அருள்மிகு ரமழானும் வினா விடை போட்டியும்

கண்ணிமிக்கவர்களே இந்த ரமழானுடைய மாதம் எட்டாகி விட்டது.

இப்போது உலகத்திலே ஒவ்வொரு சீசனுக்கான ஒவ்வொரு புதிய ஷைத்தான்கள் தோன்றுவார்கள். அது போன்று இந்த ரமழானிலே புதிய ஷைத்தான்கள் தோன்றியிருக்கிறார்கள். அவங்க தான் யார்ன்டு கேட்டா போட்டி வெக்கிறவங்க. போட்டி வெக்கிறன் போட்டி வெக்கிறன்டு ஒரு நாளைக்கு ஒரு கேள்வி அந்த கேள்விய பாத்தா அதுக்கு விட தேடுரதுக்குலேயே அன்றைய நாள் புள்ளா சின்னவங்க, பெரியவங்க, மௌலவிமார், உலமாக்கள் எல்லாருமே அதுலயே மூழ்கிர்ராங்க.

உலமாக்கள் போட்டிக்கு சேர மாட்டாங்க. அவங்க குர்ஆன் ஓதுவாங்க. ஹதீஸ் பார்பாங்க. மக்களுக்கு ஹதீஸ் சொல்லுவாங்க இப்படி தான் இருப்பாங்க. ஆனா இந்த போட்டிய கேட்டவுடனே சின்ன புள்ளைகளுக்கு பரிசு என்ன தெரிமா பெஸ்ட் பிரைஸ் 2500வாயாம், செகன்ட் பிரைஸ் 2000வாயாம், தேட் பிரைஸ் 1500வாயாம். இப்படி பிரைசயிம் போட்டுடுவாங்க.

இந்த 2500 ரூவா 2000 ரூவாக்காக முழு 30 நோம்பயும் வீணடிக்குது ஒரு சமூகம்.

சங்கையான நல்ல மக்களே நான் சொல்ற இந்த விஷயத்த நீங்க எல்லாம் கேப்பிகன்டு நா நெனக்கிறன்.

சும்மா அவங்க இவங்க போடுற அந்த ஷைத்தானிய சிந்தனைக்கு நாங்களும் நீங்களும் ஆளாகக் கூடாது.

கேக்குற கேள்வி என்னா ஆன்மீகத்துல பிரயோசனமளிக்குதா இல்லாட்டி அல்லாஹ்ட நெருக்கத்த உண்டாக்குதா?

என்ன கேள்வின்டு பாத்தா நேதெல்லாம் நானும் பாத்துடீந்தன் நம்ம வீட்டு பக்கம் உள்ள மௌலவிகிட்ட நம்ம வீட்ட தான்டி ஒரு சின்னவன் பெய்ட்டு கேக்ரான். மெளலவி குர்ஆன் வருதாமே ரா என்டு சொல்ற எழுத்துல புள்ளா முடிதாம் என்ன சூரா என்டு கேக்ரான்.

இன்னும் கேட்கிறான் அந்த மௌலவி கிட்ட பெய்ட்டு ஹலாலா என்டா என்னான்டு கேட்டிகிறான். அந்த மௌலவி ஹலாலா என்றதுக்கு பதில் சொல்றதுக்கே பல மௌலவிமாரோட தொடர்பு கொண்டு தான் சொல்லனும். எடுத்தெடுப்புல சொல்லேலாது.

அது எனன்டா அனந்தர சொத்தோட சம்பந்தப்பட்ற ஒரு கருத்தாயிருக்கு தம்பி அதுல ஒனக்கு என்ன பிரயோசனம் என்ன தேவன்டு கேக்குறாரு. இதெல்லாமே தேவையில்லாம இந்த கால கட்டத்த வீணடிச்சி இப்பிடி ஒரு போட்டி.

மொதலாவது இதெல்லாம் நிறுத்தி போட்டு குர்ஆன் ஓதுரதுல போட்டி போட்டதாக நமது முன்னோர்கள்ட பேச்ச கேக்குறம். நானும் கேக்குறன் நீங்க எதுன பேர் போட்டி போட்டங்க அதுக்கு என்ன பிரைஸ் கெடக்கிம் நிச்சயமா சொர்க்கம் கெடக்கிம்.

அல்லாஹ்ட பொருத்தம் கெடக்கிம். அல்லாஹ்ட நெருக்கம் கெடக்கிமே அத மறந்து போட்டு போட்டிய போட்டி போட்றக?

ஒரு கேள்வி. ஒருத்தன் கேக்குறான் மூஸா(அலை) கல்லால அடிச்சது யாருன்டு அதுல என்ன பிரயோசம் இருக்கு அந்த கேள்வி எங்க கெடக்கிம்? மூஸா(அலை) யாரோட சன்ட புடிசாங்கன்டு கேட்டா அது சரித்திரத்த பாத்து சொல்லும் போதே இன்டகி சட்டுனு காலம் நேரம் பெய்த்துருது. காலைல எழுந்த ஒடனே என்ன கேள்வின்டு தான் மக்கள் தேடராகளே தவிர தன்ன தானே கேள்வி கேக்க தயாரா இல்ல.

இப்படிபட்ட விணான கேவலமான செயல்கள் செய்ரவகல்கு யாரும் ஈடு குடுக்கவும் வாணம் மாட்டி படவும் வாணம். இந்த போட்டி எல்லாம் தூக்கி ஒரு மூலைல போட்டுட்டு குர்ஆன் ஓதுர போட்டிக்கு வாங்க. இது வரகிம் இன்டகி ஏழை  நோம்பு முடிது எத்துன பேர் ஏழு ஜுஸ முடிசிறிங்க? இல்ல ஒரு ஜுஸ முடிச்ச எதுன பேர் ஈகிராங்க? இன்னம் குர்ஆனயே கைல எடுக்காம எத்துன பேர் ஈகிராங்க. கொஞ்ம் நாளக்கி முன்னால குர்ஆன்ல முடி குர்ஆன்ல முடி என்டு சொன்னாங்க எல்லாம் குர்ஆன்ல முடி தேடியே குர்ஆன கைக்கு எடுத்தங்க. சூரதுல் பகரால முடியாம் சூரதுல் முல்க்ல முடியாம் எல்லாறும் முடி தேடினாங்க. முடி தேடியே முடிசாங்க ஆனா குரான ஓதி முடிக்கல இன்னமும்.

ஆகவே என் அன்பார்ந்த சின்னஞ் சிறுவர்களே வாங்க நான் ரெடி. நீங்க ரெடியா? போட்டி போடுவம். எதுல? இந்த போட்டியெல்லாம் தூக்கி குப்பைல போட்டுங்க. அவங்க எல்லாம் பரிசு தர்வாக தராம போகட்டும். நிச்சியமா இந்த போட்டில நீங்க போட்டி போட்டா தோல்வியே இல்ல. ஜெயிபிங்க. அல்லாஹ்ட நெருங்குவிங்க. ஏன் தெரியுமா நீங்க போட்டி போட்றது அவர்ட இவர்ட பேச்சில இல்ல அல்லாஹ்ட பேச்சில. அல்லாஹ்ட கலாம். வாங்க நானும் ரெடி இன்றோட நீங்களும் ரெடி ஆகுங்க. இனி கேள்விக்கு பதில் கேக்கவும் வாணம். இனி கேள்விக்கு பதில் சொல்லவும் வாணம். எந்த போட்டில பங்கு பெறவும் வாணம். வீணான விளையாட்டு, இந்த போட்டி அது போல தான். ஒரு சூது என்டு தான் நான் சொல்லுவன்.

(இது ஒரு காணொலியின் எழுத்து வடிவம் ஆகும்)

உங்கள் பிள்ளைகள் கவனம்

தவறு செய்யாத வரைக்கும் எல்லோரும் நல்ல பிள்ளைகளே நம் பிள்ளைகள் நல்ல பிள்ளைகளே! ரமழான் போட்டி பாடம் அது இது என்று உங்கள் பிள்ளைகள் வட்ஸ் அப் குலுமம் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களை பயன் படுத்தும் பிள்ளைகளின் தொலைபேசி பாவனைகளை பெற்றோர்கள் சகோதரர்கள் பொறுப்புதாரிகள் நாளாந்தம் அவதானியுங்கள்.

இது உங்கள் பிள்ளைகளின் நலவிற்குதான். அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் கவலைப்படும் கௌரவமான பெற்றோர்களின் மானம் காற்றில் பறக்க கூடாது என்ற நோக்கம் தான். ஏழைகளுக்கு குறிப்பாக பொதுவாக நல்ல மனிதர்களுக்கு அவர்களின் கௌரவம் மானம் உயிரிலும் பெரிது.

இதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளின் விடையத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இங்கு பெண் பிள்ளைகளை அடிமைப் படுத்தும் நோக்கமல்ல உங்களுக்கு தெரியும் பெண் என்பவள் எப்படி பாதுகாக்ககப்பட வேண்டும் என்று. இல்லை என்றால் ஓநாய்களுக்கு இறையாகி விடுவார்கள்.

இதனை நல்ல முறையில் பயன்படுத்தும் பெண் பிள்ளைகளும் உண்டு. ஆண்களைப் பற்றி சொல்லப்படுகிறது போனால் அவர்கள் சேத்தைக் கண்டால் மிதிப்பார்கள் தண்ணீரைக் கண்டால் கழுவி விட்டு போய் கொண்டிருப்பார்கள்.

இதனால் ஆண்கள் சமூகம் எல்லாம் கெட்டவர்கள் என்று அர்த்தம் இல்லை நல்லவர்கள் இரிக்கத் தான் செய்கிறார்கள். விபரீதத்ததை வைத்தே நாம் முடிவை எடுக்க வேண்டும் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் எமது பெண் பிள்ளைகள் அதனால் தான் பெண் பிள்ளையின் வாழ்கையில் அதிகம் கவனம் செலுத்துங்கள் என்று கூறினேன்.

அத்தோடு பெண் பிள்ளைகளை கட்டிக் காத்து வளர்ப்பது போல் ஆண் பிள்ளைகளையும் பெற்றோர்கள் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்து வளருங்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள் விடயத்தில் அவர்களுக்குக்கு வீட்டில் உள்ள சூழலை சொல்லிக் கொடுத்து வளருங்கள்.

அடுத்தவன் தனது தங்கையோடு பேசும் போது நாம் ஏற்றுக் கொள்வோமா? இல்லை எனும் போது நாம ஏன் நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவர்களுக்கு செய்ய விரும்புகிறோம். என்று எச்சரிக்கை செய்து உங்கள் ஆண் பிள்ளைகளை வளருங்கள்.

சிறிய ஜாபகமூட்டுதல் முஃமீன்களுக்கு ஜாபகமூட்டுதல் பிரையோசனம் அளிக்கும். இன்ஷா அல்லாஹ். அடுத்தவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் இது பயனுள்ளது என்று நீங்கள் கருதினால்.

NAFEES NALEER (IRFANI),
BA (R) (SEUSL)

One Reply to “அருள்மிகு ரமழானும் வினா விடை போட்டியும்”

Leave a Reply

Your email address will not be published.