ட விடயம் வெளிச்சதிற்கு வந்தது. அவர் எதற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டாரோ அது அவரின் நாட்டம், எண்ணம் இல்லை என்று அறிய வந்தது. அவருக்கு எதிராக பள்ளி நிர்வாகிகளே கடுமையாக இருந்தார்கள்.

இப்னு கதீத் என்ற அறிஞர் கூறுகிறார் அந்த பள்ளி நிர்வாகிகள் செய்த மிக மோசமான செயல் இமாம் அபூ அளாதாவை கொள்ளும் வரையில் அவருக்கு எதிராக பொய் சாட்சி கூறியதே என்று. அவர் சிறையில் அடைக்கப் பட்ட காரணம் அலி ரழி அவர்களை ஏசியது தான் என்று கூறப் படுகிறது. பின்பு அவருக்கெதிராக சாட்சிகள் புனையப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சாட்டையால் கடுமையாக தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு மரணித்தார்கள் என்று இமாம் மஸ்லமா பின் காசிம் கூறுகிறார்கள். இவர் சொத்துப் பங்கீடு பாராயில் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்றும் குறிப்படப் படுகிறது .

ஒருபோதும் உண்மையாளர்களை விட்டும் சோதனை பிரிந்திருக்காது. சோதனை அவர்களின் உயிரிலும், உயிர் நாடியிலும் இரண்டரக் கலந்திருக்கும். அவர்கள் வாழ்வதும் சாவதும் அல்லாஹ்வுக்காக மாத்திரம் தான். எவ்வளவு அடித்து உடம்பை சிதைதைத்தாலும் அவர்களின் ஈமானிய நம்பிக்கையை எந்த இரும்புக் கரங்கள் கொண்டும் அடக்க முடியாது. அது படைத்த இறைவனுக்கு மட்டுமே சென்றடையும் .

அல்லாஹ் உங்களையையும் எங்களையும் உண்மைக்காக போராடும் குரல் கொடுக்கும் மக்களாக ஆக்கி எங்களது பாவங்களை மன்னித்து, நல்லமல்களை என்றுக் கொள்வானாக .

إرشاد القاصي والداني إلى تراجم شيوخ الطبراني لأبي الطيب نايف بن صلاح بن علي المنصوري : (496) .

P.T.Kaseer Azhary

உண்மையாளர்களுடன் சோதனை என்பது நகமும் சதையும் போன்ற உறவு போன்றது. அவர்களை விட்டு இணை பிரியாது அவர்களோடு ஒட்டிக் கொண்டே இருக்கும். சோதனைகள் இல்லாத உண்மையாளர்கள் காண்பது மிகவும் அரிது வரலாற்றில் அதிகம் இடம்…

உண்மையாளர்களுடன் சோதனை என்பது நகமும் சதையும் போன்ற உறவு போன்றது. அவர்களை விட்டு இணை பிரியாது அவர்களோடு ஒட்டிக் கொண்டே இருக்கும். சோதனைகள் இல்லாத உண்மையாளர்கள் காண்பது மிகவும் அரிது வரலாற்றில் அதிகம் இடம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *