இலங்கை முஸ்லிம்களின் அவலநிலை

  • 61

இன்று இலங்கையில் இருந்து உலகம் வரை முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து வருகின்றது. இதில் உலகில் நாலாபுறங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்க தாக்குதல் நடக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ளகத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது. இத் தாக்குதல்கள் நமக்கு சலுகை என்ற ரீதியில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் ஊடாக இடம்பெற்று வருகின்றது..

இலங்கையில்  சுமார் 830 முஸ்லிம் அரச பாடசாலைகள் 43 தேசிய பாடசாலைகள் 2500கும் மேற்பட்ட குர்ஆன் மத்ரஸாக்கள் உட்பட 3௦௦௦கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. என்றாலும் இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்ட 40 000முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கின்றனர். இதில் 2௦ ௦௦௦ மாணவர்கள் பௌதத்தை ஒரு பாடமாக எடுக்கின்றனர். இதில் சுமார் 5௦௦ மாணவர்களுக்கு வாராந்த ஜும்மா பிரசங்கதிற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் இவர்களால் பொதுவாக தமிழ் குத்பாக்களைக் கூட புரிந்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறானதோர் நிலைமை கொழும்பு, காலி, மாத்தறை போன்ற பிரதேசத்தில் அதிகளவு காணப்படுவதோடு, ஏனைய பிரதேசங்களிலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாணவர்கள் சிறு வயது முதல் சிங்கள பாடசாலைகளில் கற்பதால் சிங்கள கலாசாரம் இவர்களுக்கு மறைமுகமாக புகுத்தப்படுகிறது. சிலர் இதனால் இஸ்லாத்தை விட்டு வேறு மதங்களுக்கு மாறுகின்றனர். காலி மாவட்டத்தில் மாத்திரம் கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் சுமார் 20 முஸ்லிம் மாணவிகள் மதம்மாறியுள்ளதாக களத்தகவல்கள் உறுதிப்படுத்துகினறன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் நிலைமை இதனைவிட கவலைக்குரியதாகவே உள்ளது.

இவ்வாறு எமது மாணவ சமூகமொன்று இஸ்லாத்தை விட்டு கல்விக்காக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கான ஆரம்ப கட்ட தீர்வாக முஸ்லிம் தேசிய பாடசாலைகளில் சிங்கள மொழி மூலமும் கற்கைநெறிகளை ஆரம்பிக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக தொழில் செய்யும் இடங்களில் நிறுவன கலசாரம் என்ற பெயரில் மேற்கத்திய கலாசாரம் முஸ்லிம் பெண்களுக்கு திணிக்கப்படுகின்றது.

Ibnu Asad

இன்று இலங்கையில் இருந்து உலகம் வரை முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து வருகின்றது. இதில் உலகில் நாலாபுறங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்க தாக்குதல் நடக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ளகத் தாக்குதல் நடந்து…

இன்று இலங்கையில் இருந்து உலகம் வரை முஸ்லிம் சமூகம் பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து வருகின்றது. இதில் உலகில் நாலாபுறங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்க தாக்குதல் நடக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ளகத் தாக்குதல் நடந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *