மாறிப்போனன் உன் வருகை கண்டு

பிறை கண்டு நோற்ற நீயே
மெது மெதுவாய்
என்னைக் கடந்து செல்கின்றாய்

தூக்கம் கொண்டேன்
காலைச் சூரியன் என் நெற்றி சுட
மாறிப்போனேன்
இவை மறந்து போனேன்
ரமழானே உன் வருகை கண்டு

கூடும் குறையும் ஈமான்
நீ என்னோடு இருக்கையில்
கூடியது மட்டுமே

இருள் சூழ அடி வானில் அவன்
அடியாரைத் தேட
துள்ளி எழும்பி தஹஜத் தொழுதேன்

கண்ணீர்க் கடல் வற்றவில்லையே
அருளாளன் நினைவில் இருக்கயில்
தேம்பித் தேம்பி அழுதேன்
முன் செய்த அறிந்த
அறியா பாவக் கறை நீங்க

பரகத்தான ஸஹர் உணவு
முழுமையாய் பெற்றிட
மனமும் குளிர்ந்ததுவே
நிய்யதை வைத்திட

சுபஹும் நெருங்கிட
இங்கிதமாய் ரஹ்மானோடு
நெற்றி முத்தமிட்டு பேசுகையில்
மறந்து போனேன் என் இன்னல்களை

இரு கரம் ஏந்தி இறுதியாய்
கேட்டு முடித்தேன்
“இறைவா! என் ஈமான்
தடம் மாறாமல்
உன் வான் மணக்க
ஒரு மரணம் சுவர்க்கத்துகாய்
வேண்டுமென்று”

நிந்தவூர் றிசாமா
SEUSL

பிறை கண்டு நோற்ற நீயே மெது மெதுவாய் என்னைக் கடந்து செல்கின்றாய் தூக்கம் கொண்டேன் காலைச் சூரியன் என் நெற்றி சுட மாறிப்போனேன் இவை மறந்து போனேன் ரமழானே உன் வருகை கண்டு கூடும்…

பிறை கண்டு நோற்ற நீயே மெது மெதுவாய் என்னைக் கடந்து செல்கின்றாய் தூக்கம் கொண்டேன் காலைச் சூரியன் என் நெற்றி சுட மாறிப்போனேன் இவை மறந்து போனேன் ரமழானே உன் வருகை கண்டு கூடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *