விடு முறை காலத்தில் வீர நடை போடும் வீட்டு வன்முறைகள்

  • 13

ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியாக பலவாறான சவால்களையும் அச்சுறுத்தல்களையும் நோக்குவது வழமை. ஆனால் உலகளாவிய ரீதியில் ஒற்றுமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஒரே வகையான ஓர் அபாயத்தை எதிர் கொள்வது சர்வதேச ரீதியிலே குழப்பகரமானதாகும். அவ்வகையில் கொரொனா கிருமித் தொற்று பரவி வருவதினை கட்டுப்படுத்த அமுல் படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் திடீர் வேலை இழப்பு போன்றன எதிர் மறை தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

மனிதனுக்கு மனிதன் மனோநிலை மாறுபட்டுக் காணப்படுவதுடன் அது மாறுபடக்கூடியதுமே! அடுத்தது காட்டும் பளிங்கு போல மனித மனோநிலை மாறுதல்கள் நடத்தைக் கோலத்தில் பலவாறான மாறுதல்களை ஏற்படுத்த வல்லன. குடும்பம் எனும் அலகினில் இம்மாறுதல்கள் ஆதிக்கம் செலுத்தையில் வீட்டு வன்முறைகளாக வெடித்து அவ் அலகே சிதறிச் செல்கிறது.

வீட்டு வன்முறை என்பது

அதிகாரத்தை மற்றும் கட்டுப்பாட்டைப் பிரயோகிக்கும் பொருட்டு ஒருவர் மீது மற்றொருவர் மேற்கொள்ளும் துஷ்பிரோகம் அச்சுறுத்தல்கள் நடவடிக்கைகள் வீட்டு வன்முறை என வரையறுக்கலாம்.

இதனால் ஆண்கள் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட போதிலும் பெண்கள் அதிகமாக பாதிப்புறுவதினால் இதனை நாம் பெண்களுக்கெதிரான வன்முறை என பொதுப்பெயர் கொண்டு அழைக்கிறோம்.

ஆணானவன் தனது அதிகாரத்தையும் ஆளுமைகளையும் பயன் படுத்தி தன்னைச் சார்ந்த மக்களை தனது ஆளுமைக்குள் உட்படுத்துகின்ற போது வீட்டு வன்முறைகள் அதிகரிக்கின்றன.

வீட்டுவன்முறைகளுக்கு களம் அமைக்கின்ற காரணிகளாவன

  • அத்தியவசியமான சில விடயங்கள் கிடைக்காத நிலைமையில் (பொருளாதாரம், உற்பத்திகள், சொத்துடைமைகள்)
  • வறுமை
  • மன அழுத்தம்
  • சமூக பண்பாட்டுக்காரணிகள்
  • ஆணாதிக்க சிந்தனை

காரணிகள் பல ஒருங்குசேர இவ் விடுமுறை காலப்பகுதியினில் உலகளாவிய ரீதீயில் வீட்டு வன்முறைகளானது அதிகரித்து செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

சில நாடுகளினது தரவுகளை நோக்குவோமானால், சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிற்குள்ளே வசிப்பதால் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நகரங்களில் இருந்து பல இளம் பெண்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் பல பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என குவான் ஜுங் என்ற பெண் செயற்பாட்டாளர் குறிப்பிடுகின்றார். மேலும் சீனாவில் “#Anti domestic violence during epidimic” என்ற #டெக் மிகவும் டெரன்டிங்கில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீனா துவக்கம் பல நாடுகளிலும் கொரொனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களின் கலவையும் நடமாட்டத்திற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளும் வீட்டு வன்முறைகளை ஏற்படுத்த வல்லன.

வைரஸ் தொற்றிற்கு முன்பே உலகெங்கிலும் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருவித வன்முறையை அனுபவிக்கின்ற போதும் இக்காலப்பகுதியில் எல்லா நாடுகளிலும் துஷ்பிரயோகத்தை எதிர் கொள்ளும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஊரடங்கின் போது அனைவரும் வீட்டில் இருப்பதினால் வேலைகளின் சுமை வீடுகளில் அதிகரித்துள்ளது, வீட்டு பராமரிற்கு பணியாளர்களும் கிடைக்காத பட்சத்தில் பெண்கள் தான் அதிகளவு சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

அவ்வாறு செய்யத்தவறும் சந்தர்ப்பத்தில் இன்றளவில் வன்முறைகளாக வெடிக்கும் சந்தர்ப்பங்களை அவதானிக்கலாம்.

வீட்டு வன்முறைகளின் வகைகள்
  1. உடலியல் ரீதியானவை
  2. உளவியல் ரீதியானவை
  • உடலியல் ரீதியானது
  1. அடித்தல்
  2. கட்டாய உடலுறவுக்கு உட்படுத்தல்
  3. உடலியல் துன்புறுத்தல்கள்
  • உளவியல் ரீதியானது
  1. பெண்கள்  செய்யும் பணிகளில் குற்றங் கண்டு பிடித்தல்
  2. அநாவசியமாக நடத்தையை தூற்றுதல்
  3. பயமுறுத்தல்
  4. மிரட்டல்

இக்கிருமித்தொற்றுக்கு முன்பும் இவ் வன்முறைகள் காணப்பட்ட போதிலும் இன்றளவில் அதிகரித்த வேலைப்பளு குடும்பத்தினில் உறுப்பினர்களை அதிக நேரத்திற்கு வீட்டிற்குள் முடங்க வைக்கவில்லை.

ஆனால் கொரோனா கால விடுமுறையில் உறவுகளுக்கிடையே இடைவெளி குறைக்கப்பட்டுள்ளமை வீட்டு வன்முறைகளை நெருக்கமாக்கியுள்ளது. இதனால் உடல்ரீதியாக மாத்திரமின்றி உள ரீதியான நாட்பட்ட வடுவுடன் வாழத் தலைப்பட நேரிடலாம் என்பதினை கவனத்திற் கொள்ள வேண்டும்.

வீட்டு வன்முறைகள் பெற்றுத்தரும் விளைவுகள்
  • உடல் ரீதியானது
  1. உடலியல் காயம்
  2. எலும்பு முறிவு
  3. தழும்புகள்
  4. தலைவலி/ மூட்டு/ கைகால் வலி போன்ற மெய்ப்பாட்டு நோய்கள்
  • உளவியல் ரீதியானது
  1. மனச்சோர்வு
  2. தன்னம்பிக்கை/ஆளுமைத்திறன் குறைவடைதல்
  3. பயம், பதற்றம்
  4. விரக்தி
  5. தற்கொலை எண்ணங்கள்

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மாத்திரமின்றி குடும்ப அலகே பாதிக்கப்படுவதுடன் இத்தகைய குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளும் மேற்கூறிய உபாதைகளுக்கு உட்படலாம் மேலும் பிற்காலத்தில் வன் முறையாளராகவும் தோற்றம் பெற வாய்ப்புண்டு. மேலும் இதனால் குடும்ப அலகே பாதிக்கப்படுவதுடன் இத்தகைய குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளும் மேற்கூறிய உபாதைகளுக்கு உட்படலாம் மேலும் பிற்காலத்தில் வன் முறையாளராகவும் தோற்றம் பெற வாய்ப்புண்டு.

வீட்டு வன்முறையின் போது செய்ய வேண்டியது

இதனால் பாதிப்படைந்தோர் இது குறித்து பலர் சரியான முறையில் தெரிவிப்பதில்லை.இனி வரும் காலங்களில் இவ்வாறான சந்தர்ப்பத்தில்.

தன் வீட்டீல் இப்படி நடப்பதை நெருங்கிய ஒருவரிடம் தெரிவியுங்கள். (நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள்) குறிப்பாக முதன்மை மருத்துவரிடம் தெரிவிப்பதால் சமூக பணியாளர் அல்லது உளவளத்துணையாளர்களிடம் தகுந்த நேரத்தில் பரிந்துரைக்கப்படலாம்.

எவ்வாறு உதவலாம்

வன்முறைக்குட்பட்டவர்களின் உளநலம் கெடாத வண்ணம் உதவி செய்வது அவசியம்.

  • சிநேகிதமான ஆதரவான முறைகளை கையாளுங்கள்.
  • வன்முறைக்குட்பட்டவர்களின் பலம், பலவீனங்களை இனங் கண்டு அவைகளுக்கமைய உதவுதல்.
  • கவலைகளை, பயங்களை போக்க உதவுதல்
  • பெண்களை வலுவூட்டல்

வீட்டு வன்முறைகளானது ஓர் இனத்திற்கோ சமயத்திற்கோ உரியதல்ல மாறாக இது பொதுமைப்படுத்தப்பட்டது. இதனை சமூகத்திலிருந்து முற்றாக அகற்றுவது சவாலுக்குரியதே! இவ்வாறான வன்முறைகளின் வாயிலாக தனிநபர் மாத்திரமின்றி குடும்பம் சமூக கட்டமைப்புக்களில் சிக்கல்கள் ஏராளம்!! வன்முறைக்கு விடுமுறையளித்து மகிழ்ச்சிகர குடும்பத்தை இனிதே கட்டியெழுப்புவோம்.

AFRA MINSAR (BA)

ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியாக பலவாறான சவால்களையும் அச்சுறுத்தல்களையும் நோக்குவது வழமை. ஆனால் உலகளாவிய ரீதியில் ஒற்றுமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஒரே வகையான ஓர் அபாயத்தை எதிர் கொள்வது சர்வதேச ரீதியிலே குழப்பகரமானதாகும். அவ்வகையில் கொரொனா கிருமித்…

ஒவ்வொரு நாடுகளும் தேசிய ரீதியாக பலவாறான சவால்களையும் அச்சுறுத்தல்களையும் நோக்குவது வழமை. ஆனால் உலகளாவிய ரீதியில் ஒற்றுமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஒரே வகையான ஓர் அபாயத்தை எதிர் கொள்வது சர்வதேச ரீதியிலே குழப்பகரமானதாகும். அவ்வகையில் கொரொனா கிருமித்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *