பார்வை ஒன்றே போதும்

  • 10

பாரிலே எம்மை
பக்குவமாய்ப் படைத்து
பார்ப்போர் தன்
பார்வை குளிர்ந்திடச்
செய்த
என் றப்பே

உக்கிப்போய்
மக்கிவிடாது எம்
உண்டிகளுக்கு தினமும்
மணமாய்
உணவளிக்கும்
என் றப்பே

சிக்கலின்றிச்
சிரம்மின்றி
சிதறிடாமல் திணறிடாமல்
சிறப்பாய் சீராய்
சுவாசமளிக்கும்
என் ரஹ்மானே

துக்கமின்றித்
துயரமின்றி தினம்
தூயவழி வாழ்ந்திட
தூது கொண்டு வழிகள்
தூவி விட்ட
என் ரஹ்மானே

பார்த்து செய்த
பாராது செய்த
பாவங்கள்
அறிந்து செய்த
அறியாது செய்த
தவறுகள்
விரும்பிச் செய்த
விரும்பாது செய்த
பிழைகள்
கூடிச் செய்த
கூடாமல் செய்த
பாவக் கறைகள்
அத்தனையும் அப்படியே
அடியோடு அழகாய்
நொடிப் பொழுதில்
பொடியாக்கும்
என் தவ்வாபே

நின்னையொரு வரம் கேட்பேன்
நேரே அன்றெனக்கு
தருவாய் யா றப்

நிலவு போன்று
நின் முகம் தெரியும்
அந் நாளில்
நிலாக் காயும்
சிறு பிள்ளையாய்
சுவனமதில் தடைகளின்றி
நின் முகம் காண்
நிஜமொன்றே போதும்!
அந் நொடி ஒற்றை நொடியில்
நின்னை நோக்கிய
பார்வை ஒன்றே போதும்

ஷீபா இப்றாஹீம் (ஹுதாஇய்யாஹ்)
B.A (Hons) Ⓡ  SEUSL
Psychological Counsellor Ⓡ
Maruthamunai.

பாரிலே எம்மை பக்குவமாய்ப் படைத்து பார்ப்போர் தன் பார்வை குளிர்ந்திடச் செய்த என் றப்பே உக்கிப்போய் மக்கிவிடாது எம் உண்டிகளுக்கு தினமும் மணமாய் உணவளிக்கும் என் றப்பே சிக்கலின்றிச் சிரம்மின்றி சிதறிடாமல் திணறிடாமல் சிறப்பாய்…

பாரிலே எம்மை பக்குவமாய்ப் படைத்து பார்ப்போர் தன் பார்வை குளிர்ந்திடச் செய்த என் றப்பே உக்கிப்போய் மக்கிவிடாது எம் உண்டிகளுக்கு தினமும் மணமாய் உணவளிக்கும் என் றப்பே சிக்கலின்றிச் சிரம்மின்றி சிதறிடாமல் திணறிடாமல் சிறப்பாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *